Featured Posts

Tag Archives: எதிரொலி

பறவைக் காய்ச்சல்: ஜீவகாருண்யம் கிலோ என்ன விலை?

ஏவியான் ஃப்ளூ வைரஸால் பறவைக் காய்ச்சல் பீதி ஒரு பக்கமிருக்க இன்னொரு பக்கம் தங்கள் வாழ்வாதாரம் நசிந்துவிடுமோ என்ற பீதியில் கோழிப்பண்ணை உரிமையாளர்களும் அவற்றை நம்பி தொழில் நடத்துபவர்களும் “சிக்கன் மேளா” நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பறவைக் காய்ச்சல் பீதிக்கு முன் கிலோ 75-85 ரூபாய்க்கு விற்கப்பட்ட கறிக்கோழிகள் கிலோ 15/= என்றளவுக்கு சரிந்தது. கோழி முட்டை கிலோக் கணக்கில் விற்கப்பட்டதும், வீடு வீடாக எடுத்துச் சென்றும் தெருவில் கூவி விற்கப்பட்டன. …

Read More »

அகால மரணமடைந்த அமெரிக்க ஒப்பந்தங்கள்

அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் இந்திய வருகை ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இந்தியா வளர்ந்து வரும் வல்லரசு நாடு என்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளதால் தெற்காசிப் பிராந்தியத்தில் இந்தியாவுடனான நல்லுறவு அமெரிக்க நலனுக்கு உகந்தது என்ற நோக்கில் அமெரிக்க அதிபரின் இந்திய வருகை இருக்கலாம். அமெரிக்க அதிபர் இந்தியா வந்ததன் நோக்கம் இந்தியாவுடன் பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் நல்லுறவுக்கும் உறுதுணையாயிருக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கும் “சிலருக்கு” …

Read More »

அமெரிக்க நலனுக்காக இந்தியாவின் தியாகம்!

ஈரானுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட அமெரிக்க/ஐரோப்பிய நாடுகளின் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தன் மூலம் இந்தியா-ஈரான் இடையேயான பாரம்பரிய உறவுக்கும் எதிர்கால பொருளாதார உறவிற்கும் மன்மோஹன் சிங் அரசு விரிசலை ஏற்படுத்தியுள்ளது. அணுஆயுத பரவலை தடை செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் (இந்தியா-பாகிஸ்தான் உட்பட) தேவையான போது மீறும்போது சொல்லும் வழக்கமான காரணத்தையே ஈரானும் சொல்லியது. ஈரானுக்கு எதிரான இந்தியாவின் ஓட்டைச் செலுத்திய பின், இந்தியாவின் பாதுகாப்பைக் கருதி ஈரானுக்கு எதிரான தீர்மானத்தை …

Read More »

பெரியார் ஈ.வெ.ராமசாமி பார்வையில் இஸ்லாம்

மதங்களையும், மதங்களின் பெயரால் மனிதனை மனிதன் தாழ்த்தி, சக மனிதனுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் கொடுமைகளையும் எதிர்த்த “பகுத்தறிவுச் சிங்கம்” பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் மற்ற மதங்களை விட இஸ்லாத்தின் மீது மாறுபட்ட கண்ணோட்டம் கொண்டிருந்தார். குர்ஆனை முதன் முதலாக அழகுதமிழில் மொழிபெயர்த்த ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி (மர்ஹும் A.K.A.அப்துல் ஷமது அவர்களின் தந்தையார்) அவர்கள் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் எழுதிய “இயற்கை மதம்” என்ற ஆய்வு நூலுக்கு, …

Read More »

இஸ்லாம் தாக்கப்படும் போதெல்லாம்…

நாம் எங்கிருந்து வந்தோம், எங்குச் செல்கிறோம் எனும் கேள்விக்கு விடை தேடும் போதுதான் ஒவ்வொரு மனிதனும் தத்துவச் சிந்தனையாளன் ஆகிறான். இந்தத் தேடலின் விளைவாகத்தான் உலகம் பல்வேறு கொள்கைகளையும் சிந்தனைகளையும் மாறிமாறிச் சோதித்துப்பார்த்தது! மனிதனை நல்வழிப்படுத்தி உலக மக்களை அமைதியாகவும் சுபிச்சமாகவும் வாழச் செய்ய இதுவரை எத்தனையோ கொள்கைகள் தோன்றி விட்டன. அவை உருவாக்கியவரின் பெயராலோ அல்லது தத்துவத்தின்/கொள்கையின் பெயராலோ அழைக்கப் படுகின்றன. அரசியல் ரீதியான சமூக மாற்றத்தை ஏற்படுத்தி, …

Read More »

இஸ்ரேலின் பார்வையில் ஜனநாயகம்

ஓர் இனம் நசுக்கப்படும் போது நசுக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்று சேர்கிறார்கள். இந்த ஒன்றிணைப்பு ஓர் அமைப்பினையும் ஒரு தலைமைத்துவத்தினையும் ஏற்படுத்தி விடுகின்றது. இப்படித்தான் ஹமாஸ் இயக்கத்தின் தோற்றமுமாகும். எல்லா இயக்கத்திற்கும் அவை உருவாவதற்கான காரணங்களும் சூழலும் உண்டு. ஹமாஸ், இஸ்ரவேலர் பறித்தெடுத்த தாய்நிலததை மீட்டெடுத்து, பாலஸ்தீனத்தை நிர்மானிக்க ஏற்பட்ட (ஜியோனிஸ) எதிர்ப்பு இஸ்லாமிய இயக்கமாகும். ஹமாஸ் என்ற அரபுச் சொல்லுக்கு “ஹரகதுல் முகாவமதுல் இஸ்லாமிய்யா” (حركة المقاومة الاسلامية) என்பதன் …

Read More »

மதரஸாக்கள்- தீவிரவாதப் பட்டறைகளா?

வானத்துக்கு மேலே-பூமிக்கு கீழே நடப்பவைகளைப் பற்றியே மதரஸாக்களில் போதிக்கப் படுகின்றன; உலகம் பற்றியும் நிகழ்வுகள் பற்றியும் அறியும் ஆர்வம் துளியும் இவர்களுகில்லை என்று கேலியாகச் சொல்லப்பட்ட மதரஸாக்கள், சமீபகாலங்களில் மதரஸாக்களையும் அதில் பயிலும் மாணவர்களையும் தீவிரவாதத்துடனும் தீவிரவாதிகளுடனும் இணைத்து பேசப்படுகிறது. “என்னவாயிற்று இவர்களுக்கு? காலங்காலமாக மதரஸாக்கள், இஸ்லாமியக் கல்வியை போதித்து வருவதாகத்தானே அறிந்திருந்தோம். ஏன் திடீரென்று அவை குண்டு வெடிக்கவும், தற்கொலை தாக்குதல் நடத்தவும் பயிற்சி கொடுக்கும் தீவிரவாத தொழிற்சாலையாகின?” …

Read More »

A.R.ரஹ்மானின் பிறந்தநாள் பரிசு

திலீப் குமாராக இருந்து இசைப்புயல் A.R.ரஹ்மானாக மாறியவரின் வாழ்க்கைப் பயணத்தில் இஸ்லாமியத் “தென்றல்” வீசிய அனுபவங்களையும், இன்றைய முஸ்லிம்களின் நிலையையும் பிரபல அரப் நியூஸ் பத்திரிக்கையாளருடன் பகிர்ந்து கொண்டதை மொழியாக்கம் செய்து நாமும் பகிர்ந்து கொள்வோம். A.R.ரஹ்மான் சமீபத்தில் ஹஜ் யாத்திரை மேற்கொண்டார். மனதை மயக்கி இறை வழிபாட்டிலிருந்து தன்னியல்பை மறக்கச் செய்யும் எதையும், அது கலை என்ற பெயரில் சொல்லப்படும் இசையாகவே இருந்தாலும் இஸ்லாம் விரும்பவில்லை. (இதுபற்றி பிறகு …

Read More »

வல்லரசுகளின் பிடியில் பாலஸ்தீனம்

உலகமெங்கும் அலைக்கழிக்கப்பட்டு சுற்றித் திரிந்த யூதர்கள், சுமார் 2000 ஆண்டுகள் வரை கிறிஸ்தவரின் கொடுமைகளுக்கு ஆளாகி வந்துள்ளனர். ஜெர்மனியில் 1933 – 1945 காலப் பகுதியில் ஹிட்லரின் கொடுமைகளுக்கு ஆளான யூதர்களுள் சுமார் 60 லட்சம் பேர் சித்திரவதை செய்யப்பட்டு இறந்துள்ளனர். இது மட்டுமல்ல, உலகில் சிதறி வாழ்ந்த அவர்களுக்கு எம் நாட்டில் இடமளித்து வாழச் செய்வோம் என எந்த மேற்கத்திய நாடும் முன்வரவில்லை. இதற்கு யூதர்களின் இயற்கையான போக்கும் …

Read More »

கார்ட்டூன் விவகாரம்: இழிவுபடுத்தும் உரிமை?

இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை கேவலமாகச் சித்தரித்து டென்மார்க் பத்திரிக்கை (Jyllands-Posten) கார்ட்டூன் வெளியிட்டதையும் அதனை நார்வே கிறிஸ்தவப் பத்திரிக்கை மறுபதிப்புச் செய்து மேலும் அவமதித்ததையும் எதிர்த்து உலக முஸ்லிம்கள் கொதித்தெழுந்துள்ளார்கள். இதன் பிரதிபலிப்பாக பெரும்பாலான முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் டென்மார்க் மற்றும் நார்வேயின் பொருட்களை புறக்கணிப்பு செய்வது என்று முடிவு செய்துள்ளன. இஸ்லாம் உருவ வழிபாட்டையும் அதற்குக் காரணமாக இருக்கும் அநாவசிய சித்திரங்கள் தீட்டுவதையும் தடுக்கிறது. இறைவனைத்தவிர …

Read More »