Featured Posts

Tag Archives: மிஃராஜ்

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 01)

அல்குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களுமே இஸ்லாத்தின் மூலாதாரங்களாகும். அல்குர்ஆனில் “அல்லாஹ்வைப் பின்பற்றுங்கள், அவனது தூதரையும் பின்பற்றுங்கள்” என அனேக ஆயத்துக்கள் கூறுகின்றன. அவனது தூதரைப் பின்பற்றுங்கள் என்ற கட்டளையைத்தான் ஹதீஸைப் பின்பற்றுதல் என நாம் புரிந்து செயற்பட்டு வருகின்றோம். இந்த வகையில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நம்புவதும் அவற்றை ஏற்று நடப்பதும் நபி(ஸல்) அவர்களது நபித்துவத்தை நம்புவதையும் அதை ஏற்றுக் கொள்வதையும் வெளிப்படையாகக் காட்டும் முக்கிய அம்சங்களாகும்.

Read More »

அல்லாஹ் எங்கும் இருக்கின்றானா?

முஸ்லிம்களின் அடிப்படையான நம்பிக்கையில் ஒன்று, அல்லாஹ்வையும் அவனுடைய பண்புகளையும் தெரிந்து கொள்வதாகும். இதுவே ஈமானின் கடமைகளில் முதல் கடமையாகும். இதுபற்றி நமது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளிடம் பரவலாக இருக்கும் ஒரு தவறான நம்பிக்கையை மட்டும் தெளிவு படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Read More »

மூன்று விஷயங்கள் பற்றிய உண்மைகள்

111- நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அன்னையே! முஹம்மது (ஸல்) அவர்கள் தம் இறைவனை (மிஃராஜ் – விண்ணுலகப் பயணத்தின் போது நேரில் பார்த்தார்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நீங்கள் சொன்னதைக் கேட்டு என் ரோமம் சிலிர்த்து விட்டது. மூன்று விஷயங்கள் (பற்றிய உண்மைகள்) உங்களுக்கு எப்படித் தெரியாமல் போயின? அவற்றை உங்களிடம் யார் தெரிவிக்கின்றாரோ அவர் பொய்யுரைத்து விட்டார். முஹம்மது (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) …

Read More »

நபி (ஸல்) அவர்கள் கண்ட அல்லாஹ்வின் சான்றுகள்

104- நான் (மிஃராஜ் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் மூஸா அவர்களை ஷனூஆ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று பழுப்பு (கோதுமை) நிறமுடைய உயரமான சுருள் முடிகொண்ட மனிதராகக் கண்டேன். ஈஸா அவர்களை நடுத்தர உயரமும், சிகப்பும், வெண்மையும் சார்ந்த மிதமான சரும அமைப்புக் கொண்டவர்களாகவும் (சுருள்,சுருளாக இல்லாமல்) படிந்த தொங்கலான தலை முடியுடையவர்களாகவும் கண்டேன். நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக்கையும் (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் மகாப்பொய்யனான) தஜ்ஜாலையும் கண்டேன். …

Read More »

நபி (ஸல்) அவர்களின் மிஃராஜ் பயணம் பற்றி…

102- நான் மக்காவில் இருந்த போது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அது வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம் ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் மற்றும் ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டி விட்டு, அதை மூடி விட்டார்கள். பிறகு ஜிப்ரீல் கையைப் பிடித்து முதல் வானத்திற்கு என்னை ஏற்றிச் சென்றார்கள். முதல் வானத்தை …

Read More »

நரகத்தில் பெண்கள்-ஓர்விளக்கம்

நரகத்தில் பெண்களே அதிகம். ”இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்- 2911) உலகத்தின் அனைத்து செல்வங்களையும் விட சிறந்தது நல்ல மனைவி என்று, பெண்களைப் பற்றி சிலாகித்து கூறும் இஸ்லாம், ”நரகத்தில் பெண்களே அதிகம்” என்றும் கூறுகிறது. (இவ்வுலக வாழ்க்கையில் தவறுகளுக்கான தண்டனைகள் அனுபவிக்கப்படும் இடமே நரகம் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை.) ”நான் …

Read More »

இஸ்லாம் – முஸ்லிம் அல்லாதோர் பார்வையில் – 4

“நபிகள் நாயகம்தான் கல்கி அவதாரம்!”(?) (“மக்களுக்கு வழிகாட்ட இறைவனே மனித வடிவில் பிறக்கிறான்” எனும் அவதாரக் கொள்கையை இஸ்லாம் ஒப்புக் கொள்வதில்லை. மனிதர்களுக்கு வழிகாட்ட மனிதர்களில் இருந்தே தன் தூதர்களை இறைவன் தேர்ந்தெடுக்கிறான் என்பதே இஸ்லாம் கூறும் தூதுத்துவம். இறுதித்தூதர் வர இருக்கிறார் எனும் முன்னறிவிப்பு எல்லா வேதங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. இந்து வேதத்திலும் “கல்கி” பற்றி கூறப்பட்டுள்ளது. அந்த “கல்கி” வந்துவிட்டார், அவர்தாம் முஹம்மது நபி(ஸல்) என்று இந்துமத அறிஞர் …

Read More »