Featured Posts

பொதுவானவை

ஹிந்துஸ்தானத்தில் முஸ்லிம்களுக்கு 100% ஒதுக்கீடு…!!!

தீவிரவாதம்,பயங்கரவாதம் பற்றி யார்தான் பேசுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போச்சு! மலர்மன்னனின் ‘ஹிந்துஸ்தானத்தின் மீது பயங்கரவாத முத்திரை விழப் போகிறது!’ திண்ணைக் கட்டுரையை வாசித்த பிறகு இப்படித்தான் எண்ணத் தோன்றியது. “மலர்மன்னன் தீவிரவாதத்தை எதிர்த்து எழுதக்கூடாதா?” என்று யாராவது கேட்க நினைக்கலாம். மலர்மன்னன் தாராளமாக எழுதலாம்; அப்படியே, தேசிய ஒருமைப்பாடு குறித்து பால்தாக்கரேயும், சமய சகிப்புத்தன்மை குறித்து நரேந்திர மோடியும், இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் குறித்து மகிந்த ராஜ பக்சேவும், …

Read More »

பர்தாவைப் பிடித்திழுக்கும் பிரதிபா படீல்

இந்திய ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திருமதி.பிரதிபா படீல், “இந்தியப் பெண்கள் பர்தா அணிவது மடமை; இப்பழக்கம் முகலாயர்களின் படையெடுப்பிலிருந்து பெண்களைக் காத்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்டது. தற்போது நாம் சுதந்திர இந்தியாவில் வாழ்கிறோம். ஆகவே இப்பழக்கத்தை கைவிட வேண்டும்!” என்று சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றியுள்ளார். ராஜஸ்தானில் ஆளுநராக இருந்தபோது பா .ஜ.க அரசால் கொண்டுவரப்பட்ட மதமாற்றத் தடை …

Read More »

ஒற்றைச்சாளர வீடும், வீடில்லாத சாளரங்களும்.

பேராசிரியர் ஷாம்(தருமி) அவர்கள் எழுதிய பதிவைப்பற்றிய என்னுடைய ஒரு எதிர்வினையில், நான் அவரைத் தனிமனித தாக்குதல் செய்துள்ளதாக நொந்து கொண்டுள்ளார். இங்கு ‘நொந்து கொண்டுள்ளார்’ என்பதையும் தனிமனிதத் தாக்குதலாகக் கருத மாட்டார் என்று நம்பிக்கையில் ‘முடிந்தவரை’ என் தரப்பு விளக்கத்தைச் சொல்ல வேண்டியுள்ளது. தமிழ் வலைப்பதிவுலகில் மதிக்கப்படும் ஒருசில வலைப்பதிவர்களில் தருமி என்ற புனைப்பெயர் கொண்ட திரு.ஷாம் அவர்களை எள்ளலோ ஏளனமோ செய்து அவரின் கேள்விகளையோ பதிவுகளையோ புறந்தள்ள வேண்டிய …

Read More »

"ஹலோ மிஸ்டர் NRI"

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கான தொலைபேசிக் கட்டணத்தை தனியார் தொலைபேசி நிறுவனங்கள் கணிசமாக குறைத்துள்ளன.இதையடுத்து பி.எஸ்.என்.எல். நிறுவனமும் இந்த நாடுகளுக்கான கட்டணத்தை வெகுவாகக் குறைத்துள்ளது. தனியார் நிறுவனங்களை விட பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கட்டணம் குறைவாக மாறியுள்ளது. புதிய விகிதப்படி, அமெரிக்காவிற்கு பேச நிமிடத்திற்கு ரூ.1.75 எனவும், வளைகுடா நாடுகளுக்கு பேச ரூ.6.75 என்றும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இது தனியார் நிறுவனங்களை விட நிமிடத்திற்கு 25 பைசா குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. …

Read More »

தி.நகரில் தருமிக்கு என்ன வேலை?

தருமியின் சென்ற மாதப்பதிவில்”குண்டு எல்லாம் எதற்கு?” என்ற நாத்திகப் பதிவைக் காண நேர்ந்தது. உடனடியாக நாமும் கொஞ்சம் பகுத்தறிவைக் கொட்டி எதையாச்சும் பொதுநல நோக்கில் எழுதலாம் என்று ஆசைதான். ஆண்டு விடுமுறையில் ஊருக்குச் செல்லும் பரபரப்பில் இருந்ததாலும் தருமி தான் கடைசியாக வாங்கிய நோக்கியா போனை விட்டு இனி வேறெங்கும் செல்லப் போவதில்லை :-) என்ற நம்பிக்கையில் ஆறஅமர எழுதிக் கொள்வோமே என்று அப்பதிவுக்கான பின்னூட்டங்களை மட்டும் வாசித்து வந்தேன். …

Read More »

பொய் சாட்சி சொல்லுதல்

அல்லாஹ் கூறுகிறான்: “எனவே விக்கிரகங்கள் எனும் அசுத்தத்திலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். பொய்யான பேச்சுகளிலிருந்தும் விலகியிருங்கள். அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காது, அவனுக்கே ஒருமனப்பட்டவர்களாய்த் திகழுங்கள்” (22:30,31) அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”பெரும் பாவங்களில் மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள்! அதற்கு நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்றோம். அதற்கவர்கள், அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோரை நிந்திப்பது …

Read More »

தங்கம், வெள்ளிப் பாத்திரங்கள்

தற்காலத்தில் வீட்டிற்குத் தேவையான சாமான்களை விற்பனை செய்யும் கடைகளில் எந்தக் கடையிலும் தங்கம், வெள்ளிப் பாத்திரங்கள் அல்லது தங்கம், வெள்ளி முலாம் பூசப்பட்ட பாத்திரங்கள் இல்லாமலில்லை. அவ்வாறே செல்வந்தர்களுடைய வீடுகளும், பல ஹோட்டல்களும், இன்னும் சொல்வதானால் இந்த தங்கம், வெள்ளிப் பாத்திரங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிலர், சிலருக்கு வழங்கும் உயர்ந்த அன்பளிப்புப் பொருள்களாகவும் ஆகி விட்டன. இன்னும் சிலர் தங்களுடைய வீடுகளில் அவற்றை வைத்துக் கொள்வதில்லை. ஆயினும் மற்றவர்களுடைய வீடுகளிலும் …

Read More »

ஒரு துளியேனும் மது அருந்துதல்

அல்லாஹ் கூறுகிறான்: “இறைநம்பிக்கை கொண்டவர்களே! சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருக்கத்தக்க ஷைத்தானியச் செயல்களாகும். அவற்றைத் தவிர்ந்து கொள்ளுங்கள். அதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம்” (5:90)மதுவைத் தவிர்ந்துக் கொள்ளும்படி கட்டளையிட்டிருப்பது அது ஹராம் என்பதற்கு பலமான ஆதாரமாகும். மதுவை அடுத்து அல்லாஹ் பலிபீடங்களை கூறியுள்ளான். அவை காஃபிர்களுடைய கடவுள்களான விக்கிரகங்களாகும். (விக்கிரகங்கள் எந்த அளவுக்கு ஹராமோ அதுபோல மதுவும் ஹராமாகும் என்பதை இது காட்டுகிறது) இனி, அல்லாஹ் …

Read More »

ஹராமானவற்றை உண்ணுதல்

இறையச்சம் இல்லாதவன் செல்வத்தை எங்கிருந்து சம்பாதிக்கிறோம் அதை எவ்வழியில் செலவு செய்கிறோம் என்பதைப் பொருட்படுத்த மாட்டான். மாறாக, அவனுடைய அக்கரை தன் செல்வத்தை அதிகப்படுத்துவதிலேயே இருக்கும். அது திருடுதல், லஞ்சம் வாங்குதல், பிறருடைய பொருளை அபகரித்தல், மோசடி செய்தல், ஹராமான வியாபாரம், வட்டி கொடுக்கல் வாங்கல், அநாதையின் சொத்தை அபகரித்தல் ஆகியவற்றின் மூலமாகவோ அல்லது ஜோதிடம், விபச்சாரம், இசை போன்ற ஹராமான காரியங்களின் பேரில் கிடைக்கக் கூடிய கூலியின் மூலமாகவோ …

Read More »