Featured Posts

உண்மை உதயம் மாத இதழ்

கரை ஒதுங்கிய மீன்களும்… குரங்குகளாக மாற்றப்பட்ட மீனவர்களும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-13]

யூதர்கள் தவ்ராத் வேதத்தைப் பின்பற்றி வந்தார்கள். அவர்கள் சனிக்கிழமையில்  தொழில்செய்யக்கூடாது . கடற்கரையில் யூதர்கள் சிலர் வாழ்ந்து வந்தனர். மீன் பிடிப்பதுதான் அவர்களது தொழில் சனிக்கிழமை மீன் பிடிக்கக்கூடாது என்பது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அவர்களைச் சோதித்தான். சனிக்கிழமை தினத்தில் பெரும் திரளான மீன்கள் நீரின்மேல் வந்து தலைகாட்டும். இதனால் சிலர் பொருளாதார மோகம் கொண்டனர். ஆண்டவன் கட்டளையை தந்திரம் மூலம் மீற முற்பட்டனர். வெள்ளி இரவு வலை போட்டு, …

Read More »

ஆயிஷா(ரலி) மீதான அவதூறுச் செய்தியும்… அது கற்றுத் தரும் பாடங்களும்…

அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் மீது விபச்சாரக் குற்றம் சுமத்தப்பட்டது. அந்நிகழ்வையொட்டி சூறா அந்நூரின் 10 வசனங்கள் அருளப்பட்டன. அந்நிகழ்வு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனாலேயே அல்லாஹ்வும் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளான். முதலில் இந்நிகழ்வு குறித்து ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுவதைச் சுருக்கமாகப் பார்ப்போம். ஆயிஷா(ரலி) அறிவித்தார், ‘இறைத்தூதர்(ச) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். …

Read More »

உலமாக்களும்… அவர்களின் பொறுப்புக்களும்..

இல்மைச் சுமந்த ஆலிம்கள் சமூகத்தின் கலங்கரை விளக்காகவும் அசத்திய இருள்களில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு சத்திய ஜோதியாகவும் திகழ்பவர்கள் என்றால் மிகையன்று! கற்றவர்களை அல்லாஹ் பல கோணங்களில் மகிமைப்படுத்தியுள்ளான். “நம்பிக்கை கொண்டோரே! ‘சபைகளில் இடமளியுங்கள்’ என உங்களுக்குக் கூறப்பட்டால் நீங்கள் இடமளியுங்கள். அல்லாஹ்வும் உங்களுக்கு இடமளிப்பான். நீங்கள், ‘எழுந்து விடுங்கள்’ என்று கூறப்பட்டால் உடனே எழுந்திருங்கள். உங்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு, அறிவும் வழங்கப் பட்டுள்ளார்களோ அவர்களுக்கு அல்லாஹ் அந்தஸ்துக்களை …

Read More »

பலஸ்தீனப் பிரச்சினையும்… இஸ்லாத்தின் தீர்வும்…

ரொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் அவமானச் சின்னம்! பொது இடத்தில் பெண்களுடன் ஆபாசமாகவும் அசிங்கமாகவும் நடந்து கொள்ளும் இயல்பு கொண்டவர். இஸ்ரேல்! அமெரிக்காவும் பிரித்தானியாவும் கொண்ட கள்ளக் காதலில் கருத்தரித்த ஈனப் பிறவி! சட்டவிரோத இந்த நாட்டின் தலைநகராக ஜெரூஸலத்தை அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார். இவரின் அநியாயமான, அடாவடித்தனமான சட்ட விரோத அறிவிப்பால் முஸ்லிம் உலகு கொதித்துப் போயுள்ளது. இவரின் அறிவிப்பின் மூலம் மீண்டும் பலஸ்தீனம் பற்றிய எண்ணம் மேலெழுந்துள்ளது. இது …

Read More »

ஜமாஅத்துத் தொழுகை-3 [பிக்ஹுல் இஸ்லாம் – 33]

பெண் பெண்களுக்கு இமாமத் செய்தல் பெண் பெண்களுக்கு இமாமத் செய்வது “ஜாயிஸ்” (ஆகுமானது) என்பதுதான் சரியான கருத்தாகும். இதற்கு பின்வரும் காரணங்களைக் கூறலாம். ஜமாஅத்துத் தொழுகையைச் சிறப்பிக்கும் பொதுவான ஹதீஸ்கள் பெண்ணும் பெண்களுக்கு இமாமத் செய்யலாம் என்பதை உணர்த்துகின்றது. பெண் இமாமத் செய்வதைத் தடுக்கக் கூடிய எந்த ஆதாரமும் வரவில்லை. தடை இல்லை என்பதால் பொதுவான அங்கீகாரத்திற்குள் அவர்களும் வருவார்கள். எனவே, பெண் இமாமத் செய்யலாம் என்பதே சரியான கருத்தாகும். …

Read More »

யூதர்கள் மீது விதிக்கப்பட்ட வறுமை [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 14]

“(பாதுகாப்புக்கான) அல்லாஹ்வினது உத்தரவாதமும் மனிதர்களினது உத்தரவாதமும் இருந்தாலே தவிர, அவர்கள் எங்கு காணப்பட்ட போதும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டு விட்டது. மேலும், அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளானார்கள். இன்னும் அவர்கள் மீது வறுமை விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் நிராகாpத்தமையும், அநியாயமாக நபிமார்களைக் கொலை செய்து வந்தமையுமே இதற்கான காரணங்களாகும். இது அவர்கள் மாறு செய்து வந்ததாலும், வரம்பு மீறிக் கொண்டே யிருந்ததினாலுமாகும்.” (3:112) யூதர்கள் மீது …

Read More »

இஸ்ரவேலரும்… காளை மாடும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-12]

இஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவிட்டால் அவரது செல்வங்கள் அவரது சகோதரன் மகனுக்குச் சென்றுவிடும். பணத்தின் மீது மோகம் கொண்ட அவன் தனது சித்தப்பாவைக் கொலை செய்தான். பின்னர் அவரது சடலத்தை வேறொரு இடத்தில் போட்டான். கச்சிதமாக காரியம் நடந்துவிட்டது. மறுநாள் காலை தனது சித்தப்பாவைக் காணவில்லை என நாடகமாடினான். பின்னர் அவரது சடலத்தைக் கண்டு …

Read More »

இப்றாஹிம் நபியும்… நான்கு பறவைகளும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-11]

இப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்சியைக் கண்ட இப்றாஹீம் நபியின் உள்ளத்தில் ஓர் எண்ணம் எழுந்தது. “பல உயிரினங்களின் வயிற்றில் பிரிக்கப்பட்ட இந்த உடலை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?” என்பதுதான் அது! இந்த எண்ணத்தோடு இப்றாஹீம் நபி அல்லாஹ்விடம், “என் இறைவா! இறந்தவர்களை எப்படி உயிர்ப்பிக்கின்றாய் என்று எனக்குக் காட்டுவாயா?” என்று கேட்டார்கள். “இப்றாஹீம்! நீ …

Read More »

“உஸைர் நபியும்… உயிர் பெற்ற கழுதையும்…” [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-10]

“ச்சீ-கழுதை” யாரையாவது பிடிக்காவிட்டால் இப்படித்தான் திட்டுவோம். கழுதை அதன் முட்டாள்தனத்தாலும் அதன் அசிங்கமான சப்தத்தினாலும் எல்லோராலும் வெறுக்கப்படுகின்றது. ஆனால், நான் அற்புதமான ஒரு கழுதை பற்றி குர்ஆன் கூறும் கதையை உங்களுக்குக் கூறப் போகின்றேன். உஸைர் என்றொரு நபி இருந்தார். அவர் ஒரு ஊருக்கு கழுதையில் பயணம் சென்றார். அந்த ஊர் சிதைந்து சின்னாபின்னமாகி இருந்தது. முற்று முழுதாக அந்த ஊர் அழிந்து போயிருந்தது. அந்த ஊரின் அழிவைப் பார்த்த …

Read More »

பெண்களே! உங்களுக்குத்தான் [E-Book]

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மத்(ச) அவர்கள் மீதும், அவர் காட்டிய வழியில் வாழ்ந்த, வாழும் அனைவர் மீதும் நின்று நிலவட்டுமாக! பெண்கள் பற்றி இன்று அதிகம் பேசப்படுகின்றது. இது பெண் மீது கொண்ட பற்றினாலோ அல்லது பாசத்தினாலோ உருவான நிலை அல்ல. பெண் அரசியல், பொருளாதாரத் துறையில் புறக்கணிக்க முடியாத சக்தியாக மாறிய பின்னர்தான், அவளது உரிமைப் போராட்டங்களின் பின் ஆண்வர்க்கம் வேண்டா வெறுப்புடன் சில …

Read More »