Featured Posts
Home » 2005 » October

Monthly Archives: October 2005

சிருஷ்டிகளைக் கொண்டு ஆணையிடுதல்

ஒருவன் மற்றவனிடம் ‘சிருஷ்டிகளின் மீது சத்தியமாக என்று கூறி ஆணையிட்டால் இந்த சத்தியம் நிறைவேறாது. சிருஷ்டிகள் என்ற விஷயத்தில் நபிமார்கள், மலக்குகள் அனைத்து படைப்பினங்களும் ஒரே நிலைதான். அல்லாஹ்வுக்கு சில ஹக்குகள் (உரிமைகள்) இருக்கின்றன. அவற்றில் தம் படைப்புகளில் எவரும் பங்காளிகள் அல்ல. நபிமார்களுக்கும் சில ஹக்குகள் உண்டு. மூமின்களுக்கும் சில ஹக்குகள் உண்டு. மக்களில் சிலருக்கு மற்றவர்கள் மீது சில உரிமைகள், கடமைகள் இருக்கின்றன. அல்லாஹ்வுக்குரிய ஹக்கு என்னவென்றால் …

Read More »

அமானுடக் கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் – 7

கீழைத்தேய ஆய்வு (Science of Orientalism) என்பது பொதுவாகக் கீழைத்தேய நாடுகள், இனங்களின் மொழி, மதம், பண்பாடு, நாகரிகம், வரலாறு பற்றிய மேற்கத்திய ஆய்வாளர்களின் ஆராய்ச்சியைக் குறிக்கும். (பார்க்க: Encyclopedia Britannica). கீழைத்தேய ஆய்வு என்பது ஆரம்பத்தில் ஐரோப்பிய காலனித்துவவாதிகளின் ஆதரவிலும் அதனைத் தொடர்ந்து கீழைத்தேய உலகில் கிறிஸ்தவ மதப்பிரச்சாரத்தை மேற்கொண்ட கிறிஸ்தவ மதப்பிரச்சாரகர்களின் துணையாலும் வளர்ச்சியடைந்தது. கீழைத்தேயங்களைக் கைப்பற்றி ஐரோப்பிய அரசியல் ஆதிக்கத்தை அங்கு நிலைபெறச் செய்யவும், கீழைத்தேய …

Read More »

98] காஸாவில் ஹமாஸின் செல்வாக்கு

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 98 யாசர் அராஃபத்தின் மரணம், சர்வதேச அளவில் உருவாக்கிய கவன ஈர்ப்பு மற்றும் துக்கத்தைத் தாண்டி மூன்று முக்கிய விளைவுகளுக்குக் காரணமானது. முதலாவது, அராஃபத்துக்குப் பிறகு, பாலஸ்தீன் அத்தாரிடியின் தலைமைப் பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட்ட மம்மூத் அப்பாஸ், எப்பாடுபட்டாவது பாலஸ்தீனில் அமைதியைக் கொண்டுவந்தே தீரவேண்டிய கட்டாயத்துக்கு ஆட்பட்டது; இரண்டாவது, அராஃபத்தான் அமைதிக்கு வில்லனாக இருக்கிறார் என்று தொடர்ந்து பேசிவந்த இஸ்ரேல், இனி ஏதாவது …

Read More »

97] ஏரியல் ஷரோன் அஞ்சிய ஓரே மனிதர்

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 97 குறையில்லாத மனிதர்கள் இல்லை. ஓர் அரசியல்வாதியாக யாசர் அராஃபத்தின் சரிவுகளை, சறுக்கல்களைப் பார்க்கும் அதே சமயத்தில், ஒரு போராளியாக அவர் நின்று சாதித்தவை எதுவும் நினைவிலிருந்து தப்பவே தப்பாது. அராஃபத் என்றொரு மனிதர் பாலஸ்தீனில் தோன்றாமல் போயிருந்தால், இன்றைக்கு நாம் பேசுவதற்கு ‘பாலஸ்தீன்’ என்றொரு பொருள் இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான். கல்வி அறிவில் மிகவும் பின்தங்கிய பாலஸ்தீனியர்களை ஒன்றுதிரட்டி, அவர்களுக்குச் சுதந்திர …

Read More »

96] சுதந்திரத்துக்காகப் போராடிவரும் ஓர் இனம்

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 96 யுத்தம் ஒரு பக்கம் இருந்தாலும் ஆட்சி இன்னொரு பக்கம் இருந்துதானே ஆகவேண்டும்? இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு, எப்படி இஸ்ரேல் _ பாலஸ்தீன் பிரச்னை புதுப்பரிமாணம் பெற்று, ஓயாத யுத்தத்துக்கு வழிவகுத்ததோ, அதேபோல, பாலஸ்தீன் அத்தாரிடியின் ஆட்சி முறை குறித்தும் ஏராளமான விமர்சனங்கள் வரத்தொடங்கின. பூரண சுதந்திரம் என்கிற கோரிக்கையை முன்வைத்து, பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலுடன் போராடிக்கொண்டிருந்தாலும், கிடைத்த இடத்தில் (மேற்குக்கரை மற்றும் காஸா) …

Read More »

பண்டிகைகளும் நல்லிணக்கமும் -2

பொங்கல், ஓணம்,புத்தாண்டுப் பண்டிகைகளைச் சொல்லலாம். இதை மற்ற மதத்தவர்கள் கொண்டாடுகின்றனர். ஆனால் இஸ்லாமியர்கள் இவற்றைக் கொண்டாடததின் மூலம் எம்மதமும் சம்மதம் என்ற கொள்கைக்கு எதிரானவர்கள் என்ற தோற்றம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என தனித்தனியாக கொண்டாடுவதை விட தமிழர்களாகிய நாம் பொங்கல் போன்ற பண்டிகைகளைக் கொண்டாடி உலகின் மற்ற மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கலாமே? என்றநியாயமான கருத்து முன்வைக்கப்படுகிறது. ஒவ்வொரு கொள்கையும் ஒவ்வொரு கருத்தைச் சொல்கின்றன. அதனைப் …

Read More »

அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் உதவி தேடினார்களா?

அறிஞர் தபரானி தமது ‘முஃஜமுல் கபீர்’ என்ற நூலில் ‘ஒரு நயவஞ்சகன் மூமின்களுக்கு கெடுதிகள் செய்து கொண்டிருந்தான். இதைக் கண்ட அபூபக்கர் ஸித்தீக் (ரலி) மூமின்களை நோக்கி, வாருங்கள்! அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களை நோக்கிச் செல்வோம். இந்த நயவஞ்சகனின் தொல்லையிலிருந்து தப்பிக்க நபிகளைக் கொண்டு உதவித் தேடுவோம்’ என்றார்களாம். இதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘என்னைக் கொண்டு எப்படி உதவித் தேட முடியும். அல்லாஹ்வைக் கொண்டுதான் உதவி …

Read More »

பண்டிகைகளும் நல்லிணக்கமும் -1

பண்டிகைகள் – அந்தந்த மத நம்பிக்கையாளர்கள் தங்கள் கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக சந்தோசமாகக் கொண்டாடப் படுவதற்காக மதங்கள் ஏற்படுத்திய வழிமுறை. கிறிஸ்துமஸ்,புத்தாண்டு, புனிதவெள்ளி என கிறிஸ்தவர்களும் தீபாவளி,ஆயுத பூசை என இந்துக்களும் ரம்ஜான், பக்ரீத் என முஸ்லிம்களும் ஒவ்வொரு வருடத்திலும் சில நாட்கள் கொண்டாடுகின்றார்கள். இவையல்லாமல் பொங்கல்,ஓணம்,யுகாதி போன்ற சமூக/இன ரீதியான பண்டிகளும் கொண்டாடப் படுகின்றன. அனைத்து மத பண்டிகைகளின் நோக்கமும் மக்கள் சந்தோசமாகவும் நன்றியுடையவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதே. …

Read More »

அறிமுகம்

தமிழ் நெஞ்சங்களுக்கு, இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாவதாக! தமிழ்மணத்தின் மூலம் “நல்லடியார்” என அறியப்பட்ட நான் < > என்ற வலைப்பூவில் இஸ்லாம் மார்க்கம் பற்றியும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றியும் சில எழுதிய அவதூறுகளுக்கு விளக்கம் சொல்லும் கடமையில் எழுதி வந்தேன். எனது வலைப்பூ பதிவுகள் http://athusari.blogspot.com என்ற முகவரியில் செயல்பட்டு வந்த போழ்தும், தமிழ்மணம் நிர்வாகிகளின் புதிய விதிமுறைகள் மதம் …

Read More »