Featured Posts

ஹைதராபாத் குண்டு வெடிப்பு

நேற்று முன்தினம் ஹைதராபாதில் நடந்த குண்டு வெடிப்பில் வழக்கம் போல் ஏதேனும் ஒரு முஸ்லிம் பெயரிலுள்ள தீவிரவாத அமைப்பைச் சொல்லி வழக்கம்போல் விசாரனை முஸ்லிம்களைச் சுற்றியே இருக்கப் போகிறது என்பதில் சந்தேகம் இல்லை!ஒவ்வொரு குண்டு வெடிப்பிற்கும் பின்னணியில் பயங்கர சதித்திட்டங்கள் உள்ளன. எப்பொழுதெல்லாம் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்படுகிறதோ, அதற்கு முன்/பின் ஏதேனும் பரபரப்பான விசயம் இருக்கிறது என்பதைப் பலரும் கவனித்திருக்கலாம்.

அமெரிக்க-இந்திய அணுசக்தி உடன்பாட்டினால் காங்கிரஸின் குடுமி, இடதுசாரிகளின் பிடியில் அகப்பட்டுக் கொண்டுள்ளது. “என்ன பந்தயம்? தற்கொலை பண்ணிக் கொண்டு முதலில் நான்தான் சாவேன்” என்பதுபோல் உள்ளது ஆளும் மன்மோகன் அரசின் அமெரிக்க அடிமைத்தன உடன்படிக்கை! ஆகவேதான் காங்கிரஸ் தவிர்த்த அரசியல் கட்சிகள் அமெரிக்காவின் 123 ஒப்பந்தத்தை எதிர்க்கின்றனர்.

123 ஒப்பந்தத்தினால் இந்தியாவிற்குக் கிடைக்கும் நலன்களைவிடப் பன்மடங்கு நலன் ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு பைப்லைன் மூலம் எரிவாயுவைக் கொண்டுவரும் திட்டம் இருந்தது. ( மேலும், 123 ஒப்பந்ததை விட ஐந்து மடங்கு குறைவான செலவில், முப்பது மடங்கு பலன் கிடைக்க வாய்ப்பிருந்ததாக பொருளியல் வல்லுனர்கள் அவதானித்தார்கள். இஸ்லாமாபாத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பேசிய அப்போதைய பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர ஐயர், அமெரிக்காவின் எச்சரிக்கையை இந்தியா அலட்சியபடுத்தி இத்திட்டத்தில் இறங்கும் என்று கூறினார். அமெரிக்காவின் தந்திரத்தாலும் காங்கிரஸின் அமெரிக்க எஜமான விசுவாசத்தாலும் பைப்லைன் ப்ராஜெக்ட் ஏறத்தாழக் குப்பைக் கூடைக்கு அனுப்பப்பட்டு விட்டது!

ஒன்றுக்கும் உபயோகமற்ற இராமர் பாலத்தை வைத்து மதவாத அரசியல் செய்து, எஞ்சியிருக்கும் சொற்ப காலத்தை ஓட்டலாம் என்றிருந்த பா.ஜ.க வுக்கு, திருப்பதி பஞ்சாமிர்தம் கிடைத்ததுபோல் அமெரிக்காவின் 123 ஒப்பந்தம் கிடைத்துள்ளது. முடங்கிக் கிடந்த பா .ஜ.க பெருந்தலைகள் சற்று உற்சாகம் பெற்றிருப்பதை அரசியல் வட்டாரத்தில் காண முடிகிறது.

இந்தச்சூழலில்தான் ஹைதராபாதில் நடந்த குண்டு வெடிப்பிற்கு ஹர்கத் உல் ஜிகாதி என்ற பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்புகள்தான் காரணம் என்று ஒருசில மணித்துளிகளுக்குள் முதல் கட்ட புலணாய்வுத் தகவல்கள் கசியத் தொடங்கி விட்டன .

சம்பவ இடத்தைப் பார்வையிட்ட வெங்கையா நாயுடு, உள்நாட்டுப் பாதுகாப்பு விசயத்தில் மெத்தனமாக இருக்கும் காங்கிரஸைச் சாடினார். திருவாளர் அத்வானி , “மீண்டும் பொடா சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்” என்று திருவாய் மலர்ந்தார்! குண்டு வெடிப்பைக் காரணம் காட்டி திருப்பதி , காளஹஸ்தி கோவில்களுக்கு வரலாறு காணாத பாதுகாப்புப் போடப்பட்டு உள்ளதாகவும் தமிழகத்திலும் கோவில்களுக்கு பாதுகாப்பு போடப்பட்டு பஸ், இரயில் பேரூந்து பயணிகள் மிகுந்த சோதனைகளுக்கு உள்ளாக்கப் படுவதாகவும் தலைப்புச் செய்திகளில் சொன்னதோடு , சுமார் 700 பேரை சந்தேகத்தில் கைது செய்திருப்பதாகவும் சொன்னார்கள்.

இனி ஓரிரு வாரங்களுக்குத் தீவிரவாதிகளை ‘வலைவீசி’த் தேடும்பணி முடுக்கி விடப்படும். தனிப்படை அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட /படாதவர்கள் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்படுவார்கள்.

சரி, இந்த குண்டு வெடிப்பை யார்தான் செய்திருப்பார்கள்? வழக்கம்போல் முஸ்லிம்கள்மீது பழியைப் போட்டு அடையாளமாக ஒருநாள் பந்த் அல்லது இறந்தவர்களுக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை என்று அறிவித்து விட்டால் எல்லாம் சரியாகி விடும
ா ?

முந்தைய குண்டு வெடிப்புகள் ஏதேனும் விசேஷ தினங்களில்தான் நடத்தப் பட்டன. மும்பை ரயில் குண்டு வெடிப்புகள் தீபாவளியன்றும், மாலேகான் குண்டு வெடிப்புகள் முஸ்லிம்களின் ஷபே பராஅத் இரவன்றும் நேற்றைய குண்டு வெடிப்பு ஓணம் திருநாளின் போதும் நடந்துள்ளதை கவனத்தில் கொண்டால் குண்டு வெடிப்புகளினால் பொதுமக்களை அச்சுறுத்திப் பலன் பெறும் நோக்கம்தான் தெரிகிறது. அரசுக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் பொதுமக்களைப் பகைத்துக் கொள்ளும் இத்தகைய நிகழ்வுகளைச் செய்வார்களா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் .

ஆந்திராவில் இந்தகைய குண்டு வெடிப்புகளை வழக்கமாக நடத்தி வரும் நக்ஸலைட்டுகளைப் பற்றி ஏதும் சொல்லாமல் வாயில் நுழையாத ஹர்கத் உல் ஜிகாதி என்ற அமைப்புதான் காரணம் என்றச் செய்தியைக் கசிய விட்டது முஸ்லிம்களை மீண்டும் தனிமைப் படுத்தும் நோக்கம் என்றே சந்தேகிக்க வேண்டியுள்ளது. இன்னொரு பக்கம், காங்கிரஸின் மீதான அமெரிக்க ஆதரவு இமேஜை திசை திருப்பும் அவசியம் மற்றும் அரசியல் அநாதைகளுக்குப் பிழைப்பு நடத்த , வெறும் வாய்க்குக் கிடைத்த அவலாகவும் இந்தக் குண்டு வெடிப்பு அமைந்துள்ளது.

உண்மைக் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டு, அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

15 comments

  1. தலையாட்டி

    //உண்மைக் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டு, அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்//

    அது …

  2. கசாப்புக்கடைக்காரன்

    ஒரு தலய வெட்டி சுத்தம் செஞ்சிக்கிட்டிருந்தப்போ எங்காளு ஒருத்தர போலீஸ் பிடிச்சுருச்சாம்.

  3. மிகச்சரியாக சொன்னீர்கள் நல்லடியார். ஒன்று நக்சல் வேலையாக இருக்க வேன்டும் அல்லது காங்கிரஸ் வேலையாக இருக்க வேண்டும். நல்லவேலை இன்னும் அல்காயிதா என்று சொல்லவில்லை.

  4. நல்லடியார்

    //ஒன்று நக்சல் வேலையாக இருக்க வேன்டும் அல்லது காங்கிரஸ் வேலையாக இருக்க வேண்டும். நல்லவேலை இன்னும் அல்காயிதா என்று சொல்லவில்லை//

    அபூசிதாரா,

    அரசியல் அஸ்தமனத்தின் விளிம்பில் நிற்கும் ஜார்ஜ் புஷ்ஷிற்கு எஞ்சிய அரசியல் வாழ்வைக் கழிக்க பின்லாடன் மற்றும் அல்காயிதாவின் இருப்பு மிகமிக அவசியம். ஹைதராபாத் குண்டு வெடிப்புகளில் காங்கிரஸைப் பொருத்தமட்டில் அல்காயிதா பூச்சாண்டியைக் சொல்வதால் காங்கிரஸின் மீதான அமெரிக்க விசுவாசத்தைப் போக்க உதவாது.

    ஆகவே,ஏதாவது உள்ளூர் தீவிரவாதிகளைச் சொல்லி மக்களின் கவனத்தை திசை திருப்ப முயன்றிருக்கலாம். மாநிலத்தில் ஆளும் காங்கிரஸிற்கு சந்திரபாபு மற்றும் பா.ஜ.க. மூலம் அழுத்தம் கிடைத்தாலும் ஆட்சியைக் காவு கொடுக்கும் அளவுக்கு நிலைமை வளராது. அரசியல் மொள்ளமாரித் தனங்களில் பா.ஜ.கவுக்கு காங்கிரஸ் எந்தவிதத்திலும் சளைத்ததல்ல!

    வெளிநாட்டுத் தீவிரவாதிகள் நேரடியாக ஈடுபடுவதைவிட உள்ளூர் நக்ஸல்களைத் தூண்டி விட்டு இத்தகைய அழிவுச்செயல்களை நிகழ்த்துவது எளிது. ஆனால், சொல்லி வைத்தாற்போல் குண்டு வெடிப்பு நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே செய்தவர்கள் யாரென்ற யூகங்களே செய்தியாகி, அந்த கோணத்தில்யே விசாரனையும் சென்று கொண்டிருக்கிறது.

    சந்தடிச் சாக்கில் தினமலரும் விஷமத்தனமாக ஹூஜி (ஹர்கத் உல் ஜிகாத் இஸ்லாமி), ஜுல் (ஜமாத் உல் உலமா இ இஸ்லாமி), திஜ் (தப்லிக் இ ஜமாத்), ஹெல்கே (ஹிஸ்ப் இ இஸ்லாமி யூனஸ் காலிஸ்) என்றெல்லாம் வாயில் நுழையாத பெயர்களைச் சொல்லி பினாத்தியுள்ளதுதான் உச்சகட்ட கொடுமை!

    யாராக இருந்தாலும் யாராக இருந்தாலும் “சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பதே நம் அவா”.

  5. K.R.Athiyaman ;13230870032840655763

    Naxalites target and kill only
    police, army, politicians, etc whom
    they consider ‘enemies of the revolution” ; and most of their targets are rural and rarely urban.
    and so far they have not done such terror bombings in cities..

    hence pls don’t jump to hasty conclusion or belittle the valiant efforts of our police teams..

    Reg : Bangalseshi support for jihadis ; i have only one point.
    They seem to have forgotton their bloody histroy of 1970-71, when there was genocide there perpetuated by West Pakistani army ; No religion can unite a people and religious identities are only a maaya. I am surprised that Bangaleshisshi have forgotton the mass killings by their Islamic brothers of W.Pak so soon.

    K.R.Athiyaman
    nellikkani.blogspot.com

  6. பிறைநதிபுரத்தான்

    நல்லடியார்!
    இந்தியாவில் குண்டு வெடித்தால் பாகிஸ்தானையும், பாகிஸ்தானில் குண்டு வெடித்தால் இந்தியாவையும் -குற்றம் சாட்டுவதும் வாடிக்கையாகிவிட்டது. இரு நாட்டு அரசாங்கங்களும் பல குண்டு வெடிப்புக்களுக்கு பிறகும் உண்மையான தீவிரவாதிகளை தேடிப்பிடித்து தண்டிக்காமல் -இதுபோன்று ‘முன்முடிவுடன்’ அறிக்கைப்போர் விடுவதில் எந்த ஒரு பயனும் இல்லை.
    காட்டுமிராண்டித்தனமான இத்தகைய செயல்களால் பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்கள்தான்.

    கோயம்பத்தூர் குண்டு வெடிப்பில் சம்பந்தமில்லாத அப்துல் நாசர் மதானியை கைது செய்து – ஒன்பது வருடம் சிறையில் வைத்தது போலல்லாமல், உண்மையான குற்றவளியை பிடித்து இந்த முறையாவது “சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பதே நம் அவாவும் பிரார்த்தனையும்”.

    குண்டு வெடிப்பில் உயிரிழந்த சகோதர-சகோதரிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இழப்பை தாங்கிக்கொள்ளும் மனத்திடத்தை இறைவன் அவர்களுக்கு தரவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

  7. K.R.Athiyaman ;13230870032840655763

    There is lot of confusion and misundertandning about Islam. Most people are not able to differenctiate between Islamic concepts and ‘Muslims’. Theory is different from those who call themselves followers of those concepts. Same with communism, Chrisitianity, Buddhism, etc.

    Interepretations of Koran varies and many chauvinsits intrepret it to suit their agenda, esp regarding to women’s rights, marriage laws, etc.

    and liberation movements in Palenstine, Chechenya and Bosnia are confused with religious fanatisim. The media did not correctly portray the very pertinanet statement of Bin Laden after 9/11 : “.. the Amercians will know no peace until the Palestinians do…” He is not crazy to attack his onetime mentor,
    during the Afgan war against USSR.

    I have deep respect and regard for all religious concepts and literature. only i am weary of the interpretations by bigots.

    some questions and points :

    1.Sachar committe report about the real conditions of Indian Muslims is true enough. but they and their insular leaders are mainly responsible for their status. Family planning, importance of education, esp in English and local languages (not Arabic in Madarassas, which is as useful as learing only Sanskrit) are not stressed. dogmatic attitude has made the typical muslim household with more than 3 children ; with low incomes large families cannot be pulled out of the cycle of poverty and backwardness.

    2.Women’s rights, esp reg divocrce, property rights are not fair. Triple talak, etc. My question is if Muslims want to follow the Shariath law instead of a uniform civil code, then what about Criminal law ? if there is a criminal offence aginst or by a muslim, why not shariat be used (like in Saudi) ; public flogging and stoning to death, etc.
    If they can accept IPC for criminal offences, then what prevents them accepting a uniform civil code ? i think it is the male chauvinsitic agenda of the insular leaders…

    3. Haj subsidy : the govt spends some Rs.250 crores every year to subsidise Haj pilgrimage. It is highly ‘unsecular’ and foolish.
    I remember reading that the muslim tradition asks only those who can afford to go on Haj. and this 250 crores p.a can be exclusively used to build and operate free hospitals and schools in muslim areas. it will be most useful.

    K.R.Athiyaman
    Chennai – 96
    nellikkani.blogspot.com

  8. Mr.Athiyamaan

    One of my doctor friend in Dubai who is a Bangladeshi told me that Indian Army helped Bangladesh from the atrocities of Pakistanis. But at the same time after winning the war, Indian Army stayed in Bangladesh and made the same atrocities with our girls and women . In this context Paks are better than Indain Army

  9. நல்லடியார்

    அதியமான்,

    தங்களின் பின்னூட்டம் பதிவுடன் தொடர்பு இல்லாவிட்டாலும் (பலமுறை சகவலைப்பதிவர்களால் பல்வேறு பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் தெளிவுபடுத்தப்பட்டிருந்த போதிலும்) மீண்டும் உங்கள் ஐயங்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில்,சில கருத்துக்கள்:

    //1.Sachar committe report about the real conditions of Indian Muslims is true enough. but they and their insular leaders are mainly responsible for their status. Family planning, importance of education, esp in English and local languages (not Arabic in Madarassas, which is as useful as learing only Sanskrit) are not stressed. dogmatic attitude has made the typical muslim household with more than 3 children ; with low incomes large families cannot be pulled out of the cycle of poverty and backwardness. //

    சச்சார் கமிட்டி அறிக்கையின்படியும் அதற்கு முன்னரும் முஸ்லிம்களின் தாழ்நிலைக்குக் காரணங்களாக நீங்கள் கருதும் காரணிகளும் ஓரளவு காரணம் எனினும்,முஸ்லிம்களை பிற்படுத்தோர்/தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைத்தும், தமிழ்கத்தில் காமராஜருக்கு முன்புவரை பெற்றுக் கொண்டிருந்த இடஒதுக்கீட்டை நிறுத்தியதும் பிறமுக்கியக் காரணங்கள்.

    மதரஸாக்களைப் பொருத்தமட்டில், அவர்கள் உலகக்கல்வியையும் மார்க்கக் கல்வியையும் வேறுபடுத்திப் பார்த்ததே, முஸ்லிம்கள் உலகக் கல்வியில் பின் தங்கியதற்குக்காரணம். சுதந்திரபோராட்டத்தின்போது ஆங்கிலேயர் மீதான வெறுப்பை ஆங்கிலத்தின் மீதும் காட்டி, ஆங்கிலம் கற்பதை ஹராம் ஒதுக்கியவர்களும் இன்னொரு காரணம்.

    //2.Women’s rights, esp reg divocrce, property rights are not fair. Triple talak, etc. My question is if Muslims want to follow the Shariath law instead of a uniform civil code, then what about Criminal law ? if there is a criminal offence aginst or by a muslim, why not shariat be used (like in Saudi) ; public flogging and stoning to death, etc. If they can accept IPC for criminal offences, then what prevents them accepting a uniform civil code ? i think it is the male chauvinsitic agenda of the insular leaders…//

    மூன்று தவணையில் விவாகரத்துச் செய்யும் உரிமையைவிட பெண்கள் ஒரே தடவையில் வேண்டாத கணவனை விவாகரத்து பெறலாம். சொத்துரிமை, பொதுசிவில் சட்டம் பற்றிய பழைய பதிவுகளையும் பார்க்கவும். உதாரணத்திற்கு சகோதரர் அபூமுஹை அவர்களின் பதிவுச்சுட்டிகளை அளித்துள்ளேன். பார்வையிடுங்கள்.

    http://abumuhai.blogspot.com/2006/07/blog-post_21.html
    http://abumuhai.blogspot.com/2006/02/blog-post_14.html
    http://abumuhai.blogspot.com/2005/06/2.html
    http://abumuhai.blogspot.com/2005/05/1.html

    //3. Haj subsidy : the govt spends some Rs.250 crores every year to subsidise Haj pilgrimage. It is highly ‘unsecular’ and foolish.I remember reading that the muslim tradition asks only those who can afford to go on Haj.//

    ஹஜ் மானியம் என்ற பெயரில் திருப்பிக் கொடுக்கப்படும் முஸ்லின்களின் முன்பணத்தின் மீதான இலாபம் பற்றி
    ஹஜ் மானியமும் வெட்கமும்
    என்ற பதிவில் பதிலளித்துள்ளேன்.

    //and this 250 crores p.a can be exclusively used to build and operate free hospitals and schools in muslim areas. it will be most useful//

    பாபர் மசூதியை இடித்து விட்டு அந்த இடத்தில் மருத்துவமனை கட்டவும், இடஒதுக்கீட்டிற்குச் சாதகமான மத்திய மாநில அரசுகளால் இடஒதுக்கீடு கிடைக்கவுள்ள சூழலில், இடஒதுக்கீட்டு முறையையே முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்கிறீர்கள்.அதெப்படி சார் முஸ்லிம்களுக்கு பலன் கிடைக்கும்போது மட்டும் அதனை பொதுக்காரியங்களுக்கு பங்கு போடும் நல்லெண்ணம் மேலோங்குகிறது?

    மேலும் சில பதிவுகளையும் பார்வையிடுங்கள்.

    http://athusari.blogspot.com/2006/11/2006.html
    http://athusari.blogspot.com/2006/06/2.html
    http://athusari.blogspot.com/2006/05/blog-post_17.html

  10. யாரு சொன்னாலும் என்ன சொன்னாலும் தமிழ்லே சொன்னா என்னைய மாதிரி ஆளுகளுக்கு வெளங்கும்ல …

  11. நல்லடியார்

    பிறைநதிபுரத்தான்,

    //இந்தியாவில் குண்டு வெடித்தால் பாகிஸ்தானையும், பாகிஸ்தானில் குண்டு வெடித்தால் இந்தியாவையும் -குற்றம் சாட்டுவதும் வாடிக்கையாகி விட்டது.//

    பாகிஸ்தானில் நடக்கும் குண்டு வெடிப்புகள் தங்களுக்குள்ளாகவே பிரித்துக் கொண்ட பிரிவினரிடையேதான் நடக்கிறது.அதில் கொல்லப்படுபவர்களில் 99% அப்பாவிகளே! இந்தியாவிலும் உலகில் எங்கேனும் குண்டு வெடிப்பு நடந்தால் அவை இஸ்லாத்தின் பெயரால் வைக்கிறார்கள் என்று ஒப்பாரி இடுபவர்கள் இவ்விசயத்தில் வாய் திறப்பதில்லை.ஏனென்றால் பாகிஸ்தானில் குண்டு வெடித்தால் கொல்லப்படுவது முஸ்லிம்தானே என்ற மனப்பான்மையே!

    //இரு நாட்டு அரசாங்கங்களும் பல குண்டு வெடிப்புக்களுக்கு பிறகும் உண்மையான தீவிரவாதிகளை தேடிப்பிடித்து தண்டிக்காமல்-இதுபோன்று ‘முன்முடிவுடன்’ அறிக்கைப்போர் விடுவதில் எந்த ஒரு பயனும் இல்லை//

    அரசியல் நடத்தவே நேரமில்லாமல் இருக்கும்போது, இதற்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று நினைத்திருக்கலாம். :-) ‘BORE’ அடித்தால் சமாதனப் பேச்சுவார்த்தை இல்லாவிட்டால் ‘போர்’ என்பதே இருநாட்டு அரசியல்வாதிகளின் பொழுதுபோக்காக இருந்து வருகிறது.

  12. நல்லடியார்

    //Naxalites target and kill only police, army, politicians, etc whom they consider ‘enemies of the revolution” ; and most of their targets are rural and rarely urban.and so far they have not done such terror bombings in cities..//

    K.R.Athiyaman,

    Whenever Naxalites plotted to kill/attack politicians or else they never worried about innocents. Does it mean that all those who died in blast/attacks are enemies of Naxalites? I don’t think Nexals are bound to specified limits. Please don’t justify the terrorism by territory.

  13. எண்டெ ஒம்பதரக் கொல்லத்தை ஆரும் திரிச்சுத் தராம் பற்றோ?

  14. K.R.அதியமான். 13230870032840655763

    sorry for my english comments as my tamil typing is dead slow..

    And i didn’t justify any kind of terrorism. in fact i am dead against naxals or communisim.

    and my older comments are still pending …?

  15. K.R.அதியமான். 13230870032840655763

    ///One of my doctor friend in Dubai who is a Bangladeshi told me that Indian Army helped Bangladesh from the atrocities of Pakistanis. But at the same time after winning the war, Indian Army stayed in Bangladesh and made the same atrocities with our girls and women . In this context Paks are betterm than Indain Army////

    Sorry Madukkoorran,

    If you belive that then you are fooling yourself. Pls re-read the Bangaladeshi independence history of 1970-71. or try to discuss it with a elder Bangaladeshi who had lived thru those terrible times.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *