இமாம் அபூபக்கர் முஹம்மத் அத்தர்தூஷீ அல்மாலிகீ (ரஹ்) கூறுகின்றார்கள்:- “(பயனுள்ள) அறிவையும் சரியான நுட்ப கருத்தையும் செவிமடுக்காது, அறிஞர்கள் மற்றும் சரியான நுட்ப கருத்துடைய ஞானிகளின் அவைகளிலிருந்து விரண்டோடி, உலகத்தின் செய்திகள், ஏனைய மெளட்டீகங்கள், பாமர மக்களின் அவைகளில் இடம்பெறும் (பயனற்ற) விடயங்கள் ஆகியவற்றைச் செவிமடுப்பதில் ஈர்ப்பும் விருப்பும் கொண்டவனாக இருக்கும் மனிதனொருவனை நீ கண்டுவிட்டால் அவனை அருவருப்பான மலம் உருட்டி வண்டுகள் உலகத்தில் கொண்டு போய்ச் சேர்த்து விடு! …
Read More »Tag Archives: உங்கள் சிந்தனைக்கு
ஏகத்துவமும், இஸ்லாமியக் கொள்கையும் சரியாக இருந்தால்தான் வெற்றி! [உங்கள் சிந்தனைக்கு… – 019]
அல்லாமா ரபீbஃ பின் ஹாதீ அல்மத்ஹலீ (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “இஸ்லாமியக் கொள்கையாகிய ‘அகீதா’வையும், ‘தவ்ஹீத்’ எனும் ஏகத்துவத்தையும் (சரியாக விளங்கிச் செயல்படாமல்) நாம் பாழ்படுத்திவிட்டு, அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் விடயத்தில் நாம் வீழ்ந்து விட்டோமாக இருந்தால் (எம்மிடமிருக்கின்ற) ‘பிfக்ஹ்’ எனும் இஸ்லாமிய சட்டத்துறை அறிவுக்கோ, அல்லது வேறு துறைசார் அறிவுக்கோ அல்லாஹ் மீது ஆணையாக எந்தப் பெறுமதியும் இருக்க முடியாது!. வேறு அறிவு எதிலும் எவ்விதப் பயனும் இருக்கவும் முடியாது!. …
Read More »இறுதி முடிவு இனிதாய் அமைய இறைவனிடம் இறைஞ்சுவோம்! [உங்கள் சிந்தனைக்கு… – 018]
இமாம் இஸ்மாஈல் அந்நைசாபூbரீ (ரஹ்) அவர்கள் மரணத்தறுவாயில் இருந்தார்கள். அப்போது அவரிடம் அவரது தாய், “எதைப் பெற்றுக்கொள்கிறாய் மகனே?” என்று கேட்டார்கள். ஆனால், அவரால் பேச முடியவில்லை. உடனே அவர் தனது தாயின் கையில், (அல்குர்ஆனின் 56-ம் அத்தியாயம், 89-வது வசனத்தில் வருகின்ற) فروح وريحان وجنة نعيم» “அவருக்கு நலமும், மணமும், அருள் நிறைந்த சுவர்க்கமும் உண்டு” என்பதை எழுதிவிட்டு பின்னர் மரணத்துவிட்டாா். { நூல்: ‘சியரு அஃலாமின் …
Read More »உன் மரணத்துடன் உன் பாவங்களும் மரணித்து விடட்டும்! [உங்கள் சிந்தனைக்கு… – 017]
ஹபீப் அல்பாfரிசீ (ரஹ்) கூறுகின்றார்கள்:- “ஒரு மனிதன் மரணிக்கின்றபோது, அவனுடன் சேர்ந்து அவனது பாவங்களும் மரணித்து விடுவதுதான் அவனுக்குரிய மகிழ்ச்சியும் ஈடேற்றமுமாகும்!” {நூல்: ‘ஹில்யதுல் அவ்லியா’, 06/152} قال حبيب الفارسي رحمه الله تعالى:- [ إن من سعادة المرء أن يموت وتموت معه ذنوبه! ] { حلية الأولياء، ٦ /١٥٢ } “சமூக வலைத்தளங்களில் பாவங்களை நீ பரப்பிவிட்டு, பின்னர் நீ …
Read More »இரண்டு பாதைகளில் எந்தப் பாதையை நீ தேர்ந்தெடுத்திருக்கின்றாய்? [உங்கள் சிந்தனைக்கு… – 016]
அல்லாமா அஹ்மத் பின் யஹ்யா அந்நஜ்மீ (ரஹ்) கூறுகின்றார்கள்:- “அல்லாஹ்வின் அடியானே! சத்தியத்திற்கு நீ உதவி செய்தது பற்றியும், அல்லது அதற்கு உதவி செய்யாமல் விட்டு விட்டது பற்றியும் அல்லாஹ்வின் முன்னிலையில் நீ வினவப்படுவாய். அப்போது, சத்தியத்திற்கு உதவி புரிந்தவனாக நீ இருந்துவிட்டால் (அல்லாஹ்வின் அருட்பேறுகளைக்கொண்டு) நீ நன்மாராயம் பெற்றுக்கொள்ளலாம். ஏனெனில், சத்தியத்திற்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ் இவ்வாறு வாக்குறுதியளித்துவிட்டான்: “நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால் அவன் …
Read More »முஃமின்களை பலப்படுத்தும் வார்த்தை! [உங்கள் சிந்தனைக்கு… – 015]
“நம்பிக்கை கொண்டோரை இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் உறுதியான வார்த்தையைக்கொண்டு அல்லாஹ் பலப்படுத்துவான்.” (அல்குர்ஆன், 14:27) என்ற இவ்வசனத்திற்கு அல்லாமா ஸாலிஹ் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்கமளிக்கின்றார்கள்:- “வசனத்தில் வருகின்ற உறுதியான வார்த்தை என்பது: ஆதாரம் மற்றும் தெளிவான சான்று மூலம் இறைவிசுவாசியின் உள்ளத்தில் பலம்பெற்றிருக்கும் ‘கலிமதுத் தவ்ஹீத்’ எனும் வார்த்தையாகும். இதைக்கொண்டு இவ்வுலகில் இறைவிசுவாசிகளை பலப்படுத்துதல் என்பதன் பொருள்: இதன் பாதையில் பயணிக்கின்றபோது தொல்லையோ, வேதனையோ இவர்களுக்கு …
Read More »எது நல்ல வாழ்க்கை? [உங்கள் சிந்தனைக்கு… – 014]
அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:- “நல்ல வாழ்க்கை என்பது, பொதுமக்கள் சிலர் விளங்கி வைத்திருப்பதுபோல வறுமை, நோய், கவலை போன்ற ஆபத்துக்களிலிருந்து ஈடேற்றமடைந்திருப்பது என்பதல்ல. மாறாக, ஒரு மனிதன் உள்ளம் தூய்மையானவனாகவும், (இஸ்லாத்தைத் தூய வடிவில் விளங்கிச் செயல்படுவதன்பால்) உள்ளம் விரிந்தவனாகவும், அல்லாஹ்வின் கழா கத்ரில் திருப்திகொண்டவனாகவும் இருப்பதுதான் நல்ல வாழ்க்கையாகும். அத்தோடு அவனுக்கு மகிழ்ச்சியான விடயம் ஒன்று ஏற்பட்டால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவான்; அது …
Read More »அசத்தியதிற்கு உதவுவோர் அதிகம்பேர் என்று நீ ஆச்சரியப்படாதே! [உங்கள் சிந்தனைக்கு… – 013]
“அசத்தியத்திற்கு உதவி செய்வோர் அதிகம்பேர் இருக்கிறார்கள் என்று நீ ஆச்சரியப்பட்டு விடாதே! தஜ்ஜாலின் கண்கள் இரண்டிற்குமிடையில் (நெற்றியில்) ‘காபிfர்’ என்று எழுதப்பட்டிருப்பினும், அவனை அதிகமானோர் பின்பற்றத்தான் போகிறார்கள்! { முகநூலில் بكري محمد أحمد علي என்பவர் } [ لا تتعجب من كثرة أنصار الباطل! فالدجال مكتوب بين عينيه «كافر»، ورغم ذلك سيتبعه الكثيرون…. ] { بكري محمد أحمد علي …
Read More »சத்தியத்திற்காகச் சோதனைகளைச் சந்திப்போர் இருக்கின்ற பாதையே சரியான பாதையாகும்! [உங்கள் சிந்தனைக்கு… – 012]
அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:- “(சத்தியத்திற்காகச் சோதனைகளைச் சந்திப்போர் இருந்து வருகின்ற) பாதையே சரியான பாதையாகும்!. இப்பாதையில்தான் ஆதம் (அலை) அவர்கள் களைப்படைந்தார்கள்; இந்த சத்தியத்திற்காக வேண்டித்தான் நூஹ் (அலை)அவர்கள் கடும் கஷ்டங்களை அனுபவித்தார்கள்; ‘அல்லாஹ்வின் தோழர்’ என்றழைக்கப்படும் இப்ராஹீம் (அலை) அவர்களும் நெருப்பில் எறியப்பட்டார்கள்; அறுவைக்காக இஸ்மாஈல் (அலை) அவர்கள் பூமியில் மல்லாக்கக் கிடத்தப்பட்டார்கள்; அற்ப விலைக்கு யூசுப் (அலை) அவர்கள் விற்கப்பட்டு, சில வருடங்கள் …
Read More »அல்லாஹ்வின் வல்லமையை சரியாகப் புரிந்தவன், பக்குவமாக வாழ்ந்து கொள்வான்! [உங்கள் சிந்தனைக்கு… – 011]
சஊதி அரேபிய நாட்டு அறிஞர், அஷ்ஷெய்க் அப்துர்ரஸ்ஸாக் பின் அப்துல் முஹ்சின் அல்பbத்ர் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- அல்லாஹ் நன்கு செவியேற்பவன்; அவன் பார்ப்பவன்; அவன் அனைத்தையும் நன்கறிந்தவன்; வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றில் அணுவளவும் அவனுக்கு மறைந்திருக்காது; ரகசியத்தையும், மறைத்து வைத்திருப்பவற்றையும் அவன் நன்கறிவான்; கண்களின் மோசடியையும், உள்ளங்கள் மறைத்து வைத்திருப்பவற்றையும் அவன் நன்கறிவான்; அனைத்தையும் அறிவால் அவன் சூழ்ந்திருக்கின்றான்; மேலும், அனைத்தையும் எண்ணிக்கையால் அவன் கணக்கிட்டும் வைத்துள்ளான் என்பன போன்ற …
Read More »