Featured Posts
Home » 2008 » April (page 5)

Monthly Archives: April 2008

அறப்போருக்குச் செல்பவரின் குடும்பத்தைப் பராமரித்தல்.

1239. அறப்போரில் செல்பவருக்கு உதவியவர் புனிதப்போரில் பங்கு கொண்டவர் போன்றவராவார். அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்ற பின் அவரின் வீட்டாரின் நலத்தைப் பாதுகாக்கிறவரும் புனிதப் போரில் பங்கு கொண்டவராவார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. புஹாரி : 2843 ஸைத் இப்னு காலித் (ரலி).

Read More »

முஸ்லிம்களின் நம்பிக்கை என்ன?

நித்திய ஜீவனும், இணை-துணை அற்றவனுமான ஏக இறைவன் ஒருவன் மீதே முஸ்லிம்கள் நம்பிக்கைக் கொள்கின்றனர். மேலும், அவனால் படைக்கப்பட்ட வானவர்கள், மனித குலத்துக்கு அவனால் அனுப்பி வைக்கப்பட்ட தூதர்கள் ஆகியோரையும் நம்புகின்றார்கள். அது மட்டுமல்ல, இவ்வுலக அழிவுக்குப் பின்னால் ஏற்பட இருக்கும் மறுமைநாளின் மீதும் அவர்கள் பூரண நம்பிக்கைக் கொண்டிருக்கின்றார்கள். மேலும் இந்த உலகில் தாம் புரிந்த செயல்களுக்கு அப்போது கணக்கு வாங்கப்படும் என்பதிலும் அசைக்க முடியாத நம்பிக்கையை அவர்கள் …

Read More »

கொன்றவர் கொல்லப்பட்டவர் இருவரும் சுவனத்தில்…

1238. அல்லாஹ் இரண்டு மனிதர்களைப் பார்த்துச் சிரிக்கிறான். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரைக் கொன்றுவிடுகிறார். இருவருமே சொர்க்கத்தில் நுழைகிறார்கள். இவர் இறைவழியில் போரிட்டுக் கொல்லப்படுகிறார். பிறகு (அவரைக்) கொன்றவர் பாவமன்னிப்புக் கோர, அதை ஏற்று அவரை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். பிறகு அவரும் அறப்போரில் (கொல்லப்பட்டு) உயிர்த் தியாகியாகி விடுகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 2826 அபூஹுரைரா (ரலி).

Read More »

இதுதான் இஸ்லாம் (பகுதி-1)

உலகில் வாழும்  மக்கள்  சமுதாயம்  ஆன்மீக ரீதியாகத் தாம்  பின்பற்றும்  மதங்கள், சமயங்கள் கலாச்சாரங்கள்  இவை  சிறந்ததா எனச்  சிந்திக்கும் பொருட்டு  திறந்த  மனதுடன்  இந்த  ஆய்வைக்  படிக்குமாறு முதலாவதாக கேட்டுக்கொள்கிறேன். நம்மைப் படைத்த  இறைவன்  நாம் உண்ண, உடுத்த,  வசிக்க, உறவு முறைகள்  இன்பம்  துன்பம்  நோய்  மருந்து  என பல் வேறு  சூழ் நிலைகளை  நம்மீது  விதித்து  நம்மை உலகில் வாழச் செய்துள்ளான்.

Read More »

மக்களில் சிறந்தவர் யார்?

1237. ”இறைத்தூதர் அவர்களே! மக்களில் சிறந்தவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘இறைவழியில் தன் உயிராலும் தன் பொருளாலும் போராடுபவரே (மக்களில் சிறந்தவர்)” என்று பதிலளித்தார்கள். மக்கள், ‘பிறகு யார்?’ என்று கேட்டார்கள். ‘மலைக் கணவாய்களில் ஒன்றில் வசித்துக் கொண்டு, அல்லாஹ்வை அஞ்சிய வண்ணம் தன்னால் மக்களுக்குத் தீங்கு நேராமல் தவிர்த்து வருபவரே சிறந்தவர்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். புஹாரி : 2786 அபூஸயீத் …

Read More »