No.0008 (12), தினம் ஒரு துஆ!!!
இன்று நாம் மனனம் செய்ய ஒரு சிறிய துஆ.
மரணித்தவரின் குடும்பத்திற்காக ஆறுதல் கூறும் துஆ
إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى،
وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى،
فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ
விளக்கத்துடன் கூடிய ஆடியோ கோப்பினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
தமிழில்:-
இன்ன லில்லாஹி மாஅخகத வலஹூ மாஅஃதா வகுல்லு ஷைஇன் இந்தஹூ பிஅஜளிம் முஸம்மா, ஃபல் தஸ்பிர், வல்தஹ்தஸிப்
பொருள் :- நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!!
மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும்.
ஆதாரம் :- புகாரி -7377
குறிப்பு:- முஸ்லிம்، இப்னுமாஜா,அபூதாவூத், போன்ற பல நூல்களில் இந்த ஹதீஸ் இடம்பெற்றுள்ளது.
மேலும் நபிகளாரின் தங்கள் அன்பு புதல்வி ஜைனப் ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மகன் (நபிகளாரின் பேரன்) மரணிக்கும் தருவாயில் மகளுக்கு கூறிய ஆறுதல் வார்த்தை.