No.0007 (13), தினம் ஒரு துஆ:
இன்று நாம் மனனம் செய்ய ஒரு சிறிய துஆ.
தொழுகையின் ருகூவிலும்,சுஜூதிலும் அதிகம் கேட்கும் துஆ(1)
سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي
விளக்கத்துடன் கூடிய ஆடியோ கோப்பினை பதிவிறக்கம் செய்ய பின்வரும் லிங்க்-ல் கிளிக் செய்யவும்
http://www.mediafire.com/download/kpketrlf9rpggjw/Dua-0007_Noogh_rukku_sujud1.mp3
தமிழில்:-
‘ஸுப்ஹான கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக அல்லாஹும்மஃபிர்லி”
பொருள் :-
யாஅல்லாஹ்! எங்களின் இரட்சகனே! உனது புகழைக்கொண்டு உன்னை துதிக்கிறோம், யாஅல்லாஹ் ! எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக!
ஆதாரம் :- புகாரி -817
குறிப்பு:- புகாரி,முஸ்லிம் மற்றும் பல நூல்களில் இந்த ஹதீஸ் இடம்பெற்றுள்ளது.
எனினும் இந்த துஆவை நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூரத்துன் நஸ்ர் எனும் (110-வது ) அத்தியாயம் இறங்கிய பிறகு எல்லாத்தொழுகையிலும் ஓதிவந்தார்கள். பார்க்க புஹாரி -4967.