Featured Posts

RSS ஏன் இஸ்லாத்தைக் கண்டு அலறுகிறது?

மா.சிவகுமாரின் ஆர்எஸ்எஸ் என்ற அபாயம் – முடிவுரை (இப்போதைக்கு) பதிவில் நேசகுமார் சொன்னக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக என் பின்னூட்டம்.

இஸ்லாத்தின் மீதான நேசகுமாரின் எல்லாக் கேள்விகளுக்கும் அப்துல்லாஹ், அபூமுஹை உட்பட நானும் போதுமான விளக்கங்கள் கொடுத்திருக்கிறேன். அவ்வாறு விளக்கம் கொடுக்கப்பட்ட போதெல்லாம் வைக்கப்படும் துணைக் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் வேலைப்பளு, கொலை மிரட்டல் என பின்வாங்குவது அல்லது பாகிஸ்தானில் நடக்க வில்லையா? சவூதியில் நடக்க வில்லையா? ஏன் நம் நாட்டில் கூட நடக்கவில்லையா? என்று துணைக் கேள்விகளை நியாயப்படுத்தி விவாதத்தை திசை திருப்புவது அல்லது அவ்வாறு கேள்வி கேட்டவரை பொய்யர், தீவிரவாதி, அடிப்படைவாதி என்று புறம் தள்ளுவது.

இதுதான் நேசகுமாருடன் கடந்த இரண்டரை அவருடன் வருடங்களாக வாதிட்டு அல்லது ஜல்லியடித்து (எதிர்வாதங்களை இப்படித்தான் அன்பாகக் குறிப்பிடுவார் :-) வருபவர்களின் அனுபவம்.

“அனைத்தையும் படைத்து பரிபாலிப்பவனே கடவுள். அவனே எல்லா சக்தியுமுள்ளவன்” என்று ஒரு போதகர் சொன்னபோது, “தன்னால் தூக்க முடியாத ஒரு கல்லை கடவுளால் படைக்க முடியுமா?” என்று ஒருவர் கேட்டாராம். படைக்க முடியும் என்றால் கடவுளால் அந்தக் கல்லை தூக்க முடியாது. படைக்க முடியாது என்றால் “ஒரு கல்லைப் படைக்க முடியாதவன் எப்படி எல்லா சக்தியுமுள்ள கடவுளாக இருக்க முடியும்?” குதர்க்கவாதம் செய்வதே இத்தகையவர்களின் நோக்கம்.

RSS இன் பயங்கரவாதத்தினைச் சொன்னால் அதேபோன்று குர்ஆனிலும் சொல்லப் பட்டிருக்கிறது?!? RSS அரசியல் ஆதாயத்திற்காகச் செய்வதை முஸ்லிம்கள் சுவர்க்கலோகக் கன்னியர் (அவரின் போலிகள் பாசையில் சொல்வதென்றால் பெ.மு.கன்னியர்) கிடைப்பர் என்ற ஆசை வார்த்தைகளுக்காக அவ்வாறு செய்கின்றனர் என்று மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது.

இதைத்தான் குர்ஆன் மாற்ற முடியாத தெய்வீகத் தன்மையுடையதா (Eternal) அல்லது சூழலுக்கேற்ப மாற்றிக் கொள்வதா (Contextual) என்று மேதாவித் தனமாகக் கேட்டிருக்கிறார். குர்ஆன் Eternal என்றால் ஏன் முஹம்மது நபியின் அந்தரங்கங்கள் சொல்லப் பட்டிருக்கிறன? Contextual என்றால் நீங்கள் சொல்வதற்கு எதிராக அல்லவா குர்ஆன் சொல்கிறது என்று குதர்க்கவாதம் செய்வது. இதில் எந்த பதிலுமே நேசகுமாரை திருப்தி படுத்தாது; ஏனெனில் அவரின் நோக்கம் கேள்வி கேட்டு விளக்கம் பெறுவதல்ல என்பதை நன்கு அறிவோம்.

இனி இறைவேதமோ இறைத்தூதரோ வரபோவதில்லை என்று நம்பப் படுவதால் குர்ஆனில் சொல்லப் பட்டவை Eternal/மாற்ற முடியாதவை. அப்படியெனில் முஹம்மது நபி (ஸல்…) பற்றி குர்ஆனில் சொல்லப் பட்டவற்றைத் தானே எல்லா முஸ்லிம்களும் பின்பற்ற வேண்டும். அதாவது வளர்ப்பு மகனின் மனைவியை விவகாரத்திற்குப் பின் முஹம்மது நபி மணந்ததாக குர்ஆன் சொல்கிறது. அதனால் முஸ்லிம்கள் எல்லோரும் வளர்ப்பு மகனின் மனைவி விவாகரத்து செய்யப்பட்டால் மணக்க வேண்டும்.

காஃபீர்களுடன் சண்டையிடச் சொல்லி குர்ஆன் சொல்கிறது.அதனால் எல்லா முஸ்லிம்களும் காஃபீர்களுடன் சண்டையிட வேண்டும் என்பதுபோல் பல அபத்தங்களைச் சொல்லி, அடச்சீ! இஸ்லாம் என்றால் இதுதானா? வேண்டாம் அய்யா வம்பு, காலம் முழுவதும் சூத்திரனாகவே இருந்து பிராமன ஐயர் சொல்லும் வேதப் பரிகாரங்களைச் செய்து அடுத்த பிறவியிலாவது மோட்சமடைவோம் என்று வர்ணாசிரமத்தை நிலை நாட்டுவதே நேசகுமார் குழுவினரின் நோக்கம்!

தனியொருவராக இஸ்லாத்தை எடுத்துச் சொன்ன முஹம்மது நபிக்கு எந்தவித உள்நோக்கமும் இருந்திருக்கவில்லை. முதலில் முஹம்மது நபியின் ஏகத்துவக் கோட்பாட்டை எதிர்த்த குரைஷி பாகன

12 comments

  1. சுல்தான்

    Four Sri Lankans were publicly beheaded then displayed on wooden crosses in February for armed robbery after what U.S.-based Human Rights Watch called a sham trial.
    எழில் செய்துள்ள இதன் தமிழாக்கம்

    ஏற்கெனவே கடந்த பெப்ருவரியில் சவூதி அரேபியா அரசாங்கம் மரத்தால் ஆன சிலுவைகுறியை வெளியே காட்டிவிட்டதற்காக நான்கு இலங்கையரது தலையை சீவி தள்ளி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  2. முஸ்லிம்

    //RSS ஏன் இஸ்லாத்தைக் கண்டு அலறுகிறது?//

    கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி – கட்டெறும்பும் தேய்ந்து ஒன்றுமில்லாமல் போயிடுமோன்னு அச்சமுள்ள RSS பார்ட்டிகள் வளரும் இஸ்லாத்தை கண்டு அலறத்தானே செய்வாங்க.

  3. //இன்னொரு பக்கம், இயேசு கிறிஸ்துவையும் அன்னை மரியம் அலைஹி … அவர்கள் பற்றியும் சொல்லப்படும் குர்ஆனியக் கருத்துக்கள் பைபிளில் சொல்லப் பட்டுள்ளதை விடவும் மிகவும் கண்ணியமாகவே சொல்லப் பட்டுள்ளன.//
    நல்லடியார்,
    இயேசு , அன்னை மரியாள் பற்றி பைபிளில் கண்ணியக்குறைவாக என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாமா?

  4. //இயேசு , அன்னை மரியாள் பற்றி பைபிளில் கண்ணியக்குறைவாக என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாமா?//

    அன்பின் ஜோ,
    இயேசு, அன்னை மரியாள் பற்றி கண்ணியக்குறைவாக பைபிளில் சொல்லப்பட்டுள்ளதாக நல்லடியார் குறிப்பிடவில்லையே! அதைவிட உயர்வாக குரானில் கூறப்பட்டுள்ளது என்று தானே சொல்கிறார்.

  5. அன்பின் நல்லடியார் சார்,
    eternal, contextual என்று எழுதி நேசமாக குரைத்து ((குறைத்து உரைத்து)) முஸ்லிம்களை கேள்வி கேட்டுவிட்டதாக இறுமாந்திருக்கும் அந்த இஸ்லாமோஃபோபிக் நபருக்கு, நானும் இப்படி பாடம்படித்துகொடுக்க நினைத்தேன்:

    தொழுகை = eternal
    அடிமை = contextual
    ……. = ……….
    ……. = ……….

    உங்கள் பதிவைப் பார்த்தபிறகு, அதற்கு அவசியமே இல்லாமல் நீங்கள் சிறப்பாகச் சொல்லியிருப்பதை கண்டேன். நன்றி + வாழ்த்துகள்.

  6. ஜோ,

    நீங்கள் அச்சொற்களை ஏன் கண்ணியக் குறைவு என்று நினைத்துக் கொண்டீர்கள்?

    கண்ணியம், அதிகக் கண்ணியம் என்றுதானே புரிய முடியும்?

  7. அறியாதவன்

    இஸ்லாத்தைப் பார்த்து உலகமே அலறுகிறது, மூளையில்லாத மூர்க்கனைப் பார்த்து மென்மையானவர்கள் பதறுவது போல.

  8. நல்லடியார்

    //இஸ்லாத்தைப் பார்த்து உலகமே அலறுகிறது, மூளையில்லாத மூர்க்கனைப் பார்த்து மென்மையானவர்கள் பதறுவது போல. //

    நீங்க சொல்லிட்டா எல்லாமே சரியாத்தான் இருக்கும்.

    ஆமா, நீங்கத்தான் உலக அறியாதவர்களின் தலைவனா?

  9. ஸ்ரீசரண்

    //RSS ஏன் இஸ்லாத்தைக் கண்டு அலறுகிறது?//

    RSS மட்டுமல்ல மனிதநேயம் பேணும் ஒவ்வொருவரும், பெண்ணியம் காக்க துணிபவர் எவருமே கண்டு அலறுகிற மதம் இஸ்லாம்.

  10. நல்லடியார்

    //RSS மட்டுமல்ல மனிதநேயம் பேணும் ஒவ்வொருவரும், பெண்ணியம் காக்க துணிபவர் எவருமே கண்டு அலறுகிற மதம் இஸ்லாம்//

    RSS ஏன் இஸ்லாத்தை கண்டு அலறுகிறது என்று தலைப்பிட்டதற்காக இப்படியா அலறுவது? காந்தியைக் கொன்ற கோட்சே கூட RSS அபிமான மனித நேயராமே! அதெல்லாம் கிடக்கட்டும் நாக்பூர் RSS தலைவியாக ஒரு தலித் பெண் வேண்டாம்,பார்ப்பனப் பெண்ணையாவது அமர வைத்து RSS பெண்ணுரிமை பேணும் அமைப்பு என்று நிரூபிக்கலாமே?

  11. பகுத்தறிவாளன்

    //இயேசு , அன்னை மரியாள் பற்றி பைபிளில் கண்ணியக்குறைவாக என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாமா? //

    நண்பர் ஜோ உண்மையிலேயே அறியாமல் தான் கேட்கின்றார் எனில் பட்டியலிட நான் தயார்.

    உதாரணத்திற்கு பைபிளிலிருந்து ஒரே ஒரு வசனத்தை மட்டும் தருகின்றேன்.

    தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் எனப்படும். (லூக்கா 1:35)

    மேற்கண்ட வசனத்திற்கு விளக்கம் நான் எழுத விரும்பவில்லை. நண்பர் ஜோவே கூறட்டும்.

    பட்டியல் தொடர்ந்தால்…

    * அன்னை மரியத்தின் கர்ப்பத்தை வைத்து யூதர்கள் மோசமாக அன்னை மரியத்தை விமர்சித்து மக்கள் மத்தியில் அன்னை மரியத்தைக் குறித்து எழுந்த மோசமான அபிப்பிராயத்தை மாற்றவும் அவர்கள் மீது எழுந்த களங்க அவதூறை போக்கவும் கர்த்தர் தன் பக்கமிருந்து அனுப்பிய சாட்சியைக் குறித்து பைபிள் வாயத்திறக்கவே இல்லை. அதாவது அன்னை மரியம் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை போக்க பைபிள் எதுவும் செய்யாதது மட்டுமின்றி மேற்கண்ட வசனம் அதனை உறுதிப்படுத்தும் விதமாகவும் யூதர்களுக்கு மெல்லும் வாய்க்கு அவலாக கிடைத்தது.

    * தனது பசியைப் போக்க கனி தராத ஒரு மரத்தைக் கண்டு சினந்து கடுங்கோபத்துடன் அதனை சபித்து அப்பொழுதே பட்டுபோகவைக்கப்பட்டதாக இயேசு மீது பைபிள் அவதூறை சுமத்துகிறது(வசனம் தேவையெனில் தருகின்றேன்)

    * பாதுகாப்பு தேடி வந்த இஸ்ரவேல் அல்லாத மாற்று ஜாதி பெண்ணிடம் “மகனுக்கு கொடுக்கும் அப்பத்தை எடுத்து நாய்க்கு வீசி எறிவேனோ” என்று தன் சமுதாயமான இஸ்ரவேலை மக்களாகவும் இஸ்ரவேல் அல்லாத மாற்று சமுதாய மக்களை நாய்களாகவும் இயேசு உவமானித்ததாக பைபிள் கூறுகின்றது.(வசனம் தேவையெனில் தருகின்றேன்)

    இவ்வாறு தர்க்கரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் பல அடுக்கிக் கொண்டே போகலாம்.

    இப்படிப்பட்ட களங்கங்களுக்கோ, அவதூறுகளுக்கோ இஸ்லாம் எங்கும் வழிவகுக்கவே இல்லை. மட்டுமல்ல அன்னை மரியத்தையும் இயேசுவையும் மகிமப்படுத்துவதில் இஸ்லாமே முன்னிலை வகிக்கின்றது.

    எப்படி என்று தெரிய வேண்டுமெனில் நல்லடியாரிடம் கேளுங்கள். அவர் வரிசைப்படுத்துவார். :-)

    நண்பர் ஜோ இவற்றிற்கு என்ன சொல்கின்றீர்கள்.

    பகுத்தறிவாளன்.

  12. இறை நேசன்

    //RSS மட்டுமல்ல மனிதநேயம் பேணும் ஒவ்வொருவரும், பெண்ணியம் காக்க துணிபவர் எவருமே கண்டு அலறுகிற மதம் இஸ்லாம்.//

    அய்யோ அய்யோ அய்யோ. என்னக் காமடி அய்யா இது? சிரித்து சிரித்து வயிறு புண்ணாகுதே!

    அய்யா ஸ்ரீசரண் அய்யா!

    ஆர்.எஸ்.எஸ் எவ்விதத்திலெல்லாம் மனிதநேயம் பேணுகிறது என்றும் பெண்ணுரிமை பேணுகிறது என்றும் ஒரு லிஸ்ட் போட்டு காண்பிப்பீங்களா அய்யா?

    முடிந்தால் போடுங்கள் பார்ப்போம். அதற்குப் பின் இஸ்லாத்தின் மனிதநேயத்தையும், பெண்ணுரிமையையும் ஆர்.எஸ்.எஸின் மனிதநேயம் பெண்ணுரிமையையும் பற்றி தனியாக பட்டிமன்றம் போட்டு நாம் விவாதிக்கலாம். என்ன விவாதிக்க தயாரா?

    இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ் இரத்தக்காட்டேறிகளுக்கு தோல் ரொம்பவே கட்டி தான்பா.

    அன்புடன்
    இறை நேசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *