Featured Posts
Home » இஸ்லாம் (page 146)

இஸ்லாம்

மௌலவிகளும் மரணச்சடங்குகளும்

அல்லாஹ்வின் மார்க்கமும் மௌலவிகளின் விளக்கமும் தொடர்.. மரணம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தும் சோக நிகழ்வாகும். அல்லாஹ்வைத் தவிர உலகிலுள்ள அனைவரும் ஒருநாள் மரணக்கவே செய்வர். மரணமில்லாத வாழ்க்கைக்குச் சொந்தக்காரன் அந்த அல்லாஹ் ஒருவனே. அவனுக்கே புகழ் அனைத்தும் சொந்தமானது. அல்ஹம்து லில்லாஹ். ஒரு மரணவீட்டிற்குச் செல்லும் நீங்கள் மௌலவிகள் கதாநாயகர்களாக இருப்பதை நிச்சயம் அவதானிப்பீர்கள். இதற்குக் காரணம் மௌலவி மார்க்க விபரம் தெரிந்தவர், நாம் அது பற்றி விபரமில்லாததவர் என்ற …

Read More »

65 (1). திருக்குர்ஆன் விளக்கவுரை

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4474 அபூ சயீத் பின் முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள. நான் அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே நான் (தொழுது முடித்தபின்) அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் அழைத்தபோது) நான் தொழுது கொண்டிருந்தேன் என்று சொன்னேன். அதற்கு அவர்கள் உங்களுக்கு வாழ்வளிக்கக் கூடியதன் பக்கம் இறைத்தூதர் உங்களை …

Read More »

அழிந்து போகும் கந்தூரிகளும் உயிர்ப்பிக்கத் துடிக்கும் மௌலவிகளும்

அல்லாஹ்வின் மார்க்கமும் மௌலவிகளின் விளக்கமும் தொடர்.. அல்லாஹ்வின் மார்க்கமாகிய புனித இஸ்லாத்தைக் கற்றவர்கள்தாம் ஸஹாபாக்கள், தாபியீன்கள், அவர்களின் வழித்தோன்றலில் வந்த இமாம்கள். இவர்கள் இஸ்லாத்தை சரியான அடிப்படையில் மக்கள் மன்றத்தில் முன்வைத்து அதற்காக பல இன்னல்களையும் அனுபவித்தார்கள். இவர்கள், ‘லாயிலாஹ’ இல்லல்லாஹ்’ என்ற சத்தியக்கலிமாவையும், அது வேண்டி நிற்கும் பொருளையும் சரிக்குச் சரியாக விளங்கி மக்களை அதன் பக்கம் அழைத்தவர்கள். அதற்காகவே தமது உயிர்களையும் நீத்தவர்கள்,

Read More »

தஃவாக் களத்தை துவம்சம் செய்யும் தாயிக்கள்

மனிதன் இவ்வுலகில் தோற்றுவிக்கப்பட்ட நோக்கத்தை மறந்து மிருகங்களுக்கும், கால் நடைகளுக்கும் ஒப்பான கலாச்சாரத்தை அரங்கேற்றுகின்றபோது, அகிலங்களின் இரட்சகானகிய அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகின்ற போது அவனை உண்மை மனிதனாக, இறை திருப்தியையும் அருளையும் பெற்றவனாக மாற்றுவதற்காக அல்லாஹ் தனது மனித தூதர்களை வானவத் தூதர்கள் மூலம் தெரிவு செய்து அழைப்புப் பணி செய்வதற்காக அவர்களை அனுப்பி வைக்கின்றான்.

Read More »

மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-4)

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (பகுதி 2, தொடர் 4)இந்த ஹதீஸை மறுப்பதற்காக வைக்கப்படும் வாதங்களின் போலித்தன்மையை தெளிவாக இத்தொடரில் விளக்கி வருகின்றோம். இந்த ஹதீஸ் நபிமார்கள், மலக்குகள் பற்றிய இஸ்லாமிய நம்பிக்கைக்கு முரணாக அமைந்துள்ளது என்ற அடிப்படையிலும் மறுக்கப்படுகின்றது. இது தொடர்பாக வைக்கப்படும் வாதங்களையும் அவற்றிற்கான விளக்கங்களையும் தொடர்ந்தும் நோக்குவோம்.

Read More »

ஸஃபர் மாதமும் முஸ்லிம்களும்

சத்திய மார்க்கமாகிய இஸ்லாத்தில், இஸ்லாமியர்களாக இருந்து கொண்டு மற்ற மதங்களில் காணப்படுகின்ற கலாச்சாரங்களை நம்முடைய முன்னோர்கள் அறியாமையினால் செய்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நம்முடைய முஸ்லிம்களும் செய்யக்கூடிய ஒருசில காரியங்கள் பிறமத கலாச்சாரங்களை ஒத்து இருப்பது மட்டுமின்றி அதற்கு வணக்கம் என்ற முத்திரையையும் பதித்து செய்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.

Read More »

போலி ஹதீஸ்களும், சமூகத்தில் அதன் தாக்கங்களும்

குர்ஆன், ஹதீஸ் என்ற அடிப்படையான இரண்டு மூலாதாரங்களின் மீதுதான் இஸ்லாம் எனும் கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது. குர்ஆனைப் பொறுத்தவரையில் அது அல்லாஹ்வின் ‘கலாம்’ பேச்சு என்பதால் அதில் யாரும் எந்தக் குளறுபடிகளும் செய்துவிட முடியாது. 1400 வருடங்களாக எத்தகைய இடைச்செருகல் களுக்கோ, கூட்டல் குறைத்தல்களுக்கோ உள்ளாகாமல் அட்சரம் பிசகாமல் அப்படியே அது பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆனால், இரண்டாவது மூலாதாரமான ஹதீஸைப் பொறுத்தவரை அதன் கருத்து வஹி மூலம் பெறப்பட்டதாயினும் வாசக அமைப்பு நபிகளாருடையதாகும். …

Read More »

உலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ்பிரயோகம்

உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் ஆபத்தான அம்சங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் பிரதானமானதாகும். விபரமுள்ள பெற்றோர்களின் நிம்மதியைக் கெடுக்கும் மிக முக்கிய பிரச்சினை தனது பிள்ளையை எப்படிப் பாதுகாப்பது? என்பதுதான். பெண் பிள்ளைகள் வளர, வளர வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்வது போல் தாய்மார்கள் அங்கலாய்க்கின்றனர். எனினும் சிறுமியர் அளவுக்கு இல்லையென்றாலும், சிறுவர்களும் துஷ்பிரயோகத்துக் குள்ளாவதை பெரும்பாலானவர்கள் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். ஆச்சரியம் என்னவென்றால், சில குடிகாரத் தந்தையரின் கோரப் பார்வையில் இருந்து

Read More »

கிறிஸ்தவம் அல்லது சிலுவைக் கோட்பாடு – ஓர் அலசல்!

கேள்வி: //குர்ரான் சொல்வதுபோல் இயேசு சிலுவையில் அறையப்படவில்லை அவருக்கு பதில் வேறொருவர் மாற்றப்பட்டார் என்றே வைத்துக்கொள்வோம். இந்த உண்மையை ஏன் இயேசு (அல்லது இறைவன்) சீடர்களுக்கு கூட தெரிவிக்கவில்லை? அவர் தெரிவிக்காமல் போனதால்தானே இந்த சீஷர்கள் எல்லோரும் தவறான கருத்துகொண்டு பிரச்சாரம் செய்து கிறிஸ்த்தவம் என்றொரு மதத்தை உருவாக்கி இன்று உலகில் முதல் பெரிய மதமாக நிற்கிறது. இங்கு கிறிஸ்த்தவம் உருவாக காரணம் யார்? இயேசுவின் சீடர்களா அல்லது இயேசுவை …

Read More »

மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-3)

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (பகுதி 2, தொடர் 3) மூஸா நபியும், மலக்குல் மவ்த்தும் சம்பந்தப்பட்ட ஹதீஸைப் பல்வேறுபட்ட வழிகெட்ட பிரிவினரும் ஆரம்ப காலத்தில் மறுத்து வந்துள்ளனர். இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகின்றது என்று கூறி மறுக்கப்படுவது தவறு என்பதை நாம் தெளிவுபடுத்தி வருகின்றோம்.

Read More »