அல்குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களுமே இஸ்லாத்தின் மூலாதாரங்களாகும். அல்குர்ஆனில் “அல்லாஹ்வைப் பின்பற்றுங்கள், அவனது தூதரையும் பின்பற்றுங்கள்” என அனேக ஆயத்துக்கள் கூறுகின்றன. அவனது தூதரைப் பின்பற்றுங்கள் என்ற கட்டளையைத்தான் ஹதீஸைப் பின்பற்றுதல் என நாம் புரிந்து செயற்பட்டு வருகின்றோம். இந்த வகையில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நம்புவதும் அவற்றை ஏற்று நடப்பதும் நபி(ஸல்) அவர்களது நபித்துவத்தை நம்புவதையும் அதை ஏற்றுக் கொள்வதையும் வெளிப்படையாகக் காட்டும் முக்கிய அம்சங்களாகும்.
Read More »பொதுவானவை
திருக்குர்ஆனில் விளையாடும் குழப்பவாதிகள்
வழங்குபவர்: மௌலவி முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி வெளியீடு: இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை
Read More »கஸ்ஸா நகரின் கோரக் காட்சிகள்!
பஹ்ரைன் ஸல்மானியா மெடிக்கல் சென்டரிலிருந்து கஸ்ஸாவுக்கு மருத்துவ சேவைக்குச் சென்று திரும்பியுள்ள டா க்டர் அலி அல் இக்ரி மற்றும் நபீல் தம்மாம் ஆகியோர் கூறிய செய்திகள் கல்நெஞ்சங்களையும் கரையச் செய்வதாய் உள்ளன.விமான நிலையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது இருவரும் கூறிய செய்திகளாவன.
Read More »ஒரு ஜோடி போதாது!
கடந்த மூன்று வாரங்களாக பாலஸ்தீனர்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இஸ்ரேலின் அடக்குமுறைகள், அநியாயங்கள், அராஜகங்கள், கொடுமைகள், படுகொலைகள், இனச்சுத்திகரிப்பு மற்றும் என்னென்ன மனிதகுலவிரோதச் செயல்கள் உண்டோ அத்தனையையும் செய்துமுடித்துக் களைத்துத்துப்போய், தற்போது போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது. இதை உலகநாடுகள் வரவேற்றுள்ளதோடு நிதியுதவிகளும் நிவாரணமும் வழங்க ஆயத்தமாகியுள்ளன. புதிய உலக ரட்சகனாகப் பேசப்படும் ஒபாமா, தன் பங்குக்கு நிவாரணம் அறிவிக்கக்கூடும். முதற்கட்டமாகப் போர் நிறுத்த அறிவிப்பை ஒபாமா வரவேற்றுள்ளார். இதோ கவுண்டவுன் …
Read More »ஃபலஸ்தீன் – தொடரும் யூத பயங்கரவாதம்!
மோசடி, சூழ்ச்சி, துரோகம், நயவ ஞ்சகம் இவற்றுக்குப் பெயர்போனவர்கள் யூதர்கள் என்றால் மிகையாகாது. வரலாறு நெடுகிலும் இத்தகைய குணம் கொண்ட யூதர்கள் இன்று உலகிலேயே மிகப் பெரிய பயங்கரவாத சக்திகளாக விளங்குகின்றனர். “உங்களைக் கடுமையாக நோவினை செய்து, உங்கள் ஆண்மக்களை அறுகொலை செய்து உங்கள் பெண்மக்களை மட்டும் வாழ விட்ட ஃபிர்அவ்னிடமிருந்து உங்களைக் காப்பாற்றினானே அதை நினைத்துப் பாருங்கள்” (2:49) என்று அல்லாஹ் இந்த யூதர்களுக்குச் செய்த அருட்கொடையை நினைவூட்டிய …
Read More »வீணாகும் நேரம் (ஆண்கள் பிரிவில் முதல் பரிசு பெற்ற கட்டுரை)
ஜித்தா இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி 2009, ஆண்கள் பிரிவில் முதல் பரிசு பெற்ற கட்டுரை – முஹம்மத் சாஹுல் ஹமீது, Saudi Oger Co., Jeddah நேரம் குறித்து எழுதுவது என்பது வாழ்க்கை குறித்து எழுதுவதாகும். ஆகவே இந்தத் தலைப்பு ஒரு பரந்து விரிந்த பொருள் கொண்டதாகும். இருப்பினும் இதன் சாராம்சத்தை முன்று உபதலைப்பின் கீழ் பிழிந்து விடலாம். அவை: 1) நேரத்தின் முக்கியத்துவம், 2) நேரம் வீணாவதற்கான காரணங்கள் 3) …
Read More »வீணாகும் நேரம் (ஆண்கள் பிரிவில் இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை)
ஜித்தா இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி (2009), ஆண்கள் பிரிவில் முதல் பரிசு பெற்ற கட்டுரை – முஃப்தி, MSP Co., Jeddah பொன்னை விட மேலானது “காலம் பொன் போன்றது” என்பது எல்லாரும் அறிந்ததொரு பழமொழி. ஆனால் காலம் பொன்னைவிட மேலானது என்றும் அதை எப்படி பயன்படுத்துவது என்றும் சொன்ன ஒரே மார்க்கம் இஸ்லாம்தான். நேரத்தை விழுங்கும் பொழுதுபோக்குகளை பட்டியலிட்டால் இந்த கட்டுரை போதாது. அதில் சினிமா, இசை, புறம் பேசுதல், …
Read More »வீணாகும் நேரம் (ஆண்கள் பிரிவில் மூன்றாம் பரிசு பெற்ற கட்டுரை)
ஜித்தா இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி (2009), ஆண்கள் பிரிவில் மூன்றாம் பரிசு பெற்ற கட்டுரை – மாலிக் கான் எல்லாப் புகழும் அல்லாஹ்-வுக்கே உரித்தாகுக. பூமியைப் படைத்தபோதே அல்லாஹ் காலத்தின் அளவையும் நிர்ணயம் செய்துவிட்டான். மாதங்களின் எண்ணிக்கை பன்னிரெண்டு என்றும் அதற்கான காலவரையை நாம் அறிந்துகொள்ள சூரியனையும், சந்திரனையும் தத்தமது பாதைகளில் நிர்ணயித்தபடி சுழலவும் செய்துள்ளான். இரவை இருளாக்கி சுகம் பெறுவதற்கும், பகலைப் பிரகாசமாக்கி அவன் அருட்கொடைகளைத் தேடிக்கொள்ளவும் அல்லாஹ் …
Read More »பொன்மாலைப் பொழுது
அன்றொரு வியாழனின் இனிய மொன்மாலைப் பொழுது, மறுநாள் விடுமுறையாதலால், Holiday ஐ Holy day-யாக வரவேற்றுக் குதூகலத்துடன் தேனீரை ருசித்துக் கொண்டே தொலைக்காட்சியை ரசித்தவாறு கல்யாணம் பண்ணிய பிரம்மச்சாரிகள் (Bachlors) அறையில் அமர்ந்திருந்தோம். தொலைக்காட்சி சிறுவர்கள் நிகழ்ச்சியில் ஒரு ஒல்லிப்பிச்சான் மாணவன் வீரபாண்டி கட்டபொம்மனாக சூளுரைத்துச் சென்றான். அடுத்து ஏதோ ஒரு வித்யாலயா மாணவிகளின் பரத நாட்டியம் – தா.. தை.. தத்.. தா..
Read More »மும்பை தாக்குதல் – கேட்கக்கூடாதக் கேள்விகள்!
மும்பை தாக்குதல் குறித்து பல்வேறு வகையான யூகங்கள் செய்திகளாகவும் அறிக்கைகளாகவும் உலாவி வருகின்றன. தொலைக்காட்சி ஊடகங்கள் நேரலைக்காட்சியாக “Mumbai Under Attack” “Mumbai in Fire” “Mumbai 26/11” எனத்தலைப்பிட்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஒளிபரப்பி ஊடகக் கடமையை நிறைவு செய்தனர். அடுத்ததாக இத்தாக்குதலுக்குப் பாகிஸ்தான், லஷ்கரே தோய்பா etc காரணம் என்று அத்வானிமுதல் தினமலர்வரை சொன்னதன்பேரில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மாற்றப்பட்டுவிட்டார்கள். அமெரிக்கா முதல் மேற்கத்திய நாடுகள் ‘அல்காயிதா’ முத்திரைகுத்தி …
Read More »