அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:-
“அழகிய முறையில் குடும்ப வாழ்க்கை நடத்துவதற்கென அல்லாஹ் விதித்திருக்கும் விடயங்களை எடுத்து நடப்பது கணவன்-மனைவி ஆகிய ஒவ்வொருவர் மீதும் அவசியமானதாகும். மனைவியை விட தானே உயர்ந்தவன் என்பதற்காகவோ, அவளின் விவகாரம் தன் பொறுப்பில் இருக்கிறது என்பதற்காகவோ அவள் மீது கணவன் ஆதிக்கம் செலுத்தலாகாது. இவ்வாறே மனைவியும் கணவனுக்கெதிராக உயர்வுபாராட்டி நடப்பதும் ஆகாது. மாறாக, அவ்விருவரில் ஒவ்வொருவரும் அடுத்தவரோடு அழகிய முறையில் குடும்ப வாழ்க்கையை நடத்த வேண்டியது கட்டாயமானதாகும். கணவனுக்குரிய கடமையை நிறைவேற்றும் விடயத்தில் மனைவியிடமிருந்து ஏற்பட்ட குறைபாடு, அல்லது அவளது புத்தியிலும் சிந்தனைத் திறனிலும் ஏற்பட்ட குறைபாடு போன்ற காரணங்களுக்காக மனைவியைப் பற்றிய வெறுப்பு கணவனிடமிருந்து சில வேளை ஏற்படலாம் என்பது தெரிந்த விடயமே! இப்படியான நேரத்தில் இந்த மனைவியுடன் கணவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? அல்குர்ஆனிலும், சுன்னாவிலும் இதற்கான தீர்வு இருக்கிறது”
அல்லாஹுதஆலா கூறுகின்றான்:
“அவர்களுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தாலும் சரியே! (பொறுத்துக்கொள்ளுங்கள்!) ஏனெனில், நீங்கள் ஒன்றை வெறுக்க அல்லாஹ் அதில் அதிகமான நன்மைகளை வைத்திருக்கக்கூடும்.”
– அல்குர்ஆன் 4:19
நடைமுறை வாழ்வில் இதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது! சில வேளை, ஏதேனும் ஒரு காரணத்திற்காக தனது மனைவியை வெறுக்கும் ஒருவன் பின்னர் பொறுமை காக்கின்றான். இதன்மூலம் இவனில் நிறைய நலவுகளை அல்லாஹ் ஆக்கி விடுகின்றான்! இதனால் வெறுப்பு விருப்பாகவும், சோர்வு உற்சாகமாகவும் மாறி விடுகிறது.
நபி (ஸல்) அவர்களும், “இறைவிசுவாசமுள்ள ஒரு கணவன், இறைவிசுவாசமுள்ள மனைவியை வெறுக்க வேண்டாம். அவளிடமிருக்கும் தீய பண்பு ஒன்றை அவன் வெறுத்தாலும், அவளிடமிருக்கும் நல்ல பண்பு ஒன்றில் அவன் திருப்தி காண்பான்!”என்று கூறினார்கள்.
தனது நோக்கமும் விருப்பமும் சரியாகப் பூர்த்தியான எவராவது ஒருவர் இவ்வுலகில் இருக்கின்றாரா? இல்லை; அறவே இல்லை! இவ்வுலகில் உனது விருப்பம்கூட சரியாகப் பூர்த்தியாகி இருக்காது. ஏதாவது ஒன்றில் ஒரு விடயம் பூர்த்தியாகி இருந்தாலும் மற்றொன்றில் குறைபாடு இருக்கவே செய்யும். நாட்களும் இவ்வாறுதான்! இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்: “இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம்” (அல்குர்ஆன் 3:140)
இவ்வுலகம் ஒரே நிலையில் இருந்து கொண்டிருக்காது. இதை நீ பரீட்சித்துப்பார் கண்டு கொள்வாய்! உனது மனைவியிடமிருந்து ஒன்றை நீ வெறுத்தால் அவளிடமிருந்து நீ திருப்தி காணும் ஒன்றைக் கொண்டு அதை நீ எதிர்கொள்!
{ நூல்: ‘லிகாஆதுல் பாபில் மப்fதூஹ்’, முன்னுரைப் பாகம் – பக்கம்: 159 }
قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:
[ الواجب على كل من الزوجين أن يقوم بما أوجب الله عليه من العشرة الحسنة، وأن لا يتسلط الزوج على الزوجة لكونه أعلى منها، وكون أمرها بيده، وكذلك للزوجة لا يجوز أن تترفع على الزوج، بل على كل منهما أن يعاشر الآخر بالمعروف.
ومن المعلوم أنه قد يقع من الزوج كراهة للزوجة، إما لتقصيرها في حقه، أو لقصور في عقلها وذكائها وما أشبه ذلك. فكيف يعامل هذه المرأة؟ نقول: هذا موجود في القرآن وفي السنة، قال الله تبارك وتعالى:
« فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا »
وهذا هو الواقع، قد يكره الإنسان زوجته لسبب، ثم يصبر، فيجعل الله عز وجل في هذا خيرا كثيرا، تنقلب الكراهة إلى محبة، والسآمة إلى راحة.
وقال النبي صلى الله عليه وسلم: « لا يفرك مؤمن مؤمنة – يعني: لايبغضها ولا يكرهها – إن كره منها خلقا رضي منها خلقا آخر » هل أحد يتمّ له مراده في هذه الدنيا؟ لا، أبدا؛ لا يتم مرادك في هذه الدنيا.وإن تم في شيئ نقص في شيئ، حتى الأيام، يقول الله عز وجل: « وتلك الأيام نداولها بين الناس »
وجرّب هذا تجد، لا تبقى الدنيا على حال واحد، فإذا كرهت من زوجك شيئا فقابله بما يرضيك]
{ لقاءات الباب المفتوح، مقدمة الجزء ، ١٥٩ }
தமிழில்,
அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா