Featured Posts

பிள்ளைகளிடையே பாரபட்சம்

அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளுக்கிடையே பாரபட்சம் சிலர் தங்களுடைய பிள்ளைகளில் சிலரை விடுத்து சிலருக்கு மட்டும் அன்பளிப்புகள், வெகுமதிகள் வழங்குகின்றனர். ஷரீஅத் ரீதியிலான தக்க காரணம் இல்லையெனில், சரியான கூற்றின் பிரகாரம் இவ்வாறு செய்வது ஹராமாகும். உதாரணமாக தம் பிள்ளைகளில் ஒருவனுக்கு மற்ற பிள்ளைகளூக்கு ஏற்படாத ஒரு தேவை ஏற்பட்டு விட்டதெனில் – உதாரணமாக அவன் நோயாளியாக இருக்கிறான், அல்லது அவனுக்கு கடன் இருக்கிறது, அல்லது திருக்குர்ஆனை மனனம் செய்ததற்காக அவனுக்கு …

Read More »

நற்பணிக்கு அழைப்பு.

விஞ்ஞானத்தின் பெரும் பங்களிப்பே மருத்துவத் துறையாகும். மனிதன் சுகாதாரத்தோடும் உடல் நோய்களில்லாமல் வாழ மருத்துவத்துறையே பெருமுயற்சி செய்து வெற்றிகண்டு வருகிறது. அதன் பரிணாம வளர்ச்சியே மாற்று உறுப்பு பொருத்தும் முறையாகும். கண், சிறுநீரகம், போன்ற உறுப்புகளை அடுத்தவர்களுக்கு பொருத்தி வெற்றி கண்டுள்ளது மருத்துவம். இத்தகைய மருத்துவத்தை இஸ்லாம் ஆதரிக்கிறதா…? பொதுவாக தீமையான காரியங்கள் பயனற்ற செயல்கள் எதற்கும் உதவாத விஷங்கள் எல்லாவற்றையும் இஸ்லாம் பட்டியலிட்டு விளக்கிவிட்டது. இஸ்லாம் சுட்டிக்காட்டாத எந்தத் …

Read More »

புதைத்தல் Vs. எரித்தல்: ஒரு அறிவியல் பார்வை

இறந்தவர்களைப் புதைப்பதால் இடநெருக்கடி ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் எரிப்பதே சிறந்தது என்று “என்னை புதைப்பதா? எரிப்பதா?” என்ற ஒரு பதிவில் அருமையான விவாதத்தை எழுப்பி இருந்தார்.இதை ஒரு மதப்பிரச்சினையாகப் பார்க்காமல் சமூகக் கண்ணோட்டத்தில் தீர்வு காண வேண்டும் என்றும் வேண்டியிருந்தார். அதில் பெரும்பாலோர் புதைப்பதை விட எரிப்பதே சிறந்தது என்று கருத்துத் தெரிவித்திருந்தார்கள். உண்மையில் எந்த முறை சிறந்தது என்று அலசிப் பார்ப்போம். அதற்கு முன் அ.மார்க்ஸ் …

Read More »

அமானித மோசடியும் குழப்பங்கள் தோன்றுவது குறித்தும்…

87- அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு (நன்பகத் தன்மை தொடர்பாக) இரு செய்திகளைக் கூறினார்கள். அவற்றில் ஒன்றை நான் (என் வாழ்நாளிலேயே) பார்த்து விட்டேன். மற்றொன்றை எதிர்பார்த்திருக்கின்றேன். ஒரு செய்தி யாதெனில் (இயற்கையாகவே) மனிதர்களின் ஆழ் மனதில் (அமானத் எனும்) நம்பகத் தன்மை இடம்பிடித்தது. பின்னர் அவர்கள் குர்ஆனிலிருந்தும் (அதை) அறிந்து கொண்டார்கள். (நபியவர்கள் கூறிய இதை நான் பார்த்து விட்டேன்.) இரண்டாவது செய்தி, நம்பகத் தன்மை …

Read More »

குடிமக்களை காக்கத் தவறிய ஆட்சியாளன்

சமுதாயத்தை ஏய்க்கும் ஆட்சியாளன் பெறும் தண்டனை குறித்து………. 86- நபி (ஸல்) அவர்கள், ஓர் அடியானுக்குக் குடிமக்களை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களது நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான் என்று சொல்ல நான் கேட்டேன் எனக் கூறினார்கள். புகாரி-7150: மஅகில்(ரலி)

Read More »

உலக வக்கிரப் போட்டி 2006

உலக அழகிப்போட்டி என்ற பெயரில் கன்னிப் பெண்களை துகிலுறியச் செய்து வக்கிர ஆண்களுக்கு மத்தியில் பூனை நடை நடக்கவிட்டு, கலந்து கொண்ட பெண்களில் ஒரு சிலரை மட்டும் ஒவ்வொரு பிரிவில் அழகிகள் என்று தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். முந்தானை முடிச்சு படத்தில் பாக்கியராஜ் கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா? என்று கிராமத்து ஆண்களிடம் கேட்பார். எல்லோரும் கண்ணகி என்பார்கள். உடனே அவர் அங்கிருக்கும் கிராமப் பெண்களிடம், ‘உங்கள் கணவர்கள் உங்களை கற்பில் சிறந்தவர்கள் …

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (17)

தலைமை மாற்றம் பொருளாதாரத்தின் தேவை, விவேகமும் பேரவாவுமிக்க முஸ்லிம் இளைஞர்கள் அனைவரையும் அரசாங்கக் கல்வி நிலையங்களுக்குத் துரத்தியது. அங்கு அவர்கள் பெற்ற கல்வி, அவர்களைத் தம் சொந்த பாரம்பரியத்திலிருந்தும் பிரித்து விட்டது. அவர்கள் மேனாட்டுக் கருத்துக்களை ஏந்தி வெளியேறியதோடு, தம் சொந்தக் கலாச்சாரத்தில் பெறுமதி வாய்ந்த எதுவுமில்லையென்றும் தம் சென்ற கால வரலாற்றில் தாம் பெருமைப்படக்கூடியது ஒன்றுமில்லை என்றும் நம்பினர். மேனாட்டு வாழ்க்கை முறையினை மிக நுணுக்கமாகப் பின்பற்ற அதன் …

Read More »

மதங்கள் மனிதர்களுக்காகவா..?

மனிதனால் அறியப்பட்டு உலகுக்கு அறிமுகம் செய்யப்படும் நவீனங்கள் ஒவ்வொன்றிலும் கண்டுபிடித்து அறிமுகம் செய்பவரின் வழிகாட்டல் நிச்சயமாக இருக்கும். எப்படி உபயோகிப்பது? – எப்படி இயக்குவது? என்கிற குறிப்புகளடங்கிய குறிப்பேடு, அதில் சொல்லப்பட்டுள்ளபடியே உபயோகப் படுத்த வேண்டும் – இயக்க வேண்டும். அதற்கு மாற்றமாக உபயோப்படுத்தினாலும், மாற்றமாக இயக்கினாலும் விபரீதங்கள் ஏற்படும். மனிதனால் கண்டுபிடிக்கப்படும் ஒரு கருவியை இயக்க, அவருடைய வழிகாட்டல் அவசியம் எனும்போது, இறைவனால் படைக்கப்பட்ட மனிதன், நன்மை – …

Read More »