Featured Posts

அந்நிய ஆணுடன் பெண் தனியே பயணித்தல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மண முடிப்பதற்கு விலக்கப்பட்ட ஆண் துணையுடன் அல்லாது ஒரு பெண் பயணம் செய்ய வேண்டாம்’ அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்:புகாரி, முஸ்லிம். இத்தடை ஹஜ் எனும் புனிதப் பயணம் உட்பட எல்லாப் பயணங்களையும் உள்ளடக்கும். மணமுடிப்பதற்கு ஆகுமான – அந்நிய ஆணுடன் அவள் பயணம் செல்வது தீய மனிதர்களை அவளுடன் சில்மிஷங்கள் செய்யத் தூண்டும். பலவீனமான அவள் சில போது அதற்கு ஆட்பட வேண்டியது வரும். அல்லது குறைந்த பட்சம் அவளுடைய மானம் மரியாதைக்குக் களங்கமாவது ஏற்பட்டு விடும்.

இது போன்றே அந்நிய ஆணுடன் ஒரு பெண் விமானத்தில் பயணமாவதும் ஹராமாகும். கணவனோ, சகோதரனோ வழி அனுப்பி வைக்கத்தானே செய்கிறார். கணவனோ, சகோதரனோ வரவேற்க வருகிறார் தானே என்று மக்கள் நினைக்கலாம். அப்போதும் அது கூடாததே! ஏனெனில் அவளுக்கு அடுத்த சீட்டில் அவளுடன் பயணம் செய்பவர் யார்? (அந்நியன் தானே!) விமானத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு வேறொரு விமான நிலையத்தில் விமானம் தரை இறக்கப்பட்டாலோ, விமானம் புறப்பட தாமதமாகி விட்டாலோ, புறப்படு நாள் மாறி விட்டாலோ நிலைமை என்னாவது? இது போன்ற சம்பவங்கள் ஏராளம் நடந்திருக்கின்றன.

மஹ்ரமான துணைக்கு நான்கு நிபந்தனைகள் உள்ளன. அவன் முஸ்லிமாக, பருவமடைந்தவனாக, புத்தி சீர் நிலையிலுள்ளவனாக, ஆணாக இருக்க வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியது போல. ‘அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பக்கூடிய எந்தப் பெண்ணுக்கும் மூன்று அல்லது மூன்றுக்கு மேற்பட்ட நாட்கள் பயணமாவது ஹலால் இல்லை. அவளுடன் அவளுடைய தந்தையோ, மகனோ, கணவனோ, சகோதரனோ அல்லது அவள் மணமுடிப்பதற்கு விலக்கப்பட்ட (மஹ்ரமான) ஆண் துணை இருந்தாலே தவிர!’ அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி), நூல்: முஸ்லிம்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

One comment

  1. ஸலாம்.
    3 நாள் பயண தூரம் அல்லது அதைவிட அதிக தூரத்திற்கு நபி (ஸல்) தடை செய்துளளார்கள் என்கின்ற போது அதை விட குறைவான தூர பிரயானத்திற்கு தடை செய்ய எவ்வாறு முடியும். அதல்லாமல் விமான பயணத்தில் நாம் நீங்கள் கூறும் கருததுக்களை ஏற்றுக் கொள்ளளாலாம் என்றாலும் விசா நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் அல்லாஹ் எந்த ஆத்மாவையும் அதன் சக்தி்க்கு மீறி சோதிக்கமாட்டான் என்ற அடிப்படையில் மஹ்ரமான ஆண் துணை இல்லாவிட்டாலும் ௨4 மணி நேர விமான பயணம் செய்வது தவறில்லை. அல்லாஹ் நம் சூழ் நிலைகளை முற்றிலும் அறிந்தவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *