இன்று பரவலாகக் காணப்படக்கூடிய மிகப் பெரும் இணைவைத்தலுக்கு மற்றொரு உதாரணம் அல்லாஹ் ஹராமாக்கியவற்றை ஹலாலாகவும் அல்லாஹ் ஹலாலாக்கியவற்றை ஹராமாகவும் ஆக்குவது. அல்லது ஹலால், ஹராம் ஆக்குகின்ற இந்த உரிமை அல்லாஹ்வை விடுத்து மற்றவருக்கும் இருக்கிறது என்று நம்புவது. அல்லது அஞ்ஞான காலத்தின் அடிப்படையிலான நீதிமன்றங்களையும் சட்டங்களையும் நாடிச் சென்று முழு திருப்தியுடனும் விருப்பத்துடனும் வழக்குத் தொடுப்பது. அது ஹலால் – ஆகுமானது என்று கருதுவது. இதனை அல்லாஹ் மிகப் பெரும் …
Read More »நூல்கள்
ஷபாஅத்தின் வகைகள்
ஷபாஅத் என்னும் பரிந்துரைத்தல் இரு வகைப்படும். ஒன்று: முஷ்ரிக்குகளிடையிலும், இவர்களைப் போன்ற அறிவீனமான மக்களிடையிலும் அறியப்பட்டிருந்த ஷபாஅத். இதை இறைவன் அடியோடு ஒழித்துக்கட்டி இல்லாமலாக்கி விட்டான். இரண்டு: அல்லாஹ்வின் அனுமதி பெற்றதன் பின்னர் கோரப்படும் ஷபாஅத். இதை அல்லாஹ் உறுதிப்படுத்தி கூறியிருக்கிறான். இந்த ஷபாஅத் அல்லாஹ்வுடைய அன்பியாக்களுக்கும், ஸாலிஹீன்களுக்கும் வழங்கப்படும். மறுமையில் சிருஷ்டிகள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஷபாஅத்தைக் கேட்கும்போது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் சமூகத்தில் வந்து …
Read More »இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (5)
இஸ்லாமிய அரசை வலுப்படுத்துதல்:இறைத்தூதர் அவர்கள் மக்காவில் முதன் முதலாகத் தம் பிரச்சாரத்தைத் தொடங்கிய போது மக்கள் அதனை கவனிக்கவில்லை. அவர்களது போதனையின் மீது சிலரே கூடிய கவனம் செலுத்தினர். அதைவிட மிகச் சிலர் தான் அண்ணலார் அவர்கள் மனிதனைப் பற்றியும், உலகைப் பற்றியும் அளித்த புதிய கருத்தினை ஏற்கும் மனநிலை உடையோராக இருந்தனர். அவர்களது தூதின் பொருளையும் அதன் விளைவுகளையும் விளங்கிக் கொள்ளத்தக்க நுண்ணறிவுத் திறனை ஒரு சிலரே பெற்றிருந்தனர். …
Read More »சமாதி வழிபாடு
இறந்து போன அவ்லியாக்கள் தம் தேவைகளை நிறைவேற்றுகின்றனர், கஷ்டங்களையும், துன்பங்களையும் நீக்குகின்றனர் என்று நம்பி சிலர் அவர்களின் அடக்கஸ்தலம் சென்று அவர்களிடம் உதவி தேடுகின்றனர். பாதுகாப்புத் தேடுகின்றனர். (இவை அல்லாஹ்விடம் மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களாகும்) அல்லாஹ் கூறுகிறான்: “உமது இறைவன், ‘அவனைத் தவிர வேறெவரையும் நீங்கள் வணங்காதீர்கள்’ என விதித்துள்ளான்” (17:23) அதுபோல இறந்து போன நபிமார்கள் மற்றும் இதர நல்லடியார்களிடம் துன்பங்களை நீக்கவும், தங்களுக்கு இறைவனிடம் பரிந்துரை …
Read More »மறைமுகமான பிரார்த்தனை
பார்வைக்கப்பால் இருப்பவர்கள் ஒருவர் இன்னொருவருக்கு வேண்டிக் கேட்கின்ற பிரார்த்தனைகள் முன்னிலையில் அவ்வாறு கேட்பதைக் காட்டிலும் இறைவனிடம் மிக்க ஏற்புடையதாகும். ஏனெனில் அது தூய எண்ணம் கொண்டு பிரார்த்திக்கும் துஆ அல்லவா? கலப்பற்ற எண்ணத்தால் பார்வைக்கப்பால் இருந்து ஒருவனுக்கு துஆ செய்யும்போது, அதன் தூய்மையையும், மதிப்பையும் அளவிட முடியாதல்லவா? சாதாரணமாக அல்லாஹ்விடம் துஆச் செய்பவரோடு சேர்ந்து மறைமுகமாகப் பிரார்த்திப்பவரை ஒப்பிட்டால் நிறைய வித்தியாசங்களைக் காண முடியும்.
Read More »இணை வைத்தல்
விலக்கப்பட்டவைகளில் பொதுவாகவே இதுவே மிகப் பெரியதாகும். அபூபக்ரா (ரலி) அறிவிப்பதாவது: ‘பெரும் பாவங்களில் மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள்! அதற்கு நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்றோம். அதற்கவர்கள், அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோரை நிந்திப்பது என்று கூறினார்கள். சாய்ந்திருந்த அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து, அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான், …
Read More »கப்றுகளில் பள்ளி கட்டலாமா?
கப்றுகளைப் பள்ளிகளாக்குவதை தடுத்து பல ஹதீஸ்கள் வந்திருக்கின்றன.அப்படிச் செய்பவனை நபி (ஸல்) அவர்கள் சபித்திருக்கிறார்கள்.தமது கப்றில் வைபவங்கள் கொண்டாடுவதையும் விலக்கினார்கள். முதலில் மக்களிடையே இணை வைத்தல் என்பது நூஹ் நபி அவர்களின் காலத்திலே தான் துவங்கிற்று. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘நபி நூஹ் (அலை) அவர்களுக்கும், நபி ஆதம் (அலை) அவர்களுக்கும் இடையிலான பத்துத் தலைமுறையிலுள்ள மக்கள் இஸ்லாமியர்களாகவே வாழ்ந்திருந்தார்கள்’ என்று கூறினார்கள்.
Read More »முன்னுரை
எல்லாபுகழும் அல்லாஹ்வுக்கே! திண்ணமாக அல்லாஹ் சில விஷயங்களைக் கடமையாக்கியுள்ளான். அவற்றைப் பாழாக்கி விடக் கூடாது. சில வரம்புகளை நிர்ணயித்துள்ளான். அவற்றை மீறக் கூடாது. பல விஷயங்களை தடை செய்துள்ளான். அவற்றைக் குலைக்கக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ் தன் வேதத்தில் எவற்றை ஹலாலாக்கியுள்ளானோ அவை ஹலாலாகும். எவற்றை ஹராமாக்கியுள்ளானோ அவை ஹராமாகும். எவை பற்றி அவன் ஒன்றுமே கூறவில்லையே அவை சலுகையாகும். அல்லாஹ் அளித்திருக்கும் சலுகையை ஏற்றுக் …
Read More »நபியைக் கொண்டு ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள் வஸீலா தேடினார்களா?
நபி (ஸல்) அவர்களைக் கொண்டு ஷபாஅத் தேடுதல் அன்னார் வாழ்ந்திருந்த காலத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்களைக் கொண்டு பிரார்த்தித்தலும், சத்தியம் செய்து கேட்டலும் அவர்கள் இறந்ததற்கப்பால் அனுமதிக்கப் படாதது போன்று நபியவர்கள் மறைந்திருக்கும் போதும், அவர்கள் முன்னிலையில் வைத்தும் இப்படிச் செய்யப்பட மாட்டாது. அன்றி இது விஷயத்தில் நபிமார்களைப் போன்றுதான் மற்றவர்களும். இவர்களைக் கொண்டெல்லாம் வஸீலா தேடுவதை நபித்தோழர்களும், தாபியீன்களும்வழக்கமாக்கிக் கொள்ளவில்லை.
Read More »இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (4)
முதல் இஸ்லாமிய அரசு. முதலாவது இஸ்லாமிய அரசு மிகச் சிறிய நகர அரசாக உருவாகியது. சில சதுர மைல் பரப்புடையதாகவும், சில ஆயிரம் மக்களைக் கொண்டதாகவும் அது அமைந்தது. எனினும் இச்சிறு அரசு சில ஆண்டுகளிலேயே முழு அரேபியாவையும் தனது ஆதிக்கத்திற்குள் கொணர்ந்து விட்டது. இவ்வெற்றிக்குக் காரணம், இஸ்லாமிய சன்மார்க்கக் கொள்கையின் ஒவ்வொரு முக்கிய அம்சத்தையும் அது தன்னகத்தே கொண்டிருந்ததாகும். அதில் இஸ்லாமிய இலட்சிய சமுதாயம் அதன் உண்மைத் தோற்றத்தில் …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library