No.0011 (09), தினம் ஒரு துஆ
இன்று கண்டிப்பாக நாம் மனனம் செய்ய வேண்டிய ஒரு அற்புதமான சிறிய துஆ.
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட துஆ
اللَّهُمَّ اغْفِرْ لِي خَطِيئَتِي وَجَهْلِي، وَإِسْرَافِي فِي أَمْرِي، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي
اللَّهُمَّ اغْفِرْ لِي هَزْلِي وَجِدِّي وَخَطَايَايَ وَعَمْدِي، وَكُلُّ ذَلِكَ عِنْدِي
விளக்கத்துடன் கூடிய ஆடியோ கோப்பினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
தமிழில்:
அல்லாஹும்மக் ஃபிர்லீ கதீஅதீ வஜஹ்லீ வஇஸ்ராஃபீ ஃபீஅம்ரீ, வமாஅன்த அஃலமு பிஹீ மின்னீ,
அல்லாஹும்மக்ஃபிர்லீ ஹஜ்zலீ வஜித்தீ வخகதாயாய வஅம்தீ, வகுல்லு தாலிக இன்தீ.
பொருள்:
யாஅல்லாஹ்! எனது காரியத்தில் ஏற்பட்ட வறம்பு மீறுதல், அறியாமை, பாவம் மற்றும் நீ என்னிடமிருந்து எதனை மிக அறிந்திருப்பாயோ அந்த ஒன்றிலிருந்தும் எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக!
யாஅல்லாஹ்!! நான் விளையாட்டாகவும், வினையாகவும்,வேண்டுமென்றேனும் செய்த பாவங்களை எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக! இவை (பாவங்கள்) அனைத்துமே என்னிடம் உள்ளன.
(புகாரி-6399)