“(நபியே!) நம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளும் படியும் தங்களுடைய வெட்கத்தலத்தைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும். இதுவே அவர்களுக்கு மிகத் தூய்மையானதாகும். அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாக அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இருக்கிறான்” (24:30) கண்கள் செய்யும் விபச்சாரம் (விலக்கப்பட்டவைகளைப்) பார்ப்பதாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி)
மார்க்கம் அனுமதிக்கின்ற ஒரு அவசியத் தேவைக்காகப் பார்ப்பது விதிவிலக்காகும். உதாரணமாக ஒருவன் தான் மணமுடிக்க விரும்பும் பெண்ணைப் பார்ப்பது, மருத்துவர் நோயாளையைப் பார்ப்பது போல. இவ்வாறே ஒரு பெண் அந்நிய ஆணை தவறான நோக்குடன் பார்ப்பதும் ஹராமாகும். அல்லாஹ் கூறுகிறான்: “மேலும் (நபியே!) நம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தம் பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும். தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாக்கட்டும்” (24:31)
அதுபோல தாடி, மீசை முளைக்காத இளைஞனையும் அழகான வாலிபனையும் இச்சையுடன் பார்ப்பதும் விலக்கப்பட்டதாகும். ஒரு ஆண் இன்னொரு ஆணின் மர்மஸ்தானத்தையும், ஒரு பெண் இன்னொரு பெண்ணின் மர்மஸ்தானத்தையும் பார்ப்பது ஹராமாகும். எந்த எந்த மர்ம உறுப்பைப் பார்ப்பது கூடாதே அதைத் தொடுவதும் கூடாது. துணிக்கு மேல் தொட்டாலும் சரியே.
சில செய்திதாள்களில், பத்திரிக்கைகளில், சினிமாக்களில் வரக்கூடிய (ஆபாசமான) படங்களை, அவை நிஜமல்லவே, வெறும் படங்கள் தானே எனும் அடிப்படையில் பார்ப்பது ஷைத்தானின் திருவிளையாடல் ஆகும். இவற்றில் தீமைகளும் காம உணர்வு தூண்டப்படுவதும் தான் இருக்கின்றன என்பது வெள்ளிடைமலை.
அந்நிய பெண்ணே பார்த்தவுடன் ஓதும் துஆ