Featured Posts

ஜமாஅத் தொழுகையில் வரிசையைச் சீராக்குதல்..

248- வரிசையை ஒழுங்குப் படுத்துங்கள்! வரிசைகளை ஒழுங்குப் படுத்துவது தொழுகையை நிலைப் பெறச் செய்வதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி-723: அனஸ் (ரலி) 249- தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் எங்கள் பக்கம் முன்னோக்கி, வரிசைகளை நேராக்குங்கள்! நெருக்கமாக நில்லுங்கள்! ஏனெனில் என் முகத்துக்குப் பின்புறமாகவும் உங்களை நான் காணுகிறேன் எனக் கூறினார்கள். புஹாரி-719: அனஸ் (ரலி) 250- உங்களது வரிசைகளை நேராக அமைத்துக் …

Read More »

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் – 9.

எங்களை வெறியூட்டி களத்தில் இறக்கிய நம்பியாரின் கூட்டத்திற்கோ எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. எங்களுக்கு ஊக்கம் கொடுத்துவிட்டு அவர்கள் தப்பித்துக் கொண்டார்கள். 40 நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். இந்த மருத்துவமனை வாழ்க்கையில் எனக்கு ஒரு உற்ற துணையாக ஒருவள் இருந்தாள். அவள் வேறு யாருமில்லை நான் ஆர்.எஸ்.எஸ்ஸில் சாகா பயற்சிப் எடுக்கும் பொழுது பக்கத்தில் சாந்தா என்ற ஒரு பெண்ணுடன் பழகிவந்தேன். அந்தப் பழக்கம் காதலாக உருவானது. அவள் …

Read More »

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் – 8.

வேணுகோபாலன் நம்பியார் என்ற எங்களது BMS தலைவன் [இது ஆர்.எஸ்.எஸ்ஸின் தொழிலாளர் பிரிவு]என்னிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தார். CITU வைச் சார்ந்த தங்கப்பன் என்ற நபரை கொலை செய்யவேண்டும் என்பதுதான் அந்தப் பொறுப்பு. பெரும்படம் என்ற இடத்தைச் சேர்ந்த பிரகாசன், சித்திரப்புழையில் உள்ள ப்ரதீப்குமார், தலைவர் வேணுகோபாலன் நம்பியார் இவர்கள் எல்லாம் சேர்ந்து [தங்கப்பனை கொல்வதற்கு] ஒரு இரவு இரகசியத் திட்டம் தீட்டினோம். அடுத்த நாள் காலையில் தங்கப்பனின் எல்லா …

Read More »

இமாமை முந்துதல் கூடாது..

247- உங்களில் ஒருவர் தொழுகயில் இமாமை முந்தித் தமது தலையை உயர்த்துவதால் அவருடைய தலையை கழுதையுடைய தலையாகவோ அல்லது அவருடைய உருவத்தை கழுதையுடைய உருவமாகவோ அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்சவேண்டாமா? என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி-691: அபூஹூரைரா (ரலி)

Read More »

தொழுகையில் பேணுதல்..

245- நான் கிப்லாத் திசையில் மட்டும் பார்க்கிறேன் என்று நீங்கள் கருதுகிறீர்களா? அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் அடக்கமாக இருப்பதும் உங்களின் ருகூவும் எனக்குத் தெரியாமலிருப்பதில்லை. நிச்சயமாக எனது முதுகுக்குப் பின்புறம் உங்களை நான் பார்க்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-418:அபூஹுரைரா (ரலி) 246- அல்லாஹ்வின் மேல் ஆணையாக ருகூவையும் ஸஜ்தாவையும் ஒழுங்காகச் செய்யுங்கள்! நான் எனக்குப் பின்புறமாக-அல்லது என் முதுகுக்குப் பின்- நீங்கள் ருகூவு செய்யும் …

Read More »

சபாஷ்!!!

IIM-இல் சேர்வதற்கான நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்ட மாணவனிடம்,தேர்வாளர் “பத்து சுலபமானக் கேள்விகளைக் கேட்கவா? அல்லது ஒரேயொரு கடினமான கேள்வியைக் கேட்கவா? என்றார். மாணவனுக்கு சற்று குழப்பமாக இருந்தது. சில நொடிகள் கண்களைமூடி நன்கு யோசித்து “ஒரேயொரு கடினமான கேள்வியைக் கேளுங்கள்!” என்றான். தேர்வாளர்: உன் பதிலை வைத்தே உன்னை கல்லூரியில் சேர்ப்பதும் கேர்க்காததும் முடிவு செய்யப்படும். ஆகவே, நன்கு யோசித்து தெரிவு செய்!. மாணவன்: நம்பிக்கையாகச் சொல்கிறேன்! ஒரேயொரு கடினமான …

Read More »

தஸ்பீஹ் கூறுதலும் கை தட்டுதலும்..

244- தஸ்பீஹ் கூறுதல் ஆண்களுக்கு உரியதும் கைதட்டுதல் பெண்களுக்குரியதுமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-1203: அபூஹூரைரா (ரலி)

Read More »

ஆடு மேய்ப்பவனுக்கு பெண் கொடுக்கலாமா?

இஸ்லாம் மார்க்கத்தின் நிழலில் நபித்தோழர் பிலால் (ரலி) அவர்களுக்குக் கிடைத்த சிறப்பு – என்பது பாரம்பர்யமோ, குலச்சிறப்பு, குடும்பச் சிறப்பு, பொருளாதார வலிமையோ இல்லாத, விலை கொடுத்து வாங்கிய, எஜமானின் கட்டளைக்கு உழைத்த ஒரு கருத்த அடிமைக்கு இத்தனை மதிப்பா? என்று – குறைஷிகள் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு உயர்வாகவே இருந்தது. ”எங்கள் தலைவர் அபூபக்ர், எங்கள் மற்றொரு தலைவர் பிலாலுக்கு விடுதலை வழங்கி விட்டார்” என்று நபித்தோழர் …

Read More »

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் – 7.

திப்பு போர் செய்யும் போது நமது மதத்தின் ஆண்களையெல்லாம் வெட்டி வீழ்த்திவிட்டு நம் சகோதரிகளான இந்துப் பெண்களைச் சிறை வைத்து ஆசை தீர கற்பழிப்பான். ஆலுவாமணிப்புரத்தைச் சேர்ந்த சிவனின் அனுக்கிரகத்தால் நமக்கு அப்போது அதிக நஷ்டம் ஏற்படவில்லை. என்றெல்லாம் வெறுப்பூட்டும் பொய்களை எங்களுக்குச் சொல்லித் தருவார்கள். இதையெல்லாம் இதயத்தில் சுமந்த என்னைப் போன்றவர்கள் முஸ்லிம்களை கடுமையாக வெறுத்தோம்; எதிர்த்தோம்; அழிக்க ஆசை கொண்டோம். முஸ்லிம்களின் தாடியைக் கண்டால் வெறுப்பு; அவர்களின் …

Read More »

இமாம் தொழுகைக்கு வரப்பிந்தினால்…

243- அம்ர் பின் அவ்ப் குடும்பத்தாரிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் சென்றிருந்த போது, அங்கு தொழுகையின் நேரம் வந்து விட்டது. அப்போது முஅத்தின், அபூபக்ர்(ரலி) இடம் சென்று, நான் இகாமத் சொல்லட்டுமா? நீங்கள் தொழுகை நடத்துகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு அபூபக்ர்(ரலி) ஆம்! என்று கூறிவிட்டுத் தொழுகை நடத்த ஆரம்பித்தார்கள். மக்கள் தொழுதுக் கொண்டிருக்கும் போது நபி(ஸல்) அவர்கள் வந்து விட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் வரிசைகளை விலக்கிக் கொண்டு …

Read More »