Featured Posts

கவலைப்படாத மலர்மன்னன்

சென்ற வருடம் தமிழ் சிஃபியில் “கலைகள் தந்த தஞ்சை கவலைதருகிறது” என்று ரொம்ப ரொம்பக் கவலைப்பட்டு எழுதி இருந்தார். பிராமணர்களின் சொர்க்க பூமியான தஞ்சை மாவட்டத்தில் அக்ரஹாரங்களை மசூதிகளும், முஸ்லிம் தெருக்களும் உட்கொண்டு விட்டதே அவரின் கவலைக்கான காரணம் என்பதையும், தஞ்சை பிராமணர்கள் அக்ரஹாரங்களை அடகு வைத்து அமெரிக்காவில் செட்டிலாகியதற்கு முஸ்லிம்கள் காரணமல்ல என்று சத்தியமார்க்கம்.காமில் மறுத்திருந்திருந்தேன்.

64 வகையான ஆயகலைகள் வளர்த்தத் தஞ்சைத் தரணியில் பாயும் காவிரி ஆற்றில் 52 வகையான அபாயகர மாசுப்பொருட்கள் கலந்திருப்பதாகவும், இதனால் சுகாதார, சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் அபாயம் உள்ளது என்று சென்னையைச் சார்ந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

தமிழக மற்றும் கர்நாடக மக்களின் ஜீவாதார நதியாகவும், விவசாயிகளின் வாழ்க்கையில் விளக்கேற்றிய காவிரி ஆறும் தஞ்சைத் தரணியும் நச்சுப் பொருட்களின் அடைக்கல பூமியாக மாறியதற்கு யார் காரணம் என்று மலர்மன்னன் நிச்சயம் கவலைப் படமாட்டார்.ஆரிய வேதம் ஓதுவதைத் தவிர பிற தொழில்கள் பிராமணர்களுக்குத் தடுக்கப்பட்டிருப்பதால் சூத்திரத் தொழிலான விவசாயம் எக்கேடு கெட்டால் நமக்கென்ன? குறைந்த பட்சம் கும்பகோணம் மகாமகம் குளம் அசுத்தமடையாமல் இருந்தாலே போதும் என்ற நல்ல எண்ணமாகக்கூட இருந்திருக்கலாம்.

கெம்பிளாஸ்ட் நிறுவனம் 28 வகையான நச்சுப் பொருட்களை காவிரி ஆற்றில் கலப்பதாக ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் ஐந்து கார்சினோஜென் (புற்றுநோயைத் தூண்டும் காரணி) வேதிப் பொருட்களும் அடக்கம்.குளோரெத்தில்-2,1,2, வினைல் குளோரைடு, டைகுளோ ரோ ஈத்தேன்,1,2 டைகுளோரோ பென்சீன் ஆகியவை அபாய அளவையும் தாண்டி நீரையும், பூமியையும் மாசு படுத்தியுள்ளன.

இந்த 52 வகையான நச்சு வேதிப் பொருட்களால் பெரும் சுற்றுச்சூழல் சீர்கேடும், சுகாதாரச் சீரழிவும் ஏற்படும் என இந்த அறிக்கையை ஆய்வு செய்த பொது சுகாதார நிபுணர் ராக்கேல் கைடோண்டே கூறியுள்ளார்.

இந்த மாசுக்களால் மிகப் பெரிய பின்விளைவுகளும், பேராபத்தும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.சுற்றுச்சூழல்,நீராதாரம்,உணவு மற்றும் உயிர்களுக்கும் பெரும் அபாயம் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.

டையாக்சின்களால், உடலின் நோய் எதிர்ப்புத் தன்மை முற்றிலும் பாதிக்கப்படும். மேலும் மனிதர்களிடையே இது உயிரணுக்களையும் பாதிக்கும் என்பதால் மலட்டுத்தன்மை அதிகரிக்கும். குழந்தைப் பிறப்புக்கே உலை வைக்கும் வகையிலான ஆபத்தைக் கொண்டவை டையாக்சின்கள்.

PVC-யின் தயாரிப்பில் மூலப் பொருள்களில் ஒன்றான குளோரின் வாயு மிகுந்த நச்சுத் தன்மை கொண்டது. இதனைச் சேமிக்கும் கிடங்குகளிலோ அல்லது அது செலுத்தப்படும் குழாய்களிலோ மிகச்சிறிய அளவில் கசிவு ஆனாலும் சுற்றுவட்டாரத்தில் 25 கிமீ வரை காற்றடிக்கும் திசையைப் பொறுத்து, அங்கு வாழும் மக்களைக் கொல்லவல்லது. குறைந்த பட்சம் மூச்சுக் குழலைப் புண்ணாக்கி விடும் அபாயமான வாயு குளோரின்.

வேதிநிறுவனங்களிருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரும் கூட நச்சுத்தன்மை கொண்டதாக உள்ளதாகவும், இவற்றைக் காவிரியில் கலக்க விடுவதைத் தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆழ்துளைக் கிணறுகளும், காவிரி ஆறும் கடுமையாகப் பாதிக்கப்படும் எனவும் ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.

காவிரி ஆறு மாசுபட்டதற்கு மலர்மன்னன் ஏன் கவலைப்பட வேண்டும்? அதற்குக் காரணம் கெம்ப்ளாஸ்ட் போன்ற நிறுவனங்களல்லவா? என்று கேட்கக்கூடும்! கம்பன் வீட்டு கழிவறை இடிந்ததற்குக்க

11 comments

  1. புகழேந்தி

    நல்லடிண்ணே..
    தமிழ்சிஃபிக்கு இந்தக் கட்டுரையை அனுப்பி வையுங்களேன்.

    அண்ணாகண்ணன் ஆசிரியராக இருக்கும் தமிழ்சிஃபியின் மதச்சார்பின்மை மீது நம்பிக்கை இருக்கிறது.

  2. புகழேந்தி

    Also Thinnai

  3. புகழேந்தி

    திண்ணைக்கு ஏன் அனுப்பச் சொல்றேன்னா….
    எந்த எழுத்தாளரையும் புறக்கணிப்பதில்லைன்னும், யார் எழுதறதயும் தடுக்கறதில்லேன்னும் ஒரு தன்னிலை(இன்மை) வெளக்கம் கொடுத்திருந்தாகல்ல, அதான்!

  4. மரைக்காயர்

    நல்லடியார் அய்யா, இரட்டை வேடம் போடுவது இந்துத்துவாக்களுக்கு கைவந்த கலை ஆச்சே! மலமன்னனும் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்தானே. பிராமண அக்ரஹாரங்களைப் பற்றி கவலைப்பட்டவர் நச்சு ஆறாக மாறிக் கொண்டிருக்கும் காவிரியையும் பற்றி கவலைப்பட்டால்தான் அது செய்தி.

  5. மரைக்காயர்

    //தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை -களைப்போல் மாவடத்தில் தங்கிவிட்ட சூத்திரர்களான விவசாயிகளையும் முஸ்லிம்களையும் நினைத்தால்தான் தற்போது கவலை ஏற்படுகிறது!//

    உண்மையிலேயே மிக கவலையளிக்கும் செய்தி இது! இந்தியாவின் நெற்களஞ்சியம் என்ப் பெயர் பெற்ற தஞ்சைக்கா இந்த நிலை? மாநில அரசு தக்க நடவடிக்கை எடுத்து தஞ்சை மாவட்டத்தில் ஒரு கூவம் உருவாவதை தடுக்க வேண்டும்.

  6. அட்றா சக்கை

    நல்லடியார்,

    என்னது கவலைப் படறதா? அந்த கெம்ப்ளாஸ்ட் வச்சிருக்கிறவர் பேரு முஸ்லிம் பேரா , உடனே வண்டி வண்டியா கவலைப் படுவார்.

    அடப்போங்கய்யா அந்த ம.ம (மரமண்டை இல்லை)- ஒரு காவி வெறியன்னு இன்னுமா புரியல?

  7. நல்லடியார்

    //திண்ணைக்கு ஏன் அனுப்பச் சொல்றேன்னா….எந்த எழுத்தாளரையும் புறக்கணிப்பதில்லைன்னும், யார் எழுதறதயும் தடுக்கறதில்லேன்னும் ஒரு தன்னிலை(இன்மை) வெளக்கம் கொடுத்திருந்தாகல்ல, அதான்!//

    புகழேந்தி ஐயா,

    மலர்மன்னனின் “கலைகள் தந்த தஞ்சை…” கட்டுரைக்கு மறுப்புரை எழுத் பிரசுரிக்கும் படி தமிழ்சிஃபிக்கு அனுப்பியபோது கண்டு கொள்ளாமல் இருந்து விட்டார்கள். பின்னர் சத்ய மார்க்கம் தளத்திற்கு அனுப்பி பிரசுரிக்க வேண்டினேன். சத்யமார்க்கத்தில் வெளியான பிறகு திரு.அண்ணா கண்ணன் அல்லது தமிழ்சிஃபி ஆசிரியரிமிருந்து பிரசுரிப்பதாகச் சொல்லி மடல் வந்தது. அதற்கு சத்யமார்க்கத்தில் நான்கு பகுதிகளும் வெளியாகியதால் தமிழ்சிஃபியை தவிர்த்து விட்டேன்.

    திண்ணையைப் பொருத்தவரை எனது இரு ஆக்கங்களை வெளியிட்டார்கள். அதனைத் தொடர்ந்து எண்கோணம் என்பவர் பெயரில் எனக்கும் மலர்மண்ணனுக்கும் சில கேள்விகள் வைத்து ஒரு ஆக்கம் வெளியாகி இருந்தது. மலர்மன்னனின் பதிலை வெளியிட்டவர்கள் எனது பதிலை வெளியிடாமல் தவிர்த்து விட்டார்கள். காரணமும் அறியவில்லை.

    அதனையடுத்து சென்ற ரமழானில் நோன்பின் சிறப்புகளைச் சொல்லும் ஒரு ஆக்கத்தைப் பொதுவாக எழுதி அனுப்பி வைத்தேன். அதில் உண்ணா நோன்பிருப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகளைப் பட்டியலிட்டு எழுதி இருந்தேன். அதையும் தவிர்த்து விட்டார்கள். இதற்கான காரணமும் தெரியாது.

    “எதிர் எதிர்க் கருத்துகள் நாகரிகமான முறையில் வெளிப்படவேண்டும் என்பது தான் திண்ணையின் நோக்கம். நேசகுமார் அளித்த இஸ்லாம் பற்றிய விமர்சனக் கருத்துகளுக்கு , இஸ்லாமியர்களின் கடுமையான விமர்சனங்கள் வந்தன. மலர்மன்னனுக்கும் பல விமர்சனங்கள் வெளிவந்தன. இந்த நூற்றாண்டின் இணையற்ற தலைவர் என்று தனிப்பட்ட முறையில் நான் கருதும் காந்தி பற்றிய விமர்சனமும் திண்ணையின் பக்கங்களில் வெளிவந்தது. எனக்குத் தனிப்பட்ட முறையில் பிடித்திருந்த சில கட்டுரைகளையும் கூட சில காரணங்களுக்காக திண்ணையில் வெளியிட இயலவில்லை. அதற்கு அந்தக் கட்டுரை ஆசிரியர்கள் நிச்சயம் வருந்தியிருப்பார்கள் .ஆனால் அது குறித்து ஒன்றும் செய்வதற்கில்லை. “
    http://www.thinnai.com/?module=displaystory&story_id=20711158&format=html

    பின்னர், மேற்கண்ட திண்ணையின் விளக்கத்தைப் படித்த பின்னர், மேற்கொண்டு திண்ணைக்கு அனுப்புவம் எண்ணத்தை விட்டுவிட்டேன்.

    வருகைக்கும், பின்னூட்டங்களுக்கும் நன்றி.

  8. நல்லடியார்

    //மாநில அரசு தக்க நடவடிக்கை எடுத்து தஞ்சை மாவட்டத்தில் ஒரு கூவம் உருவாவதை தடுக்க வேண்டும்.//

    மரைக்காயர்,

    சாத்தியமில்லை. கெம்பிளாஸ்ட் நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்திருப்பதாக தமிழக அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி சில நாட்களுக்கு முன் பாராட்டியிருந்தார்.

    ஆம்பூர்,ஆற்காடு பகுதி சாயப்பட்டறைகள் சுற்றுச்சூழலை சீர்கெடுப்பதாக நீதிமன்றம் தலையிட்டது. ஆனால் கெம்ப்ளாஸ்ட் பற்றி யாரும் வாய் திறக்கவில்லை.

  9. நல்லடியார் தங்களுடைய பதிவு உண்மையில் விழிப்புணர்ச்சி அடைய வேண்டிய முக்கிய விசயம். இந்த கெம்பிளாஸ்ட் பற்றி வின் டிவியில் செய்தியும் நிஜங்களும் நிகழ்ச்சியில் போட்டு கிழித்து விட்டார்கள். இதில் உள்ள மற்ற உண்மை என்னவென்றால் அந்த நிறுவனம் பிரமாணருக்கு சொந்தமானது. என்னுடைய நண்பர் அங்கு ஒரு டிவிசனில் காரியதரிசியாக இருந்து இப்போது அமீரகத்தில் பனி செய்கிறார். அவர் சொன்னது தான் இந்த தகவல். அருகில் சிலிகான் பிளான்டும் இருக்கிறது.

    இதில் இன்னும் வேடிக்கை என்னவென்றால் அரசியல்வியாதிகள் என்பவர்கள் தனி சாதி. இவர்களுக்கு தெரிந்த கடவுள் எல்லாம் பணம் ஒன்று தான். இந்த விசயத்தில் அனைவரும் ஒன்று தான். அதனால இவர்கள் மக்களைப்பற்றியோ அவர்களின் வாழ்வாதாரத்தை பற்றியோ அல்லது வர இருக்கிற அடுத்த தலைமுறைக்கு இந்த புவியை எப்படி பாதுகாத்து கொடுக்க போகிறோம் என்ற அக்கறை, கவலை எல்லாம் அவர்களுக்கு கிடையாது.

    சகோதரர் அட்ராசக்கை சொன்னது போல் இந்த மம விற்கு அறிவு நாணயம் என்று ஒன்று இருந்தால் அவர் அவிழ்த்து விட்ட கழிவுகளுக்கு தக்க சான்றுகளோடு பதில் கொடுத்து சாட்டைய சொடுக்கிய நண்பர் கற்பகவிநாயத்திற்கு இன்றுவரை பதில் சொல்லவில்லை என்பது தின்னையில் அமர்ந்து சென்றவர்களுக்கு தெரியும். இது விசயமாக நண்பர் பிகே சிவக்குமார் மம (நாட்டாமை என்று)வைபற்றி தின்னையில் நன்றாக ஒரு பதிவிட்டு இருந்தார்.

    தோழமையுடன்

  10. மேட்டூர்: சென்னையைப் போலவே, மேட்டூரிலும் செம்பிளாஸ்ட் சன்மார் நிறுவனத்தின் ஆலையிலிருந்து வெளியான வாயுக் கசிவால் 7 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    சென்னையின் சில பகுதிகளில் சில தினங்களுக்கு முன்பு மர்ம வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரும் பாதிப்பும், பீதியும் அடைந்தனர். காற்றில் பரவிய ஹைட்ரோகார்பன்களால்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக பின்னர் அதிகாரிகள் விளக்கினர்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூரிலும் நேற்று வாயுக் கசிவு ஏற்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மேட்டூரில் செம்பிளாஸ்ட் சன்மார் நிறுவனத்தின் ஆலை உள்ளது. இந்த ஆலையில் குளோரின் மற்றும் காஸ்டிக் சோடா ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இங்கு நேற்று மதியம் 11 மணி வாக்கில் மின்சாரத் தடை ஏற்பட்டது. அப்போது ஆலையிலிருந்து குளோரின் வாயு கசிந்துள்ளது.

    இதை நுகர்ந்த பலருக்கும் வாந்தி, உடல் நடுக்கம், கண் எரிச்சல், வயிற்று வலி உள்ளிட்டவை ஏற்பட்டன. இதனால் அங்கு பீதி ஏற்பட்டது. ஏராளமான மக்கள் சன்மார் நிறுவனம் முன்பு கூடி உடனடியாக ஆலையை மூடக் கோரி கோஷமிட்டனர்.

    உடல் நலம் பாதிக்கப்பட்ட 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதற்கிடையே, இந்த காஸ் கசிவு குறித்து செம்பிளாஸ்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், உற்பத்தி நிலையில் ஏற்பட்ட மின்சாரத் தடை காரணமாகவே காஸ் கசிவு ஏற்பட்டது.

    காற்றில் பரவும் காஸ் கசிவைக் கண்டறிவதற்காக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி 6 கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

    ஆனால் மின்சாரத் தடை காரணமாக 3 கருவிகள் செயல்படாமல் போய் விட்டன. இதன் காரணமாகவே குளோரின் வாயுக் கசிவைக் கண்டறிய முடியவில்லை.

    இருப்பினும் காற்றில் பரவிய குளோரின் வாயுவின் அளவு மிகவும் குறைவுதன். இதனால் எந்த ஆபத்தும் ஏற்படாது. நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கும் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை.

    காஸ் கசிவு குறித்து அனைத்து அதிகாரிகளுக்கும் தெரிவித்து விட்டோம் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

    சென்னையைப் போலவே தங்களது பகுதியிலும் காஸ் கசிவு ஏற்பட்டதால் மேட்டூர் பகுதி மக்கள் நேற்று பீதியுடன் காணப்பட்டனர்.

    http://thatstamil.oneindia.in/news/2007/12/08/tn-7-hospitalised-due-to-chlorine-gas-leak:-cem.html

  11. பிறைநதிபுரத்தான்

    எண்கோணம் என்பவர் பெயரில் எனக்கும் மலர்மண்ணனுக்கும் சில கேள்விகள் வைத்து ஒரு ஆக்கம் வெளியாகி இருந்தது. மலர்மன்னனின் பதிலை வெளியிட்டவர்கள் எனது பதிலை வெளியிடாமல் தவிர்த்து விட்டார்கள். காரணமும் அறியவில்லை. –

    அப்படியா! மாற்றுக்கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதாக கூறிக்கொள்பவர்களாயிற்றே!.

    மேற்கண்ட பதிலை எதிரொலியில் பிரசுரித்தாலென்ன?

    வினா எழுப்பிய எண்கோணத்திற்கு – தங்களின் பதிலை மறந்துவிடாமல் அனுப்பி வையுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *