மவ்லவி முஹம்மத் நூஹ் சவூதி அரேபியா தலைநகர் ரியாத் மாநகரில் அமைந்து பழைய தொழிற்பேட்டை (old Sanayah_ இஸ்லாமிய அழைப்பகத்தில் அழைப்பளாராக பணியாற்றுகின்றார்கள். புதிய முயற்சியாக தினம் ஒரு சிறிய துஆ-வை அரபி மொழியில் மனனம் செய்வதோடு அதன் தமிழ் அர்த்ததையும் அறியும் பொருட்டு ஒலி வடிவில் தினம் ஒரு துஆ வீதம் வாரத்திற்க்கு 5 துஆக்கள் (அந்த வாரத்தில் வெளியானவைகளை மீட்டி மனனத்தினை உறுதிப்படுத்தி கொள்வதற்காக மீதம் உள்ள இரண்டு நாட்கள் துஆ வெளியிடுவதில்லை)
பெற்றோர்கள் மனனம் செய்வதோடு தமது பிள்ளைகளை சிறு வயதிலிருந்து இப்படியான சிறிய துஆக்களை மனனம் செய்ய பழகிகொள்ளலாம்
இஸ்லாம் கல்வி மீடியா யூனிட்
No.-001, தினம் ஒரு துஆ!!!
இன்று நாம் மனனம் செய்ய ஒரு சிறிய துஆ.
சாப்பிட்ட பின் ஓத வேண்டிய துஆ (2)
الحَمْدُ لِلَّهِ الَّذِي كَفَانَا وَأَرْوَانَا، غَيْرَ مَكْفِيٍّ وَلاَ مَكْفُورٍ
விளக்கத்துடன் கூடிய ஆடியோ கோப்பினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
தமிழில்:-
அல்ஹம்து லில்லாஹில்லதீ கபா[F]னா வ அர்வானா ஃகைர மக்பி[F]ய்யின் வலா மக்பூ[F]ரின்
பொருள் :-
எங்களுக்குப் போதுமான உணவு அளித்து, தாகம் தீர்க்க வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இப்புகழ் முடிவுறாது, மறுக்க முடியாதது.
ஆதாரம் :- புஹாரி :-5459
அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) அவர்கள் .
குறிப்பு:-
சாப்பிட்டு முடித்த பின் அல்லது தண்ணீர் அருந்திய பின் அல்ஹம்து லில்லாஹ் என்று மட்டும் கூறியதாகவும் ஒரு அறிவிப்பு வந்துள்ளது. ஆதாரம் : முஸ்லிம்.