No.0019 (01), தினம் ஒரு துஆ!!!
இன்று கண்டிப்பாக நாம் மனனம் செய்ய வேண்டிய ஒரு அற்புதமான சிறிய துஆ.
ஏதாவது ஒரு துன்பம் ஏற்படும் போது செய்யப்படும் பிரார்த்தனை.
நான் நபி(ஸல்) அவர்கள் கூறக்கேட்டிருக்கின்றேன்.
எந்த ஓர் அடியாருக்காவது ஒரு சோதனை ஏற்பட்டு, அவர்
إِنَّا لِلهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ، اَللَّهُمَّ اؤْجُرْنِيْ فِيْ مُصِيْبَتِيْ وَاخْـلُفْ لِيْ خَيْراً مِنْهَا
தமிழில்:
”இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், அல்லாஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபததீ வஅக்லலிஃப் லீ கைரன் மின்ஹா’
பொருள்: (நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள், நிச்சயமாக நாங்கள் அவன் பக்கமாகவே மீளுபவர்களாக உள்ளோம். யா அல்லாஹ்! என்னுடைய சோதனையில் எனக்கு நற்கூலியை தந்தருள்வாயாக! அதைவிடச் சிறந்ததை எனக்குப் பகரமாக்கித் தந்தருள்வாயாக!)
என்று கூறுவாரேயானால், அல்லாஹ் அவருக்கு அவரின் சோதனையின் விஷயத்தில் நற்கூலியை வழங்கி, மேலும் அதைவிடச் சிறந்ததை அவருக்குப் பகரமாக்கித் தருவதை தவிர வேறில்லை. என்றார்கள் (ஸஹீஹுல் முஸ்லிம்)