நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 91 மம்மூத் அப்பாஸை ஏற்றாலும் ஏற்போம், அராஃபத்தை ஏற்கமாட்டோம் என்று இஸ்ரேல் ஒற்றைக்காலில் நின்றதற்குக் காரணம் என்னவென்று பார்த்துவிடுவது நல்லது. மம்மூத் அப்பாஸ் என்பவர், மக்கள் தலைவர் அல்லர். அராஃபத் உயிருடன் இருந்த காலத்தில், ஒரு தேர்தலில் அவர் தனித்து நின்றால் ஒரு ஓட்டு விழுமா என்பது, சந்தேகம்தான். அவர் அராஃபத்தின் சகா. அல் ஃபத்தாவின் ஆரம்பகாலம் முதல், உடன் இருந்து வருபவர். …
Read More »குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் – 10
கலவரங்கள் நடந்த அனைத்து பகுதிகளிலும் முஸ்லிம் பெண்களே குறிவைக்கப்பட்டார்கள் என்பதை நாம் மறந்துவிட கூடாது. இந்த கோரதான்டவம் ஆடுவதற்காக 15, 20 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கிராமங்களிலிருந்து மதவெறியர்கள் வரவழைக்கப்பட்டார்கள். இந்த கலவரத்தின் போதுதான் முதல் முதலாக இப்படி கொலையாளிகளை ஒரேயடியாக வெளிக்கிராமங்களிலிருந்து கொண்டு வந்திருக்கிறார்கள் என்கிறார் பான்சமஹால் என்ற மாவட்ட காவல்துறை துணைக்கண்காணிப்பாளர். இப்படி திரட்டப்பட்ட கொலையாளிகள் ஒருவர் அல்ல ஒரு நூறு பேர் அல்ல ஓராயிரம் …
Read More »பெண்ணுரிமைப் பேணுவோம்
சென்ற வாரத்தில் ஒரு நாள் ‘அரப் நியூஸ்’ பத்திரிக்கையை படித்தபோது கண்ணில் பட்ட ஒரு செய்தி நவீன தலைமுறை இளைஞர்களிடம் ஏற்பட்டிருக்கும் தறிகெட்ட தனத்தை பறைசாற்றியது. ரியாத் நகரில் சாலையில் நடந்து கொண்டிருந்த இரு பெண்களை சில இளைஞர்கள் பலாத்காரம் செய்து அதனை தனது கேமரா செல்பேசியில் பதிவு செய்ததாக வந்திருந்த செய்தி நாகரீக மனிதர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இளைஞர்களின் சிந்தனையை இதுபோன்று பாழாக்குவதில் மேற்கத்திய …
Read More »வஹி: இறைச்செய்தியும்- அறிவியலும்-14
இரும்பைப் பொழியும் வானம்! -14 ஏ.கே.அப்துர் ரஹ்மான் மானிட சமுதாயம் முதலாவதாகப் பயன்படுத்திய உலோகம் எது என்ற வினாவிற்கு ‘தங்கம்’ என்ற வியப்பிற்குரிய பதிலைத்தான் நாம் பெறுகிறோம். ஏனைய உலோகங்களைப் போன்று தங்கம் பிற உலோக தாதுக்களுடன் (Minerals) இணைந்து விடாமல் சுத்த நிலையில் கிடைப்பதால் அதைத் தாதுக்களிலிருந்து பிரித்தெடுப்பது எளிது. எனவே முதலாவதாக மானிடப் பயன்பாட்டிற்குள் தங்கம் குடியேறிவிட்டது. இதற்கடுத்தபடியாக செம்பும், அதன் கூட்டுப் பொருளாகிய (Alloy) வெண்கலம் …
Read More »குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் – 9
பாத்திமா பீவி முஹம்மத் யாகூப் ஷேக் என்றொரு பெண். இவர் தன் குடும்பத்தை சேர்ந்த 19 பேரை ரத்த வெறிபிடித்த பாசிஸ பேய்களுக்கு இறையாக்கிவிட்டு பரிதவித்து நின்ற பெண்களில் ஒருவர். நம் குடும்பத்தில் ஒருவர் இறந்து போனாலே நம்மால் தாங்கி கொள்ளமுடியவில்லை. பாவம் இந்த பாத்திமா பீவி 19 பேரை பறிகொடுத்துவிட்டு படும் வேதனை. இவர் கூறுகிறார், இந்த பாசிஸ வெறியர்களின் எல்லா காட்டுமிராண்டி தனங்களையும் மன்னித்துவிட முடியும். ஆனால் …
Read More »பெண்ணுரிமையின் பரிணாம வளர்ச்சி
ஒவ்வொரு வருடமும் மார்ச் 8 ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் கொண்டாட்டங்கள், சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், உரிமை மீட்புப் போராட்டங்கள் என்று பலவித முகங்களில் அவைகள் நடந்தேறின. ஊடகங்கள் ஒவ்வொன்றும் அவற்றைப் பார்த்த விதமும் பலவாறாக இருந்தது. சானியா மிர்ஸா டென்னிஸில் உலகத் தரத்திற்கு இணையாக வந்திருப்பது மகளிர் முன்னேற்றமென்று ஒரு பத்திரிக்கை மேற்கோள் காட்டியது. மகளிர் மேம்பாட்டுக்காக உழைத்து ஐ.நா.விருது பெற்ற சேலத்தைச் …
Read More »மேன்மைக்குரிய சிருஷ்டிகள் அல்லாஹ்வுடைய பங்காளிகளல்ல.
மேன்மைக்குரிய மாபெரும் சிருஷ்டிகளில் நபிமார்களையும், ஸாலிஹீன்களையும் கொண்டு மட்டும் சத்தியம் செய்யலாம் என்றும், பிரார்த்திக்கலாம் என்றும் அனுமதிக்கின்றோமே தவிர எல்லா மக்களையும், அல்லது எல்லா படைப்புகளையும் கொண்டு அவர்களின் பொருட்டால் பிரார்த்திப்பதை நாங்கள் அனுமதிக்கவில்லையே – இது சிருஷ்டிகளில் ஸாலிஹீன்களையும், நபிமார்களையும் கொண்டு பிரார்த்திப்பதை அனுமதித்தவர்களின் வாதமாகும்.
Read More »அமானுடக் கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் – 4
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்றும் பின்னர் பலதாரமணம் தான் இஸ்லாம் பரவக் காரணம் என்றனர். உலகலாவிய தீவிரவாதத்திற்கும், வன்முறைக்கும் குர்ஆன் வெளிப்பட்ட விதமும் அவ்வாறு வெளியான குர்ஆனும்தான் காரணம் என்பது திரு.நேசகுமாரின் அரிய கண்டு பிடிப்பாகும். சிலுவை யுத்தங்களாலும், குண்டுகளாலும் இன்னும் இன்றைய ஈராக்,ஆப்கன் யுத்தங்களாலும் முஸ்லிம்களை கொன்றழித்து விட்டு இஸ்லாம் வாளால் பரவியது என்ற அமெரிக்காவில் இஸ்லாம் வேகமாக வளரும் மதம் என்று நியூயார்க் டைம்ஸ்சும், முன்னாள் ஜனாதிபதியின் …
Read More »அரபி மொழியும் நீச மொழிகளும்!!!
இஸ்லாம் அரேபியாவிலிருந்துதான் உலகின் பல பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. அவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட இஸ்லாம் உலகிற்கு பல நன்மைகளை வழங்கியுள்ளது. கணிதவியலின் அல்ஜீப்ரா முதல் ஆல்கஹால் வரை முஸ்லிம்களால் உலகிற்கு அறிமுகப் படுத்தப்பட்டன. இஸ்லாம் அரேபியாவில் தோன்றிய போது, அன்றைய பாகன் அரபிகள், மிகுந்த மொழிவெறி பிடித்தவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அரபி (பேசத்தெரிந்தவர்) மற்றும் அஜமி (பேசத் தெரியாதவர்). அதாவது அரபி பேசத்தெரியாதவர் ஊமையாம்! இந்த மனநிலையையும் மொழி …
Read More »இந்தியாவில் இஸ்லாம்-4
ஒரு புது மதத்தின் வருகையை ஏற்றுக் கொள்வதற்கு தென் இந்தியாவில் நிலவியிருந்த சாதமான சூழ்நிலை. எ) ஆதிமக்கள்: இன்றைய கேரளம் உட்பட, மண்டைய தமிழகத்தில் ஆதிகுடிமக்கள் எனப்படுபவர்கள் இன்று நம் அரசால் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மக்களும் இன்று காடுகளில் தங்கிவரும் மலைவாசிகளுமாவார்கள். ஆதி திராவிடர்கள் என அழைக்கப்படுபவர்கள் இவர்களே ஆவர். மதங்களின் வருகைக்கு முன் இவர்களுக்கிடையில் ஒரு ஆட்சி முறையோ, சமூக சட்ட வரம்புகளோ யாதும் இல்லாமலிருந்தது. கேரளப் …
Read More »