எம்.ஏ.ஹபீழ் ஸலபி
உலக வரலாற்றில் சிறுபான்மை சூழலில் முன்வைக்கப்பட்ட ஏகத்துவக் கொள்கை பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில்தான் வளர்ந்துள்ளது. அல்குர்ஆனிய வரலாற்றுத் தத்துவம் சிறுபான்மை சூழலில் இஸ்லாத்தின் பரம்பல் இடம்பெற்ற பாங்கை விபரிக்கும் போது. நபிமார்களின் வரலாற்றை சிலாகித்துச் சொல்கிறது. அதேபோல். கொடுங்கோலாட்சி நிகழும் காலகட்டத்தில் சிறுபான்மை சமூகமாக இருந்துகொண்டு ஏகத்துவப் பிரசாரம் செய்த சில நல்ல மனிதர்களின் வரலாற்றையும் சிலாகித்துப் பேசுகிறது. அத்தகைய வரலாறுகள் சிறுபான்மை சூழலில் வாழும் முஸ்லிம்களுக்கு சிறந்த முன்மாதிரியை வழங்குகிறது
குகைவாசிகள்
வரலாற்றில் கொள்கை பேசியவர்கள் பலர் பெரும்பான்மை அசத்தியக் கும்பல்களால் அழிக்கப்பட்டிருக்கிறார்கள். எனினும். அவர்கள் விட்டுச் சென்ற ஏகத்துவக் கொள்கைத் தடையங்கள் அழிவடைவதில்லை என்ற வரலாற்றுப் பேருண்மையை அல்குர்ஆன் அழகாக சித்தரிக்கிறது.
اَمۡ حَسِبۡتَ اَنَّ اَصۡحٰبَ الۡـكَهۡفِ وَالرَّقِيۡمِۙ كَانُوۡا مِنۡ اٰيٰتِنَا عَجَبًا ﴿۹﴾
18:9. ‘அந்தக் குகைக்கும் அந்த ஏட்டுக்கும் உரியோர் நமது சான்றுகளில் ஆச்சரியமானவர்கள்’ என்று நீர் நினைக்கிறீரா?
اِذۡ اَوَى الۡفِتۡيَةُ اِلَى الۡـكَهۡفِ فَقَالُوۡا رَبَّنَاۤ اٰتِنَا مِنۡ لَّدُنۡكَ رَحۡمَةً وَّهَيِّئۡ لَـنَا مِنۡ اَمۡرِنَا رَشَدًا ﴿۱۰﴾
18:10. சில இளைஞர்கள் குகையில் ஒதுங்கிய போது ‘எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக!’ என்றனர்.
فَضَرَبۡنَا عَلٰٓى اٰذَانِهِمۡ فِى الۡـكَهۡفِ سِنِيۡنَ عَدَدًا ﴿۱۱﴾
18:11. எனவே அக்குகையில் பல வருடங்கள் அவர்களை உறங்கச் செய்தோம்.
ثُمَّ بَعَثۡنٰهُمۡ لِنَعۡلَمَ اَىُّ الۡحِزۡبَيۡنِ اَحۡصٰى لِمَا لَبِثُوۡۤا اَمَدًا ﴿۱۲﴾
18:12. அவர்கள் தங்கிய காலத்தை இரு சாராரில் நன்கறிந்தவர் யார் என்பதை அறிவிப்பதற்காகப் பின்னர் அவர்களை எழுப்பினோம்.
نَحۡنُ نَقُصُّ عَلَيۡكَ نَبَاَهُمۡ بِالۡحَـقِّؕ اِنَّهُمۡ فِتۡيَةٌ اٰمَنُوۡا بِرَبِّهِمۡ وَزِدۡنٰهُمۡ هُدًى ﴿۱۳﴾
18:13. அவர்களது உண்மை வரலாறை நாம் உமக்குக் கூறுகிறோம். அவர்கள் இளைஞர்கள். அவர்கள் தமது இறைவனை நம்பினார்கள். அவர்களுக்கு நேர்வழியை அதிகமாக்கினோம்.
وَّرَبَطۡنَا عَلٰى قُلُوۡبِهِمۡ اِذۡ قَامُوۡا فَقَالُوۡا رَبُّنَا رَبُّ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ لَنۡ نَّدۡعُوَا۫ مِنۡ دُوۡنِهٖۤ اِلٰهًـا لَّـقَدۡ قُلۡنَاۤ اِذًا شَطَطًا ﴿۱۴﴾
18:14. அவர்கள் எழுந்து ‘நமது இறைவன் வானங்களுக்கும்இ பூமிக்கும் இறைவனாவான். அவனன்றி வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டோம். (அவ்வாறு செய்தால்) வரம்பு மீறிய வார்த்தையைக் கூறியவர்களாவோம்’ என்று அவர்கள் கூறிய போது அவர்களது உள்ளங்களை உறுதிப்படுத்தினோம்.
هٰٓؤُلَاۤءِ قَوۡمُنَا اتَّخَذُوۡا مِنۡ دُوۡنِهٖۤ اٰلِهَةً ؕ لَوۡ لَا يَاۡتُوۡنَ عَلَيۡهِمۡ بِسُلۡطٰنٍۢ بَيِّنٍ ؕ فَمَنۡ اَظۡلَمُ مِمَّنِ افۡتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا ؕ ﴿۱۵﴾
18:15. இதோ எங்கள் சமுதாயத்தினர் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டனர். அவற்றைப் பற்றி அவர்கள் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டாமா? அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட மிகப் பெரும் அநீதி இழைத்தவன் யார்?
وَاِذِ اعۡتَزَلۡـتُمُوۡهُمۡ وَمَا يَعۡبُدُوۡنَ اِلَّا اللّٰهَ فَاۡوٗۤا اِلَى الۡـكَهۡفِ يَنۡشُرۡ لَـكُمۡ رَبُّكُمۡ مِّنۡ رَّحۡمَتِهٖ وَيُهَيِّئۡ لَـكُمۡ مِّنۡ اَمۡرِكُمۡ مِّرۡفَقًا ﴿۱۶﴾
18:16. அவர்களையும்இ அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்குபவற்றையும் விட்டு விலகி அந்தக் குகையில் ஒதுங்குங்கள்! உங்கள் இறைவன் தனது அருளை உங்களுக்குத் தாராளமாக அளிப்பான். உங்கள் பணியை எளிதாக்குவான் (எனவும் கூறினர்).
கொள்கை சார்ந்த ஒரு சிறுபான்மை சமூகம் அழிக்கப்பட்டாலும் அதன் கொள்கைத் தடயங்கள் வரலாற்றில் அழிவதில்லை என்பதற்கு குகைவாசிகள் பற்றிய வரலாறு பெரிய ஆதாரமாக அமைகிறது.
‘அந்தக் குகைக்கும் அந்த ஏட்டுக்கும் உரியோர் நமது சான்றுகளில் ஆச்சரியமானவர்கள்’ என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இந்தவகையில் குகைவாசிகள் தொடர்பாக அந்த ஏடு என்று ஓர் ஏடு பற்றி அல்குர்ஆன் பேசுகிறது. இது தொடர்பாக ஓர் ஆவணப்பட்ததை BBC வெளியிட்டு, இது அல்குர்ஆனையும் இஸ்லாத்தையும் உண்மைப்படுத்துகிறது என்று பகிரங்கமாக அறிவித்தது.
1990 களில் அமெரிக்க நூலகம் ஒன்றின் தலைவரான ஐஸ்மேன் குகைவாசிகள் பற்றிய சாசனச் சுருள்களைப் படித்துவிட்டு, சிகாகோ பல்கலைக்கழகப் பேராசியரியர் மைகேல் வைஸ் என்வர் மூலம் ஆங்கிலத்தில் அவற்றில் சிலதை மொழிமாற்றம் செய்து வெளியிட்டார். அவை அல்குர்ஆனில் குகைவாசிகள் பற்றிப் பேசப்பட்டுள்ள உண்மை வரலாற்றை ஒத்தாக இருப்பதால் கிறிஸ்தவ உலகை உலுக்கி, திருச்சபையை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பெரும்பான்மையாக வாழ்ந்த அன்றைய சமூகம், ஏகன் அல்லாஹ்வை விடுத்து வேறு பல தெய்வங்களை ஏற்படுத்தி இருந்த போது, அந்த சிறுபான்மை சூழலில் வாழ்ந்த சில ஈமானிய உள்ளம் கொண்ட இளைஞர்கள் தமது சத்தியக் கொள்கையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக குகை ஒன்றில் ஒதுங்கியதை அல்குர்அன் ஓர் ஆவணமாக வழங்குகிறது.
அவர்கள் அல்லாஹ்வின் அருளை மட்டும் எதிர்பார்த்து. அவனிடம் மட்டும் பிரார்த்தித்துள்ளனர். அதனால், அவர்களை அற்புதமான முறையில் அக்குகையிலேயே உறங்க வைத்து. பின்னர் எழுப்பச் செய்துள்ளான். அந்த உண்மை வரலாற்றில் இன்றைய சிறுபான்மையாக வாழும் அனைவருக்கும் மிகுந்த படிப்பினையும் பாடமும் உண்டு என்று தெளிவாக விளக்கப்படுகிறது.
இணைவைப்புக் கோட்பாட்டில் திழைத்திருந்த பெரும்பான்மைக்கு மத்தியில் சிறுபான்மையாக இருந்த அந்த வீராண்மைமிக்க இளைஞர்கள் தாம் நம்பிய அல்லாஹ்வை அவனது வல்லமையை தற்துணிவோடு அன்றைய கொடுங்கோல் மன்னனிடம் அறிமுகப்படுத்திய விதம் ஆச்சரியமானது. எங்கள் இரட்சகன் வானம் பூமியைப் படைத்த மகா வல்லமை பொருந்தியவன். அவனன்றி வேறு கடவுள்களைப் பிரர்த்திக்க மாட்டோம்.அவ்வாறு செய்தால் அது அநியாயம் வரம்பு மீறல் என்று தெளிவான வாசகங்கலால் சொல்லியுள்ளனர். அதனால், படைத்துப் பாதுகாக்கும் அகில உலக இரட்சகன் அல்லாஹ் அவர்களது நேர்வழியை அதிமாக்கி, உள்ளங்களையும் உறுதிப்படுத்தியுள்ளான். இந்த வரலாறு சிறுபான்மை என்ற கருத்தியல் மாயையால் ஜீவ மரணப் போராட்டத்தை எதிர் கொண்டுள்ளவர்களின் மயக்க நிலைகளுக்கு அப்பால் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமிடையிலான போராட்டத்தில் சத்தியமே வெல்லும் என்ற வரலாற்று உண்மையை மிகத் தெளிவாக உணர்த்துகிறது.
சத்தியத்தைப் பேசும் நிராயுதபாணிகளைக் கண்டு அசத்தியத்தின் கூடாரம் ஆட்டம் காணுவதுண்டு. அத்தகையை அசத்தியத்தின் கூடாரம் எத்தகைய நிலையை மேற்கொள்ளும் என்பதையும் அல்குர்ஆன் குறிப்பிடுகிறது.
இறை நிராகரிப்புக் கோட்பாட்டின் கோர முகம்
இறை நிராகரிப்புக் கோட்பாட்டின் கோர முகத்தின் தன்மை எவ்வாறான வடிவங்கில் இருக்கும் என்பதை அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. பின்வரும் அல்குர்ஆனிய வசனம் முஸ்லிமுக்கு நன்மை கிடைப்பதை இறை மறுப்பு – இணைவைப்பு முகாம்கள் விரும்பவதில்லை என்பதைக் குறிப்பிடுகிறது.
நன்மை விழைவதை விரம்பமாட்டார்கள்
مَا يَوَدُّ الَّذِيۡنَ كَفَرُوۡا مِنۡ اَهۡلِ الۡكِتٰبِ وَلَا الۡمُشۡرِكِيۡنَ اَنۡ يُّنَزَّلَ عَلَيۡڪُمۡ مِّنۡ خَيۡرٍ مِّنۡ رَّبِّکُمۡؕ وَاللّٰهُ يَخۡتَصُّ بِرَحۡمَتِهٖ مَنۡ يَّشَآءُ ؕ وَاللّٰهُ ذُو الۡفَضۡلِ الۡعَظِيۡمِ ﴿۱۰۵﴾
2:105. (ஏக இறைவனை) மறுக்கும் வேதம் கொடுக்கப்பட்டோரும் இணை கற்பித்தோரும் உங்கள் இறைவனிடமிருந்து ஏதேனும் நன்மை உங்களுக்கு அருளப்படுவதை விரும்ப மாட்டார்கள். நாடியோருக்கு மட்டும் தனது அருளை அல்லாஹ் வழங்குவான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
எத்தகைய இன்னல்கள் எதிர்ப்பட்ட போதும் ஏகத்துவத்தில் சமரசம் செய்யாத ஈமானிய இதயங்களுக்கு அல்லாஹ்வின் அருளும் கிருபையும் என்றும் உண்டு.
மதமாற்ற முயற்சி செய்வார்கள்
{يَسْأَلُونَكَ عَنِ الشَّهْرِ الْحَرَامِ قِتَالٍ فِيهِ قُلْ قِتَالٌ فِيهِ كَبِيرٌ وَصَدٌّ عَنْ سَبِيلِ اللَّهِ وَكُفْرٌ بِهِ وَالْمَسْجِدِ الْحَرَامِ وَإِخْرَاجُ أَهْلِهِ مِنْهُ أَكْبَرُ عِنْدَ اللَّهِ وَالْفِتْنَةُ أَكْبَرُ مِنَ الْقَتْلِ وَلَا يَزَالُونَ يُقَاتِلُونَكُمْ حَتَّى يَرُدُّوكُمْ عَنْ دِينِكُمْ إِنِ اسْتَطَاعُوا وَمَنْ يَرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ (217) إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ أُولَئِكَ يَرْجُونَ رَحْمَتَ اللَّهِ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ (218)} [البقرة: 217، 218]
2:217. புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். ‘அதில் போரிடுவது பெருங்குற்றமே. அல்லாஹ்வின் பாதையை விட்டும்இ மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் (மற்றவர்களைத்) தடுப்பதும்இ அவனை ஏற்க மறுப்பதும்இ அதற்கு (மஸ்ஜிதுல் ஹராமுக்கு) உரியோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடம் இதைவிடப் பெரியது. கொலையை விட கலகம் மிகப் பெரியது’ எனக் கூறுவீராக! அவர்களுக்கு இயலுமானால் உங்கள் மார்க்கத்தை விட்டும் உங்களை மாற்றும் வரை உங்களுடன் போரிட்டுக் கொண்டே இருப்பார்கள். உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
وَلَنۡ تَرۡضٰى عَنۡكَ الۡيَهُوۡدُ وَلَا النَّصٰرٰى حَتّٰى تَتَّبِعَ مِلَّتَهُمۡؕ قُلۡ اِنَّ هُدَى اللّٰهِ هُوَ الۡهُدٰىؕ وَلَٮِٕنِ اتَّبَعۡتَ اَهۡوَآءَهُمۡ بَعۡدَ الَّذِىۡ جَآءَكَ مِنَ الۡعِلۡمِۙ مَالَـكَ مِنَ اللّٰهِ مِنۡ وَّلِىٍّ وَّلَا نَصِيۡرٍؔ ﴿۱۲۰﴾
2:120. யூதர்களும். கிறித்தவர்களும் அவர்களின் மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை உம்மை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். ‘அல்லாஹ்வின் வழியே (சரியான) வழியாகும்’ எனக் கூறுவீராக! உமக்கு விளக்கம் வந்த பின் அவர்களின் மனோ இச்சைகளை நீர் பின்பற்றினால்இ அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுபவனோஇ உதவுபவனோ உமக்கு இல்லை.
கடுமை காட்டுவர்
பொதுவாக உலகம் முழுதும் இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வை விதைக்கின்ற பல்வேறு நடவடிக்கைகளை நேரடியாகவும் திரைமறைவிலும் குப்ரின் மதங்கள் மேற்கொண்டுவருகின்றன. இந்த நடிவடிக்கைகள் அந்நிய மக்களிடம் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் பற்றிய தப்பெண்ணங்களை பெருமளவு வளர்த்துள்ளது. குறிப்பாக சிறுபான்மை சூழலில் வாழும் முஸ்லிம்கள் மீது வன்முறைகளாக அவை பிரயோகிக்கப்படுகின்றன. மீடியா பலத்தைக் கொண்டு யூதர்கள். முஸ்லிம்களை தவறாக சித்திரிப்பதில் மன்னணி வகிக்கினறனர்.
لَـتَجِدَنَّ اَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِّـلَّذِيۡنَ اٰمَنُوا الۡيَهُوۡدَ وَالَّذِيۡنَ اَشۡرَكُوۡا ۚ وَلَـتَجِدَنَّ اَ قۡرَبَهُمۡ مَّوَدَّةً لِّـلَّذِيۡنَ اٰمَنُوا الَّذِيۡنَ قَالُوۡۤا اِنَّا نَصٰرٰى ؕ ذٰلِكَ بِاَنَّ مِنۡهُمۡ قِسِّيۡسِيۡنَ وَرُهۡبَانًا وَّاَنَّهُمۡ لَا يَسۡتَكۡبِرُوۡنَ ﴿۸۲﴾
5:82. நம்பிக்கை கொண்டோருக்கு மனிதர்களிலேயே கடுமையான பகைவர்களாக யூதர்களையும்இ இணை கற்பிப்போரையும் (முஹம்மதே!) நீர் காண்பீர்! ‘நாங்கள் கிறித்தவர்கள்’ எனக் கூறியோர் நம்பிக்கை கொண்டோருக்கு மிக நெருக்கமான நேசமுடையோராக இருப்பதையும் நீர் காண்பீர்!அவர்களில் பாதிரிகளும்இ துறவிகளும் இருப்பதும்இ அவர்கள் ஆணவம் கொள்ளாது இருப்பதுமே இதற்குக் காரணம்.
இறை நிராகரிப்பு, இணைவைப்புக் கோட்பாடுகளில் திழைத்துள்ள இறுகிய மனங்கொண்ட பெரும்பான்மை என்ற மமதை கொண்டோர் அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு சிறுபான்மை முஸ்லிம்களை பல நாடுகளில் வற்புறுத்துகின்றனர். ஏற்காத போது துன்புறுத்துகின்றனர். அதேவேளை, சில மாற்றுமதத்தவர்கள் முஸ்லிம்களுடன் நெருக்கமாக நடந்து கொள்ளவும் செய்கின்றனர். இத்தகைய இரண்டு நிலைகளை உலகில் பல நாடுகளில் சிறுபான்மையாக வாழ்கின்ற முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்றனர்.
இன்னும் வளரும்- இன்ஷா அல்லாஹ்