No.0012 (08), தினம் ஒரு துஆ!!!
இன்று கண்டிப்பாக நாம் மனனம் செய்ய வேண்டிய ஒரு அற்புதமான சிறிய துஆ.
தொழுகையின் கடைசி அத்தஹிய்யாத்தின் போது ஓதும் துஆ
اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا، وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، فَاغْفِرْ لِي مِنْ عِنْدِكَ مَغْفِرَةً إِنَّكَ أَنْتَ الغَفُورُ الرَّحِيمُ
விளக்கத்துடன் கூடிய ஆடியோ கோப்பினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
தமிழில்:
அல்லாஹும்ம இன்னீ ளலம்து நஃப்ஸீ ளுல்மன் கதீரன் , வலாயக்ஃபிரு த்துனூப இல்லா அன்த ஃபக்ஃபிர்லீ மின் இந்திக மக்ஃபிரதன் இன்னக அன்தல் கஃபூருர் ரஹீம்.
பொருள்: யாஅல்லாஹ்! எனக்கு நானே அதிகமாக அநீதியிழைத்துக் கொண்டேன். உன்னைத் தவிர பாவங்களை எவரும் மன்னிக்கமாட்டார். எனவே, எனக்கு உன் தரப்பிலிருந்து (பாவ) மன்னிப்பை வழங்குவாயாக. நீயே அதிகம் மன்னிப்பவனாகவும் கருணைபுரிபவனாகவும் இருக்கிறாய்!’ என்று கூறுங்கள் என்றார்கள் (ஸஹீஹுல் புகாரி-7388 )
குறிப்பு: புகாரி 834 & 6326 ஹதீஸ்களில் இப்படியும் வந்துள்ளது
فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ، وَارْحَمْنِي،إِنَّك
َ ……….ஃபக்ஃபிர்லீ மக்ஃபிரதம் மின் இந்திக வர்ஹம்னீ இன்னக……….