மறுக்கப்படும் ஸஹீஹான ஹதீஸ்கள் – தொடர் 1
உரையில் பேசப்பட்ட ஹதீஸ்:-
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ أَنَّ الْحَكَمَ بْنَ نَافِعٍ حَدَّثَهُمْ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُمَارَةَ بْنِ خُزَيْمَةَ أَنَّ عَمَّهُ حَدَّثَهُ وَهُوَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْتَاعَ فَرَسًا مِنْ أَعْرَابِيٍّ فَاسْتَتْبَعَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَقْضِيَهُ ثَمَنَ فَرَسِهِ فَأَسْرَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَشْيَ وَأَبْطَأَ الْأَعْرَابِيُّ فَطَفِقَ رِجَالٌ يَعْتَرِضُونَ الْأَعْرَابِيَّ فَيُسَاوِمُونَهُ بِالْفَرَسِ وَلَا يَشْعُرُونَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْتَاعَهُ فَنَادَى الْأَعْرَابِيُّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنْ كُنْتَ مُبْتَاعًا هَذَا الْفَرَسِ وَإِلَّا بِعْتُهُ فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ سَمِعَ نِدَاءَ الْأَعْرَابِيِّ فَقَالَ أَوْ لَيْسَ قَدْ ابْتَعْتُهُ مِنْكَ فَقَالَ الْأَعْرَابِيُّ لَا وَاللَّهِ مَا بِعْتُكَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَلَى قَدْ ابْتَعْتُهُ مِنْكَ فَطَفِقَ الْأَعْرَابِيُّ يَقُولُ هَلُمَّ شَهِيدًا فَقَالَ خُزَيْمَةُ بْنُ ثَابِتٍ أَنَا أَشْهَدُ أَنَّكَ قَدْ بَايَعْتَهُ فَأَقْبَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى خُزَيْمَةَ فَقَالَ بِمَ تَشْهَدُ فَقَالَ بِتَصْدِيقِكَ يَا رَسُولَ اللَّهِ فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهَادَةَ خُزَيْمَةَ بِشَهَادَةِ رَجُلَيْنِ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு கிராமவாசியிடம் ஒரு குதிரையை விலைபேசி முடித்தார்கள். அந்தக் கிராமவாசி (அதற்கான கிரயத்தைப் பெறுவதற்காக) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின் தொடர்ந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரைந்து நடக்க, அந்தக் கிராமவாசி மெதுவாக நடந்து வந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விலைபேசி வாங்கியதை அறியாத சிலர் அந்தக் கிராமவாசியிடம் கூடுதல் விலைக்கு அந்தக் குதிரையைக் கேட்கலானார்கள். அப்போது கிராமவாசி நபிகள் நாயகத்தை உரத்த சப்த்த்தில் அழைத்து, “நீங்கள் இதை வாங்குவதாக இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நான் மற்றவருக்கு விற்று விடுவேன்” என்று கூறினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்றார்கள். “நான் தான் உன்னிடம் விலை பேசி வாங்கி விட்டேனே” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தக் கிராமவாசி “அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இதை உங்களுக்கு விற்கவில்லை” என்றார். “இல்லை நான் உன்னிடம் இதை விலைக்கு வாங்கி விட்டேன்” என்று நபியவர்கள் கூறினார்கள். அப்போது கிராமவாசி “இதற்கு சாட்சியைக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார். அப்போது குஸைமா என்ற நபித்தோழர் கிராமவாசியைப் பார்த்து “நீ நபிகள் நாயகத்திடம் விற்றாய் என்று சாட்சி கூறுகிறேன்” என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குஸைமாவிடம் “நீ எப்படி சாட்சி கூறினாய்?” என்று கேட்டார்கள். “உங்கள் மீது உள்ள நம்பிக்கையால் சாட்சி கூறினேன்” என்றார். அப்போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அவரது சாட்சியத்தை இருவரின் சாட்சியத்துக்கு சமமாக ஆக்கினார்கள். நூல் : அபூதாவூத் 3130, அஹ்மத் 20878.
Keep Yourselves updated:
Subscribe our islamkalvi YouTube Channel to get regular update:
இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: