Featured Posts
Home » 2008 » March » 03

Daily Archives: March 3, 2008

நபி (ஸல்) அவர்களுக்கு முஷ்ரிக்குகள் செய்த கொடுமை.

1172. ‘நபி (ஸல்) அவர்கள் கஅபதுல்லாஹ்வில் தொழுது கொண்டிருந்தபோது அபூ ஜஹ்லும் அவனுடைய தோழர்களும் அங்கே அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிலரைப் பார்த்து ‘இன்ன குடும்பத்தினரின் அறுக்கப்பட்ட ஒட்டகத்தின் கர்ப்பப்பையைக் கொண்டு வந்து முஹம்மத் ஸஜ்தாச் செய்யும்போது அவருடைய முதுகின் மீது போடுவதற்கு உங்களில் யார் தயார்?’ என்று கேட்டனர். அப்போது அக்கூட்டத்தில் மிக இழிந்த ஒருவன் அதைக் கொண்டு வந்தான். நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்வதைப் பார்த்ததும் …

Read More »

மறுமை நம்பிக்கையின் மற்றொரு அவசியம்!

மற்றொரு வகையில் பார்க்கும் பொழுதும் இத்தகைய விசாரணை, அதைத்தொடர்ந்து வழங்கும் வெகுமதிகள் அல்லது தண்டனைகள் என்பன உள்ள மறுமை வாழ்வு அவசியமே என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள். இந்த உலகம் தற்காலிகமானது; என்றோ ஒருநாள் முற்றிலும் சின்னபின்னமாகி அழிந்து விடும். அதேபோன்று மனித வாழ்வும் மிகக் குறுகிய காலத்தை உடையது. எனவே, அவனது எல்லா நல்ல செயல்களுக்கும் சமமான வெகுமதிகள் கொடுப்பதும், எல்லாத் தீய செயல்களுக்கும் சமமான தண்டனைகள் கொடுப்பதும் …

Read More »

அகிலங்களின் இறைவன் அல்லாஹ் (பகுதி 2)

படைப்புகளைப் பற்றிய சிந்தனையின் மூலம் படைத்தவனைப் புரிந்து கொள்ள இயலும் என்ற எளிய தத்துவத்தைத் திருக்குர்ஆன் நமக்குக் கற்றுத் தருகின்றது. அல்லாஹ்வின் பண்புகளைப்பற்றி திருக்குர்ஆனில் கூறிய அடிப்படையில் எவராலும் புரிந்துகொள்ள இயலும். அவ்வாறு புரிந்து கொண்டவர்கள் படைத்தவனை விடுத்து படைப்புகளுக்கு வணக்கத்தை அர்ப்பணிக்கும் வழிகேட்டில் ஒருபோதும் வீழ்ந்து விடமாட்டார்கள். திருக்குர்ஆன் கூறும் அல்லாஹ்வின் பண்புகளும் திருநாமங்களும் அவன் மட்டுமே வணக்கத்திற்கு உரித்தானவன் என்பதை எடுத்தியம்புகின்றது. அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் உள்ளன. …

Read More »