Featured Posts

இலங்கை இனவாத தாக்குதலுக்குள்ளான எமது உறவுகளுக்காக..

கடந்த 15.06.2014 அன்று களுத்துறை மாவட்டத்தின் அழுத்கம நகரில் நடைபெற்ற பொதுபல சேனா எனும் பௌத்த பயங்கரவாத அமைப்பின் இனவாத மாநாட்டையடுத்து இடம் பெற்ற அவ்வமைப்பின் ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறைகளால் அழுத்கம, பேருவளை, வெலிப்பன்ன மற்றும் அருகாமையிலுள்ள பிரதேசங்களிலுள்ள சுமார் ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் இடம்பெயர்ந்து, பத்துக்கும் அதிகமான உயிர்கள் காவுகொள்ளப்பட்டு, நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம்கள் படுகாயமுற்றதோடு முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல கோடிக்கணக்கான சொத்துக்களும் தீக்கிரையாக்கப்பட்டு அனைத்தையும் இழந்து சொந்த நாட்டில் அகதிகள் போன்று பள்ளிவாயல்களில் தங்கியுள்ளார்கள்.

இலங்கை மண்ணின் பூர்வீகக் குடிகளான ஓர் சமூகத்தின் மீது அரச படையினரின் அங்கீகாரத்துடனும் மேற்பார்வையுடனும் ஓர் பட்டவர்த்தனமான இனச்சுத்திகரிப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதனை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

இந்நிலையில் முஸ்லிம்களாகிய நாம் நமது உறவுகளுக்காக செய்ய வேண்டியது என்ன? இந்நிகழ்வுகளிலிருந்து நாம் பெருகின்ற படிப்பினைகள் என்ன? போன்றவற்றை அறிந்துக்கொள்வதுடன் நாடுகளை கடந்து நமது உறவுகளுக்காக ஆக்கபூர்வமான வழிகளை ஆய்வு செய்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்

—–

அல்-கோபார் தாஃவா நிலையம் (ஹிதாயாய) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி

இடம்: மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) – அல்கோபர் – சவூதி அரேபியா
நாள்: 18-06-2014 (புதன்கிழமை)

வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபார் தாஃவா நிலையம்)

வீடியோ: சகோ. ஷஃபி மற்றும் அசன் மீராஷா

படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *