ஏப்ரல்-28, 2008 அரப் நியூஸ் நாளிதழ் தெரிவிக்கும் செய்திக் குறிப்பு, கடந்த மூன்று மாதங்களில் மக்கா ரோந்துக் காவல் துறையினரால் 8,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது கடந்த ஜனவரி 10 முதல் ஏப்ரல் 21ஆம் தேதிவரை மக்காவைச் சார்ந்த ரோந்துக் காவல்துறையினர் 8,068 பேரை பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்துள்ளனர். இதில் 6,508 எட்டுபேர் பல்வேறு குற்றங்களில் ஈடுபடடுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. 489 பேர் கொள்ளை மற்றும் திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள், 676 பேர் சரியான இகாமா இல்லாதவர்கள் மற்றும் அவர்களின் ஸ்பான்சர்களிடமிருந்து ஓடி வந்தவர்கள். 250 பேர் போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டவர்கள், 126 பேர் ஏற்கனவே செய்த தவறுகளுக்காக காவல் துறையினரால் தேடப்பட்டு வந்தவர்கள். இச் சம்பவங்களின் போது ரோந்துக் காவல்துறையினர் 10 கைத் துப்பாக்கிகளும், 457 துப்பாக்கிக் குண்டுகளும், இரண்டு இயந்திரத் துப்பாக்கிகளும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் 1825 போதை மாத்திரைகள் மற்றும் 100 கிலோகிராம் போதைப் பொருட்களையும் கைப்பற்றியிருக்கின்றனர். இத்தகைய குற்றங்கள் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட 6,437 வாகனங்களும் கைப்பற்றியிருக்கின்றனர்.
அதாவது வெளிநாடுகளிலிருந்து வேலைக்காக வந்த வெளியூர்வாசிகள் தான் சவூதியில் குற்றங்கள் அதிகரிக்கக் காரணம் எனச் சொல்கின்றீர்கள். சரி தானா? அவ்வளவு கடினமான தண்டனை முறைகள் இருக்கும் சவுதியிலும் தங்களின் கைவரிசையைக் காண்பிக்கும் இவர்கள் பலே கில்லாடிகள் தான்.
படைத்த இறைவனால் மட்டுமே படைப்பினங்களுக்கு வழிக்காட்டமுடியும்.அல்லாஹ்வின் சட்டத்தை நடைமுறைப்படுத்தாவிட்டால் முஸ்லீம் நாடுகளின் கதி-குழப்பம் தான் மிஞ்சும் என்பதற்கு சவுதி சட்ட திட்டங்களை மேலே உள்ள கட்டுரையை படித்தாலே உணரமுடிகிறது
jazakallahuhair