ஒட்டகம் குர்பானிக் கொடுக்கபடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல? வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கு தொடுத்தவர் சொன்ன காரணங்கள் நகைப்பிற்குறியவையாக இருந்ததோடு உள்நோக்கமும் உடையதாகும்.
வழக்கின் முக்கிய அம்சமாக ஒட்டகங்கள் இராஜஸ்தான் மாநிலத்திலிருந்து பலியிடுவதற்காக வெகுதொலைவு நடத்திக் கொண்டு வரப்படுகின்றன. இக்கொடுமையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேரளாவில் ஒட்டகம் பலியிடுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளதைப் போல் தமிழ்நாட்டிலும் தடை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
ஒட்டகம் பாலைவனங்களில் பலநாட்கள் தண்ணீர்கூட குடிக்காமல் பயணம் செய்யக் கூடியது என்பதும், இராஜஸ்தான், குஜராத் போன்ற மேற்கு மாநிலங்களில் வண்டிகளில் கட்டி சுமைகளை இழுக்க பயன்படுத்தப் படுகிறது என்பதையும் நிச்சயம் அறிந்திருப்பார். மேலும் இப்பிரதேசங்களிலும் உலகின் பல பாலைவனப் பிரதேசங்களிலும் ஒட்டகம் போக்குவரத்திற்காவும், உணவிற்க்காகவும் வளர்க்கப்படுகின்றன.
கேரள உயர் நீதி மன்றம் கசாப்புக் கடைகளில் ஒட்டகம் அறுப்பதற்கு தற்காலிக தடை விதித்திருக்கக் காரணம், அவற்றை முறையாக அறுக்கத் தேவையான சர்ஜன்கள் கேரளாவில் இல்லை என்பதே ஆகும். அதாவது தர்காலிகத் தடை முறையாக அறுக்கப் படவேண்டும் என்ற நோக்கில்தானே தவிர அறுக்கவே கூடாது என்பதல்ல.
பக்ரீத் (ஹஜ்) பெருநாளின் போது இறைவனின் பெயரால் உண்பதற்குறிய விலங்குகளில் ஆடு, மாடு அல்லது ஒட்டகம் பலியிட்டு, அதன் கறியை ஏழைகளுக்கு பகிர்ந்தளிப்பது வசதியுள்ள இஸ்லாமியரின் பண்டிகைச் சடங்குகளில் ஒன்று. இதை அவரவர் வசதிக்கேற்ப ஹலாலான (இஸ்லாமிய) முறைப்படி அறுத்து கறியை பகிர்ந்து உண்பது குர்பானி என்கிறோம்.
இந்திய அரசியல் சாசணத்தின் 25 ஆவது பிரிவி வழங்கியுள்ள வழிபாட்டு உரிமையின் படியும், இந்திய வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம் (1972) இல் விலங்குகளை குர்பானி கொடுப்பது பற்றி எந்த தடையும் விதிக்கவில்லை என்பதும், இந்திய வனவிலங்கு வாரியம் வெளியிட்டுள்ள “பலியிடக் கூடாத விலங்குகள்” பட்டியலில் ஒட்டகம் இடம் பெறவில்லை என்பதும் கவனிக்கத்தது.
இந்துக்களில் மிகச்சிலர் பசுவை வழிபடுகின்றனர் என்ற காரணம் ஓரளவு நியாயமானது. ஆனால் ஒட்டகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க எந்த நியாயமான எந்த காரணமும் இல்லை. ஒட்டகத்திற்கு மத அடையாளம் கொடுப்பதாக இருந்தால் முஸ்லிம்களுக்கே அதிக உரிமையுள்ளது!.
மேலும் பசுப் பலியைத் தவிர்க்க ஒட்டகம் போன்ற விலங்குகளை பலியிடுவது மாற்றுப் பரிகாரமாக இருக்கும் என்பதையும் கவனத்தில் கொண்டால் ஒட்டகம் உணவுக்காக பலியிடப்படுவதை ஆதரிக்க வேண்டும்.
பிராணிநலன் என்ற பெயரில் இதுபோன்ற வழ்க்குகளில் மறைந்திருக்கும் காரணங்களை அலசினால் உள்நோக்கம் தெளிவாகும்.பிராணிகளை சித்ரவதை செய்யக்கூடாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இஸ்லாம் எறும்பைக் கூட அநாவசியமாகக் கொல்வதை தடுக்கிறது. ஆனால் உணவுக்கு அவசியமான பிராணிகளை அழகான முறையில் அறுத்து உண்பதை தடுக்கவில்லை.
மனிதனின் வாழ்வாதாரத் தேவைக்காகவும் உணவுக்காகவும் மாமிசம் உண்பது உலக நியதி. விரும்பாதவர்கள் உண்ணாமல் இருப்பதை யாரும் குறை சொல்ல முடியாது.
உழவுக்குப் பாடுபட்ட காளை மாடுகளுக்கு நன்றி செலுத்துகிறோம் என்று ஒருபக்கம் சொல்லிக் கொண்டு ஜல்லிக்கட்டு என்ற பெயரில் இன்னொருபக்கம் காளைகளை சித்தி
இப்பதிவின் தொடர்ச்சி:
http://athusari.blogspot.com/2006/12/2.html