அல்லாமா ரபீbஃ பின் ஹாதீ அல்மத்ஹலீ (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“இஸ்லாமியக் கொள்கையாகிய ‘அகீதா’வையும், ‘தவ்ஹீத்’ எனும் ஏகத்துவத்தையும் (சரியாக விளங்கிச் செயல்படாமல்) நாம் பாழ்படுத்திவிட்டு, அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் விடயத்தில் நாம் வீழ்ந்து விட்டோமாக இருந்தால் (எம்மிடமிருக்கின்ற) ‘பிfக்ஹ்’ எனும் இஸ்லாமிய சட்டத்துறை அறிவுக்கோ, அல்லது வேறு துறைசார் அறிவுக்கோ அல்லாஹ் மீது ஆணையாக எந்தப் பெறுமதியும் இருக்க முடியாது!. வேறு அறிவு எதிலும் எவ்விதப் பயனும் இருக்கவும் முடியாது!. நாம் அல்குர்ஆனை மனனம் செய்து, ஹதீஸ்களை மனனமிட்டு, இஸ்லாமிய சட்டத்துறை நூல்களைப் பாடமாக்கியிருந்தாலும் இணைவைப்பின் இருள்களில் நாம் வீழ்ந்து கிடந்தோமாக இருந்தால் எமக்கு எந்தப் பெறுமதியுமே இல்லை. (தவ்ஹீத், மற்றும் அகீதா கல்வி அல்லாத வெறும்) இந்த ( ‘பிfக்ஹ்’) அறிவிலிருந்து (அல்லது வேறு துறை கல்வியிலிருந்து) நாம் பயன் பெறவும் முடியாது!
{ நூல்: ‘மர்ஹபbன் யா தாலிபbல் இல்ம்’, பக்கம்: 111 }
قال العلامة ربيع بن هادي المدخلي حفظه الله تعالى:-
[ والله لا قيمة للفقه ولا لغيره إذا ضيّعنا العقيدة وضيّعنا التوحيد ووقعنا في الشرك بالله، لا فائدة لأي علم أبدا. لو حفظنا القرآن وحفظنا الحديث وحفظنا كتب الفقه ونحن واقعون في ظلمات الشرك لا قيمة لنا، ولن نستفيد من هذا العلم! ]
{ مرحبا يا طالب العلم، ص – ١١١ }
அல்லாஹ் கூறுகிறான்: “நிச்சயமாக யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ அவனுக்கு அல்லாஹ் சுவர்க்கத்தைத் தடுத்து விடுவான். அவனது ஒதுங்குமிடம் நரகமே! அநியாயக்காரர்களுக்கு எந்த உதவியாளர்களும் இல்லை!”.(அல்குர்ஆன், 05:72)