ஷிர்க் இடம்பெற வில்லையானால் ஓதி பார்ப்பதில் குற்றமில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கிறார்கள். இணை வைத்தலின் ஏதாவதொரு அம்சம் கலந்து விட்டால் கூட அத்தகைய ஓதிப்பார்த்தல் தடுக்கப்பட்டுள்ளது. ஜின்களைக் கொண்டு காவல் தேடி ஓதிப்பார்த்தலும் விலக்கப்பட்டுள்ளது.
Read More »நூல்கள்
இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (7)
இஸ்லாத்தின் வெற்றியின் மர்மம் எண்ணிலடங்கா இடர்பாடுகளுக்கு மத்தியில் முஸ்லிம் படைகள் அடைந்த பெரும் வெற்றி கண்டு அக்காலத்தில் அவற்றை அவதானித்தவர்கள் வியப்படைந்தனர். ஒரு சிறு படை, சிறந்த ஆயுதம் கொண்ட பெரும் படைகளை எப்படி துவம்சம் செய்ய முடிந்தது என்பது அவர்களுக்கு விளங்க முடியாத புதிராக இருந்தது. அவர்கள் முஸ்லிம் படையின் ஆள் பலத்தை மட்டுமே கருத்தில் கொண்டனர். அதனால் தான் அவர்கள் திகைப்படைந்தனர். முஸ்லிம் படைகளின் உடல் பலத்துக்கு …
Read More »துற்குறி
துற்குறி என்பது அபசகுனமாகும். அல்லாஹ் கூறுகிறான்: “அவர்களுக்கு ஒரு நன்மை வந்து விட்டால் இது எங்களுக்கு வரவேண்டியதுதான் என்று கூறுவார்கள். அவர்களுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்து விட்டாலோ மூஸாவையும் அவர்களுடன் உள்ளவர்களையும் (தமக்கு நேர்ந்த) அபசகுனமாகக் கருதுவார்கள்” (7:131) அரபுகள் பயணம் மேற்கொள்ள அல்லது வேறு ஏதேனும் ஒரு காரியத்தைச் செய்ய நாடினால் ஒரு பறவையைப் பிடித்து பறக்க விடுவார்கள். அது வலது பக்கமாகப் பறந்தால் அதை நற்குறியாகக் கருதி …
Read More »வழிபாடுகளில் முகஸ்துதி
நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமாயின் அவை முகஸ்துதியை விட்டும் நீங்கி அல்லாஹ்வுக்காக என தூய எண்ணத்துடனும் நபிவழியைப் பின்பற்றியும் செய்யப்பட்டிருக்க வேண்டும். மக்கள் பார்க்க வேண்டும் மெச்ச வேண்டும் என்பதற்காக எவன் வழிபாடு செய்கிறானோ அவன் சிறிய இணைவைப்பைச் செய்தவன் ஆவான். அவனுடைய செயல் அழிந்து விடும். உதாரணமாக மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒருவன் தொழுவதைப் போல. அல்லாஹ் கூறுகிறான்: “இந்த நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்றுகிறார்கள். (உண்மையில்) அவனே இவர்களை …
Read More »இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (6)
இஸ்லாமியப் புரட்சியின் பெறுபேறுகள் இஸ்லாமியப் புரட்சியின் நேரடி விளைவுகளில் ஒன்று, இஸ்லாமிய உணர்வைக் கொண்ட ஒரு சமூகம் தோன்றியதாகும். இச்சமூகத்தின் அடிப்படை நம்பிக்கைகள், சிந்தனைப் போக்கு, வாழ்க்கை பற்றிய கண்ணோட்டம் என்பன முற்றிலும் இஸ்லாமிய சன்மார்க்க நெறிக்குள் அமைந்தனவாய்த் திகழ்ந்தன. அதன் கொள்கை ஒரே இறைவனைத் தவிர வேறு எதனையும் வணங்குவதைக் கொண்டு மாசுபடுத்தப் படவில்லை. அச்சமூகத்தின் ஒழுக்கப்பண்பாடும் அதன் உறுப்பினர்களது பண்புகளும் இஸ்லாத்தினால் உருவாக்கப்பட்டு அதனால் தூய்மைப் படுத்தப்பட்டவையாகும். …
Read More »வீணான நம்பிக்கைகள்
அல்லாஹ் பலனை ஏற்படுத்தாத பொருட்களில் பலன் இருப்பதாக நம்புதல் இதுவும் ஷிர்க்காகும். உதாரணமாக சிலர் ஜோதிடர் அல்லது சூனியக்காரனின் ஆலோசனையின் பேரில் அல்லது முன்னோர்களின் வழக்கத்தின் அடிப்படையில் கயிறு, உலோக வளையம், சிப்பி, தாயத்து, தகடு போன்றவற்றில் பலன் இருப்பதாக நம்புகிறார்கள். அதனால் கண் திருஷ்டிக்காகவும், துன்பம் நீங்குவதற்காகவும் அது வராமல் தடுப்பதற்காகவும் அவற்றை தங்களுடைய மற்றும் தங்கள் குழந்தகளுடைய கழுத்துக்களிலோ அல்லது உடலில் வேறு எங்கேனும் கட்டிக் கொள்கிறார்கள். …
Read More »சிருஷ்டிகளைக் கொண்டு பாதுகாவல் தேடலாமா?
படைப்பினங்களைக் கொண்டு ஆணையிடுவது விலக்கப்படுவது போல அவர்களைக் கொண்டு பாதுகாவல் தேடுவதும் விலக்கப்பட்டுள்ளது. பாதுகாவல் தேடுவதற்கு அல்லாஹ்வையும், அவன் திருநாமங்களையும் இலட்சணங்களையும் அமைத்துக் கொள்ள வேண்டும். சிருஷ்டிக்கப்பட்ட பொருட்களால் பாதுகாவல் தேட மாட்டாது. சிருஷ்டிக்கப்படாத நிரப்பமான வாக்கியங்களைக் (உரைகளை) கொண்டு நபியவர்கள் பாதுகாவல் தேடியுள்ளார்கள். ‘அவூது பி கலிமாதில்லாஹித் தாம்மாத்தி’ என்று கூறியிருக்கிறார்கள். இறைவனின் திருவசனங்கள் சிருஷ்டிக்கப்பட்டவையல்ல என்பதற்கு நபிகளின் இந்த ஹதீஸ் சான்றாக எடுத்துக் கொள்ளப்படும்.
Read More »சிருஷ்டிகளைக் கொண்டு சத்தியம் செய்யலாமா?
படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்யக் கூடாது. அப்படி சத்தியம் செய்தாலும், அது நிறைவேறாது. இது அறிஞர்களின் ஏகமனதான தீர்ப்பாகும். மலக்குகள், ஷெய்குமார்கள், மன்னர்கள், கஃபா ஷரீஃப் இவர்களைக் கொண்டெல்லாம் ஆணையிட்டால் அந்த ஆணை நிறைவேறாமலாகி விடும். ஷரீஅத்தும் இத்தகைய சத்தியங்களை விலக்குகிறது. இவ்விலக்கல் ‘தஹ்ரீமுடையவும், அல்லது தன்ஸீஹுடையவும்’ அதாவது கடுமையான விலக்கலாக இருக்க இடம்பாடுண்டு.
Read More »நட்சத்திரங்களின் மீது நம்பிக்கை வைத்தல்
அதாவது சம்பவங்களிலும் மனிதர்களின் வாழ்விலும் நட்சத்திரங்களின் தாக்கம் இருப்பதாக நம்புவது. இதுவும் ஷிர்க்காகும். ஸைத் பின் ஹாலித் (ரலி) அறிவிப்பதாவது: ‘ஹுதைபிய்யா எனும் இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு சுப்ஹு தொழுகை நடத்தினார்கள். இரவு மழை பெய்திருந்தது. தொழுது முடித்ததும் மக்களை முன்னோக்கி, உங்கள் இறைவன் என்ன கூறினான் தெரியுமா? என வினவினார்கள். அதற்கு, அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிந்தவர்கள்! என தோழர்கள் கூறினர். பிறகு, ‘என்னுடைய …
Read More »சூனியம், ஜோதிடம், குறி பார்த்தல்
பரவலாகக் காணப்படக்கூடிய ஷிர்க்கின் வகைகளில் சூனியம், ஜோதிடம், குறிபார்த்தல் ஆகியவையும் அடங்கும். சூனியம் செய்வது குஃப்ர் எனும் இறை நிராகரிப்பாகும். நாசத்தைத் தரக்கூடிய ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாகும். அதில் தீமை இருக்கிறதே தவிர நன்மையில்லை. சூனியத்தைக் கற்றுக் கொள்வதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்: “(உண்மையில்) தங்களுக்கு தீங்கிழைப்பதையும் எவ்வித நன்மையையும் தராததையுமே கற்றுக் கொண்டார்கள்” (2:102)மேலும் கூறுகிறான்: “சூனியக்காரன் எங்கு சென்றாலும் (ஒரு போதும்) வெற்றி பெறமாட்டான்” (20:69) …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library