No.0014 (06), தினம் ஒரு துஆ!!!
இன்று கண்டிப்பாக நாம் மனனம் செய்ய வேண்டிய ஒரு சிறிய துஆ
நபி(ஸல்)அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறும் போது ஓதிய துஆ
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ، أو أضل، أَوْ أَزِلَّ، أو أزل أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ، أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ
தமிழில்:-
அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக அன் அளில்ல அவ் உளல்ல அவ் அZஜில்ல அவ் உZஜல்ல அவ் அள்லிம அவ் உள்லம அவ் அJஜ்ஹல அவ் உJஜ்ஹல அலைய்ய
பொருள்:-
யா அல்லாஹ்! நான் வழி தவறுதல் அல்லது பிறரால் வழி தவறச் செய்யப்படல், அல்லது பிசகிவிடுதல், அல்லது பிறரால் பிசகச் செய்யப்படல் அல்லது நான் பிறருக்கு அநீதமிழைத்து விடல் அல்லது பிறரால் அநீதமிழைக்கப்படல் அல்லது நான் அறிவீனாகிவிடல் அல்லது பிறரால் அறிவீனனாக ஆக்கப்படல் ஆகியவற்றிலிருந்து நான் உன்னிடம் காவல் தேடுகிறேன்.
ஆதாரம் :- இப்னுமாஜா