இமாம் அபூபக்கர் முஹம்மத் அத்தர்தூஷீ அல்மாலிகீ (ரஹ்) கூறுகின்றார்கள்:-
“(பயனுள்ள) அறிவையும் சரியான நுட்ப கருத்தையும் செவிமடுக்காது, அறிஞர்கள் மற்றும் சரியான நுட்ப கருத்துடைய ஞானிகளின் அவைகளிலிருந்து விரண்டோடி, உலகத்தின் செய்திகள், ஏனைய மெளட்டீகங்கள், பாமர மக்களின் அவைகளில் இடம்பெறும் (பயனற்ற) விடயங்கள் ஆகியவற்றைச் செவிமடுப்பதில் ஈர்ப்பும் விருப்பும் கொண்டவனாக இருக்கும் மனிதனொருவனை நீ கண்டுவிட்டால் அவனை அருவருப்பான மலம் உருட்டி வண்டுகள் உலகத்தில் கொண்டு போய்ச் சேர்த்து விடு! ஏனெனில், அருவருப்பானவைகளை உண்பதுதான் இந்த வண்டுக்கு ரொம்பவும் பிடிக்கும்; அசுத்தங்களின் வாடைகள்தான் இதற்கு இன்பமாய் இருக்கும்; இது, மலசலம் கழிக்கும் இடங்களிலும், குளிக்கும் இடங்களிலும் சேர்ந்து ஒட்டிக்கொண்டிருப்பதாகவே நீ பார்ப்பாய்; அத்தோடு, கஸ்தூரி மற்றும் மலர் வாசனைகளிலிருந்து இது விரண்டோடியும் விடும்; கஸ்தூரியையோ, மலரையோ அதன் மீது வீசிவிட்டால் அது மரணித்தும் விடும்!”
{ நூல்: ‘சிராஜுல் முலூக்’, பக்கம்: 391 }
قال الإمام أبو بكر محمد الطرطوشي المالكي رحمه الله تعالى:-
[ وإذا رأيت إنسانا لا يسمع العلم والحكمة، وينفر من مجالس العلماء والحكماء، ويألف سماع أخبار الدنيا وسائر الخرافات وما يجري في مجالس العوام فألحقه بعالم الخنافس! فإنه يعجبه أكل العذرات، ويألف روائح النجاسات، ولا تراه إلا ملابسا للأخلية والمرحاضات، وينفر من روائح المسك والورد، وإذا طرح عليه المسك والورد.. مات!! ]
{ سراج الملوك ، ص – ٣٩١ }
அமீருல் முஃமினீன் உமர் இப்னுல் ஹத்தாப் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:-
“ஒரு மனிதன் தனது வீட்டிலிருந்து வெளியே செல்கின்ற போது, ‘திஹாமா’ பிரதேசத்து மலைகள் போன்று அவனிடம் பாவங்கள் இருந்திருக்கும். எனினும், அவன் (பயனுள்ள) அறிவைச் செவிமடுத்துவிட்டால் பயந்து விடுவான்; தவறிலிருந்து திரும்பி விடுவான்; தவ்பாச் செய்து திருந்தியும் விடுவான்; அப்போது அவன், தனது வீட்டுக்குத் திரும்பிச் செல்கின்ற போது அவனிடம் எந்தவொரு பாவமுமே இருக்காது! எனவே, அறிஞர்களின் அவைகளை விட்டும் நீங்கள் பிரிந்து சென்று விடாதீர்கள்!”
{ நூல்: ‘மிப்fதாஹு தாரிஸ் ஸஆதா’, 01/122 }
قال أمير المؤمنين عمر بن الخطاب رضي الله عنهما:-
[ إن الرجل ليخرج من منزله وعليه من الذنوب مثل جبال تهامة، فإذا سمع العلم خاف ورجع وتاب. فانصرف إلى منزله وليس عليه ذنب، فلا تفارقوا مجالس العلماء! ]
{ مفتاح دار السعادة، ١/١٢٢ }
தமிழில்,
அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)