No.0004 (16), தினம் ஒரு துஆ
இன்று நாம் மனனம் செய்ய ஒரு சிறிய துஆ.
தொழுகையின் ருகூவில் மட்டும் அதிகம் கேட்பவை (1)
اللهُمَّ لَكَ رَكَعْتُ، وَبِكَ آمَنْتُ، وَلَكَ أَسْلَمْتُ، خَشَعَ لَكَ سَمْعِي، وَبَصَرِي، وَمُخِّي، وَعَظْمِي، وَعَصَبِي
தமிழில்:-
அல்லாஹும்ம லக ரகஃது, வபிக ஆமன்து, வலக அஸ்லம்து, خகஷஅலக ஸம்யீ, வபஸரீ, வமுخக்கீ, வஅழ்மீ , வஅஸபீ
பொருள் :-
யா அல்லாஹ்! உனக்கே குனிந்து விட்டேன். உன்னையே விசுவாசித்தேன். உனக்கே முற்றிலும் வழிபட்டேன். எனது செவியும், பார்வையும்,
மூளையும், எனது எலும்பும், நரம்பும் உனக்கே முற்றும் பணிந்து விட்டன.
ஆதாரம் :முஸ்லிம் :- 1419
குறிப்பு:- நஸாயி, அபூதாவூத் போன்ற பல நூல்களில் இந்த ஹதீஸ் இடம்பெற்றுள்ளது.