கடந்த காலங்களில் வழங்குபவர்: அப்துல் வதூத் ஜிஃப்ரி
Read More »இறை அத்தாட்சிகளை கண்டு ஈமானிய உறுதி கொள்தல்..
92- (இறந்து விட்டவற்றுக்கு அல்லாஹ் எப்படி உயிரூட்டுகிறான் என்ற சந்தேகம் இறைத்தூதர்களுக்கு வருவதாயிருந்தால்) நாமே இப்ராஹீம் (அலை) அவர்களை விடவும் சந்தேகம் கொள்ள அதிகத் தகுதியுடையவர் ஆவோம்.(ஆகவே, சந்தேகப்பட்டு அவர்கள் அப்படிக் கேட்கவில்லை. திருக்குர்ஆனின் படி) இப்ராஹீம் (அலை) அவர்கள், என் இறைவா! நீ இறந்தவர்களை எப்படி உயிராக்குகின்றாய் என்று எனக்குக் காட்டு என்று கேட்டபோது அல்லாஹ் நீங்கள் நம்பிக்கைக் கொள்ளவில்லையா? என்று கேட்டான். அவர்கள் ஆம், (நம்பிக்கைக் கொண்டுள்ளேன்) …
Read More »விசுவாசத்தில் பலவீனர்களுக்கு உதவி புரிதல் பற்றி …
91- நபி (ஸல்) அவர்களுடன் நான் அமர்ந்திருந்தபோது நபி (ஸல்) அவர்கள் சிலருக்கு கொடுத்தார்கள். சிலரைவிட்டார்கள். (யாருக்கு கொடுக்கவில்லையோ) அவர் எனக்கு மிகவும் வேண்டியவராவார். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! ஏன் அவரை விட்டு விட்டீர்கள்? அல்லாஹ்வின் மீது ஆணையாக அவரை நான் மூமின் என்றே கருதுகிறேன் என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவரை முஸ்லிம் என்று சொல் என்று சொன்னார்கள். சிறிது நேரம் நான் மவுனமாக இருந்தேன். …
Read More »விசுவாசம்!
ஒருவர் பயந்தால் தம் விசுவாசத்தை மறைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி……… 90- மக்களில் இஸ்லாத்தை ஏற்றிருப்பதாகக் கூறுபவர்களின் பெயர்களை எனக்காக எழுதுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அவர்களுக்காக ஆயிரத்து ஜந்நூறு பெயர்களை எழுதினோம். அப்போது நாங்கள், நாம் ஆயிரத்து ஜநூறு பேர் இருக்க (எதிரிகளுக்கு) நாம் பயப்படுவதா? என்று கேட்டோம். (ஆனால் பிற்காலத்தில்) நாங்கள் அச்சப்பட்டுக் கொண்டு தனியாகத் தொழுமளவிற்கு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததை நான் பார்த்திருக்கின்றேன். புகாரி-3060: …
Read More »UN = அயோக்கிய நாடக சபை
இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படவும் பிணக்கம் கொண்ட நாடுகளுக்கிடையேயானப் பிரச்சினைகளைச் சுமூகமாகத் தீர்த்து வைக்கவும் உருவாக்கப் பட்டதுதான் UNITED NATIONS எனும் ஐக்கிய நாடுகள் சபை. இதில் அந்தத்த நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் மட்டுமின்றி சர்வாதிகாரிகள், மன்னர்கள், இராணுவ அதிகாரிகளின் பிடியிலிருக்கும் நாடுகளும் இடம் பெற்றுள்ளன. உலகமகா கொடியவனாக ஜெர்மானிய ஹிட்லரைப் போன்ற ஆதிக்க வெறியர்களிடமிருந்து மக்களைக் காக்க அனைத்து நாடுகளும் பங்கேற்கும் அங்கமாக …
Read More »ஈமானின் இறுதி நிலை
89- பாம்பு தன் புற்றில் (சென்று) அபயம் பெறுவது போல் ஈமான் (இறைநம்பிக்கை) மதீனாவில் அபயம் பெறும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-1876: அபூஹூரைரா(ரலி)
Read More »மாமனிதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை பின்பற்றுவோம் (வீடியோ)
மாமனிதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை பின்பற்றுவோம் வழங்குபவர்: மவ்லவி ஜமால் முஹம்மத் மதனி
Read More »கண்ணதாசன் கண்ட இஸ்லாம்!
கண்ணதாசன் கண்ட இஸ்லாம்! (ஆய்வு) “இஸ்லாமியத் திருமறையின் முதல் இரண்டு பாகங்களைப் பூர்த்தி செய்ததில் என் பங்கும் முழுக்க இருந்தாலும், அதன் கவிதை மற்றும் ஒவ்வொரு வாக்கியத்தின் தமிழ் நடையும் கவிஞரால் சரி செய்யப்பட்டவையாகும். “அல்ஃபாத்திஹா” எனும் “அல்ஹம்து சூராவை” அழகிய தமிழில் “திறப்பு” கவிதையாகக் கவிஞர் தந்துள்ள சிறப்பு ஒன்றுக்கே அவர் இறைவனின் கருணைக்கும் மகிழ்ச்சிக்கும் என்றென்றும் பாத்திரமாகி இருப்பார் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.” அப்பாஸ் இப்ராஹீம்“இனிய தமிழில் …
Read More »குழப்பங்களின் பரிகாரம் நல்லறங்களே……
88- நாங்கள் உமர் (ரலி) இடம் அமர்ந்திருந்த போது, நபி (ஸல்) அவர்கள் ஃபித்னாவைப் பற்றிக் கூறியதை உங்களில் அறிந்தவர் யார்? என்று கேட்டார்கள். (ஃபித்னா என்ற வார்த்தைக்குச் சோதனைகள், துன்பங்கள் என்ற பொருளும் குழப்பங்கள் என்ற பொருளும் உண்டு). நபி (ஸல்) அவர்கள் கூறிய மாதிரியே நான் அதை அறிந்திருக்கிறேன் என்றேன். அதற்கு உமர் (ரலி) நீர் அதற்குத் தகுதியானவர் தாம் என்றனர். ஒரு மனிதன் தமது குடும்பத்தினரிடமும் …
Read More »பிள்ளைகளிடையே பாரபட்சம்
அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளுக்கிடையே பாரபட்சம் சிலர் தங்களுடைய பிள்ளைகளில் சிலரை விடுத்து சிலருக்கு மட்டும் அன்பளிப்புகள், வெகுமதிகள் வழங்குகின்றனர். ஷரீஅத் ரீதியிலான தக்க காரணம் இல்லையெனில், சரியான கூற்றின் பிரகாரம் இவ்வாறு செய்வது ஹராமாகும். உதாரணமாக தம் பிள்ளைகளில் ஒருவனுக்கு மற்ற பிள்ளைகளூக்கு ஏற்படாத ஒரு தேவை ஏற்பட்டு விட்டதெனில் – உதாரணமாக அவன் நோயாளியாக இருக்கிறான், அல்லது அவனுக்கு கடன் இருக்கிறது, அல்லது திருக்குர்ஆனை மனனம் செய்ததற்காக அவனுக்கு …
Read More »