Featured Posts
Home » 2008 » March » 29

Daily Archives: March 29, 2008

அறப்போருக்குச் செல்வதின் சிறப்பு.

1229. போரிடுவதற்குப் புறப்பட்டுச் சென்றவரைக் கூலியைப் பெற்றவராகவோ, போர் ஆதாயங்களைப் பெற்றவராகவோ திரும்பக் கொண்டு சேர்க்கும் பொறுப்பை அல்லது அவரைச் சொர்க்கத்தில் சேர்க்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுள்ளான். என்னுடைய சமுதாயத்திற்கு நான் சிரமத்தைக் கொடுத்து விடுவேனோ என்று (அச்சம்) மட்டும் இல்லையானால் (நான்) அனுப்பும் எந்த இராணுவத்திற்குப் பின்னரும் (நானும் போகாமல்) உட்கார்ந்திருக்கமாட்டேன். நிச்சயமாக நான் இறைவழியில் கொல்லப்பட்டு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு மீண்டும் கொல்லப்பட்டு, மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு மீண்டும் கொல்லப்படுவதையே …

Read More »

டாடாவின் (TATA) அதீத வளர்ச்சி

வளர்ந்து வரும் நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவும் சீனாவும் உலகளவில் பேசப்பட்டுக்கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு சற்று மேலான செய்தி ஒன்று கடந்த மார்ச் 26-ல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது பணக்காரர்களின் (ஐரோப்பிய) ஆடம்பர “கார்”களாக (European luxury brands) கருதப்படும் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார் கம்பெனிகளை ஃபோர்ட் நிறுவனத்திடமிருந்து, இந்தியாவின் டாடா குழுமம் 2.3 பில்லியன் டாலருக்கு வாங்குகிறது

Read More »

ஹஜ் கலைக்களஞ்சியம்

ஹஜ் “கலைக்களஞ்சியம்” வெளியீடு திட்டத்தை சவூதி இளவரசர் சல்மான் இப்னு அப்துல் அஜீஸ் அவர்கள் இன்று (மார்ச் 29, 2008) தொடங்கி வைக்கிறார். இக்கலைக்களஞ்சியம் கடந்த வருடத்தின் ஹஜ் செய்திகளோடு புனித கஃபா மற்றும் மஸ்ஜித் நபவி புனிதப் பள்ளிகள் பற்றிய விபரங்களை கொண்டிருக்கும். இதன்மூலம் சமய, நாகரீகம் மற்றும் பொருளாதார விஷயங்களை எடுத்துச் சொல்ல முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More »

கருத்துச் சுதந்திரமா? ஆணவமா?

கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பரில், முஹம்மது நபி(ஸல்) அவர்களை கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் டென்மார்க்கிலிருந்து வெளிவரும் ஜீலன்ட்-போஸ்டன் பத்திரிக்கை 12 கேலிச் சித்திரங்களை வெளியிட்டது. ஜீலன்ட் பத்திரிக்கை வெளியிட்ட 12 கேலிச்சித்திரங்களில் பதினொன்று நபி(ஸல்) அவர்களைப் பயங்கரவாதியாகவும் மற்றொன்று அவர்களைப் பாலியல் வாதியாகவும் சித்தரிக்கும் வகையில் வரையப்பட்டிருந்தன. துப்பாக்கி, வாள் ஆகியவைகள் பிடித்துக் கொண்டு இருப்பது போன்றும், அவர்கள் தலைப்பாகையில் வெடிகுண்டு இருப்பது போன்றும் கேலிச்சித்திரங்கள் வெளியாயின.

Read More »

முஸ்லிம்கள் யார்?

இனம், வர்ணம், நாடு, கலாச்சாரம் ஆகிய அனைத்தையும் கடந்து, தென் பிலிப்பைனிலிருந்து நைஜிரியா வரை உலகின் ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரை பல்வேறு பாகங்களிலும் ஏறக்குறைய ஒரு பில்லியன் மக்களை அவர் தம் நம்பிக்கை ஒன்றே இணைத்து வைத்திருக்கின்றது. அந்த நம்பிக்கையே இஸ்லாம்!

Read More »