Featured Posts

இதனால் சகலமானவர்களுக்கும்…

சம்மர் ஹாலிடேஸ் மற்றும் தேர்தல் களேபரங்களுக்கிடையில் சிக்குண்டு சற்று இடைவெளியிட்டு வலைப்பூக்கள் பக்கம் வந்து பார்த்தபோது ‘நேச’மான சிலரால் எனக்கு “கொ.ப.செ.” பதவி வழங்கப்பட்டிருந்தது. அவ்வப்போது என் பதிவுகளில் அனானிமஸாக வந்து என்னை பாகிஸ்தான் அபிமானி, தாலிபான் அனுதாபி, தீவிரவாத ஆதரவாளன் என்ற பன்முனை தாக்குதல் தொடுத்து என் இந்திய தேசபக்தி தீவிரவமாகத் தாக்கப்பட்டுள்ளது.

இவை என் பதிவுகளுடன் தொடர்பில்லாததால் முடிந்தவரை பதில் கொடுப்பதை தவிர்த்துள்ளேன். எனினும் மீண்டும் மீண்டும் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து நான் பார்வையிடாத பல வலைப்பூகளில் சேறு வாரி இறைப்பவர்களுக்காகவும், என்னிடம் பதில் வேண்டி பின்னூட்டம் இட்டவர்களுக்காகவும் இப்பதிவு.

என் வலைப்பூ பிரவேசத்தின் நோக்கம் ஒன்றும் பிரம்மாதமானது இல்லை. இன்றைய உலகக் கல்வியிலும் இணைய/கணினி அறிவிலும் பின் தங்கிய நிலையிலேயே பெரும்பாலான இஸ்லாமியர்கள் இருந்து வரும் நிலையில், சல்மான் ருஷ்டிக்குப் பிறகு இஸ்லாத்தை அநாகரிகமாகவும் வக்கிரமாகவும் தமிழ் வலைப்பூக்களில் விமர்சித்து வந்ததைக் கண்டு அதிர்ந்தே, இரண்டிலும் ஓரளவு அறிமுகமுள்ளதால் இஸ்லாத்தின் மீது இஸ்லாம் அல்லாதவரால் வைக்கப்படும் இணைய அவதூறுகளுக்கு நான் விளங்கிய வரையிலான விளக்கங்களை கொடுப்பதற்காகவே தமிழ் வலைப்பூவாசியானேன்.

என் பதிவுகளுக்கான தகவல்களை இணையத்திலிருந்தே மேற்கோலிடுகிறேன். தனிப்பட்ட முறையில் எனக்கு யார் மீதும் வெருப்பில்லை. பொதுவான உண்மையைக் கூட பொய்யும் அவதூறும் கலந்து எழுதும் எழுத்துத் தீவிரவாதிகள் மீது மட்டும் சில நேரங்களில் தற்காலிக கோபமுண்டு. பிறருக்கு விளக்கம் கொடுப்பதற்கான தேடலில் இருக்கும் போது நம் தேடல்களுக்கும் மறைமுகமான விடை கிடைக்கும் சந்தோசத்தாலேயே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வலைப்பூவில் சுற்றி வருகிறேன்.

சில நாட்கள் இடைவெளியில் மீண்டும் வலைப்பூக்கள் பக்கம் வந்த போது என் பழைய பதிவுகளுக்கான பின்னூட்டங்கள் கேள்விகளாக நிறைந்திருக்கின்றன. அவை எல்லாவற்றிற்கும் சம்பந்தப்பட்ட பதிவுகளுக்குச் சென்று பின்னூட்டமிடும் அளவுக்கு பொறுமையும் நேரமும் இல்லையாதலால் இதுவரை பதில் சொல்லாமல் இருக்கும் பல பின்னூட்டக் கேள்விகளுக்கு விளக்கமாக இப்பதிவை எடுத்துக் கொள்ளும் படி சம்பந்தப்பட்டவர்களை வேண்டுகிறேன்.

1) சூரிய நாரயணன் படுகொலை பற்றி…

நான் தனியாக பதிவு எழுதவில்லை. அதற்காக அதை ஆதரிக்கிறேன் என்பதுபோல் குற்றம் சாட்டுவது உலக மகா அபத்தம். சூரிய நாராயணாவின் படுகொலை குறித்து கண்டித்துள்ள ஒரு சில பதிவுகளில், தாலிபான்கள் பற்றிய எழுதியதை முடிச்சுப்போட்டு இதுதான் வாய்ப்பென்று என்னையும் கண்டிக்கச் சொல்லி சில நல்லெண்ணம் படைத்த வலைப்பூவாசிகள் குறிப்பாக நேசகுமார், ரோசாவசந்த் போன்றவர்கள் வேண்டியிருந்தார்கள். முக்கியக் காரணம் யாதெனில் மதரஸாக்கள் தீவிரவாதப்பட்டரைகளா? என்ற பதிவில் ஏழைக்குழந்தைகளுக்கு (பெரும்பாலும் அநாதைகள்) கல்வி கற்பிக்கும் மதரஸாக்களையும் அவற்றில் படிப்பவர்களையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கிற்கு எதிராக, உண்மையில் மதரஸா என்றால் என்ன? அதன் செயல்பாடுகள், படிப்புகள், நோக்கங்களைச் சொன்னேன்.

இஸ்லாமிய மதரஸாக்கள் எவ்வாறு மற்ற கல்வி நிலையங்களிலிருந்து வேறுபடுகின்றன எனச் சொல்ல மதரஸா மாணவர்களின் புரட்சியால் உருவான ‘தாலிபான்’கள் பற்றியும் சொல்லி இருந்தேன். பாமியான் சிலை இடிப்பு பற்றிய ஒருவரின் பதிவில் இஸ்லாம் பிற மத வழிபாட்டுத்தளங்களை இடிக்கச் சொல்கிறது. ஆகவேதான் தாலிபான்கள் பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *