216- தொழுகைக்காக (பாங்கு என்ற) அழைப்புக் கொடுக்கப்படும் போது, பாங்கு சப்தத்தை கேட்ககூடாது என்பதற்காகச் சப்தமாகக் காற்றுப் பிரிந்தவனாக ஷைத்தான் புறமுதுகு காட்டி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடித்ததும் வருகிறான் தொழுகைக்கு இகாமத் கூறும்போதும் ஓடுகிறான். இகாமத் சொல்லி முடித்ததும் முன்னோக்கி வந்து தொழுகையாளிக்கும் அவருடைய மனதிற்குமிடையில் இருந்துக்கொண்டு தொழுகையாளி அதற்கு முன்புவரை நினைத்திராத விஷயங்களையெல்லாம் அவருக்கு நினைவூட்டி, இதை நீ நினைத்துப்பார்; அதை நீ நினைத்துப்பார் என்று சொல்லிக் …
Read More »RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் – முன்னுரை.
“கேரளத்தில் குறுப்பு இனத்தைச் சார்ந்த உயர்குல மாதவிக்குட்டியை பறையனான இந்த வேலாயுதன் ஒரு போதும் சந்திக்க வாய்ப்பே இருந்திருக்காது. ஆனால் இஸ்லாம் என்ற கோட்பாட்டின் கீழ் நாங்கள்(பிலாலும், சுரையாவும்) இணைந்ததால் எங்களுக்குள்ளே பேச வாய்ப்பு கிடைத்தது. ஆதலால் எனது சமூகமான தாழ்த்தப்பட்ட தலித் இனத்திற்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்: நீங்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. நீங்கள் அடிமைத்தனத்திலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ள இஸ்லாமே நன்மருந்து. தைரியமாக அல்லாஹ்வின் இந்த அழகிய …
Read More »ஆபாசம் Vs. அமெரிக்கா
அமெரிக்காவில் விமானத்தில் பயணம் செய்யவிருந்த ஒருதாய், தன் குழந்தைக்கு பாலூட்டிய போது, விமானப் பணிப்பெண் ஒரு சால்வையைக் கொடுத்து மார்பை மறைத்துக் கொண்டு பாலூட்டச் சொன்னாராம். பொது இடத்தில் குழந்தைக்கு பாலூட்டும் உரிமையை யாரும் தடுக்க முடியாது என்று அத்தாய் மறுத்துவிட்டதால், பொது இடத்தில் ஆபாசமாக நடந்ததாகக் கூறி விமானத்திலிருந்து குடும்பத்துடன் இறக்கி விடப்பட்டிருக்கிறார். இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த இச்சம்பவத்தை பாதிக்கப்பட்ட பெண் பெண்ணுரிமை அமைப்புகளிடம் எடுத்துச்சென்று சம்பந்தப்பட்ட …
Read More »பாங்குக்கு பதில் எப்படி கூறுவது?
215- பாங்கு சொல்லப்படுவதை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்களும் சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-611: அபூஸயீதுல் குத்ரீ (ரலி)
Read More »இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (Index)
நூலைப் பற்றி: இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிஞர் மௌலானா மௌதூதி அவர்கள் 1963 டிசம்பர் 10 ஆம் தியதி கராச்சியில் நிகழ்த்திய பேருரையின் தமிழாக்கமே இச்சிறு நூல். இலங்கை ஜமா அத்தினரால் மொழி பெயர்க்கப்பட்டு கத்தரிலுள்ள இஸ்லாமிய பிரச்சார மையத்தினர் மற்றும் குவைத்திலுள்ள உலக இஸ்லாமிய மாணவர் கூட்டமைப்பின் துணையுடன் லபனானில் உள்ள ஹோலி குரான் பப்ளிசிங் ஹவுசினரால் வெளியிடப்பட்டது. இனி நூலின் முன்னுரையிலிருந்து சில வரிகள்.
Read More »பாங்கு எப்படி வந்தது?
213- முஸ்லீம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்த போது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப் படுவதில்லை. அவர்கள் ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒரு நாள் இது பற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர். அப்போது சிலர், கிருத்தவர்களைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர் யூதர்கள் வைத்திருக்கின்ற கொம்பைப் போன்று நாமும் கொம்பூதலாமே என்றனர். அப்போது உமர் (ரலி) தொழுகைக்காக அழைக்கின்ற ஒருவரை ஏன் ஏற்படுத்தக்கூடாது? என்று கூற உடனே …
Read More »தரீக்காக்கள் இஸ்லாத்தில் உள்ளதா?
ஸூஃபியிஸம்: ஸூஃபிகள், ஸாதுலிய்யா தரீக்கா, காதிரிய்யா தரீக்கா, நூரிய்யா தரீக்கா என்று பல தரீக்காக்களை உருவாக்கி மார்க்கத்தைப் பல பிரிவுகளாக பிரித்து விட்டனர்.
Read More »தூக்கம்…
212- தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின் நபி (ஸல்) அவர்கள் பள்ளியின் பக்கத்தில் ஒரு மனிதரோடு இரகசியமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். தொழுகைக்கு வராமல் நீண்ட நேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததால் மக்கள் தூங்கி விட்டனர். புகாரி-642: அனஸ் (ரலி)
Read More »இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (25)
சமயப்பற்றற்ற சீர்திருத்தக் கொடியை முதன் முதலாக ஏந்திய துருக்கி நாட்டை எடுத்துகொள்வோம். பயங்கரப் போராட்டத்துக்குப்பின் துருக்கி மக்கள் நேச நாடுகளின் கட்டுப்பாட்டுத் தளையிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டனர். ஆனால் அடுத்தகணமே துருக்கித் தலைவர்கள் அங்கு மேனாட்டு அடிப்படையிலான ஒரு ஜனநாயக அரசை அமைத்து விட்டனர். மக்கள் எதிர்பார்த்தது இதுவல்ல. ஆனால் இதனை எதிர்த்து அவர்களுக்கு ஒன்றும் செய்யமுடியவில்லை. இராணுவத்தின் பலமான ஆதரவோடு மேனாட்டு வாழ்க்கை முறையையும் பழக்கங்களையும் மட்டுமன்றி உடையைக்கூட அந்நாட்டுத் …
Read More »இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (24)
தற்போதைய தகராறுஇன்று ஒவ்வொரு முஸ்லிம் நாட்டிலும் தீர்வு காணப்படாத நெருக்கடி நிலை உருவாகியிருப்பதைப் பார்க்கின்றோம். மக்களும் அவர்களின் தலைவர்களும் ஒன்றுக்கொன்று எதிரான இரு அணிகளில் நிற்கின்றனர். தலைவர்கள் மக்களை மேனாட்டு வாழ்க்கை முறையைப் பின்பற்றுமாறு செய்யக் கங்கணங்கட்டியுள்ளனர். மேனாட்டு முறைகள், ஒழுக்கம், பழக்கவழக்கங்கள், மேனாட்டு நம்பிக்கைகளையும் கூட ஏற்கச்செய்ய மக்கள் தூண்டப்படுகின்றனர். மேனாட்டு ஒழுக்கம் கோட்பாடுகளே மக்களின் நடத்தையில் ஆதிக்கம் செலுத்த வேண்டும்; மேனாட்டு அளவுகோல் கொண்டே இஸ்லாம்கூட மதிப்பீடு …
Read More »