அதற்கு ‘ஜபலுந்நூர்’ (ஒளி மலை) என்றும் கூறுவார்கள். அந்த மலைக்கு ஏன் அந்தப் பெயர் சொல்லப்படுகிறது தெரியுமா? உலகையே இருளில் இருந்து மீட்டு ஒளியின் பால் இட்டுச் செல்லும் அற்புத வேதம் குர்ஆன் முதன்முதலில் இறக்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் தமது நாற்பதாவது வயது நெருங்கையில் மனித இனத்தின் அவல நிலை குறித்து கவலைப்பட்டார்கள். இதனால் தனித்திருந்து இறைதியானத்தில் ஈடுபட்டார்கள். அந்த மலை உச்சியில் உள்ள குகையில் அவர்கள் இருக்கும் போது …
Read More »Tag Archives: திருக்குர்ஆன் கூறும் உண்மைக் கதைகள்
அன்னை மரியமும்; அற்புதக் குழந்தை ஈஸாவும்! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-40]
இம்ரான் என்றொருவர் இருந்தார். அவரது மனைவி கருவுற்றார். அவர் தனக்கு ஆண் குழந்தை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். தனது வயிற்றில் இருக்கும் குழந்தையை பலஸ்த்தீன் பள்ளியில் பணிபுரிய அல்லாஹ்விடம் நேர்ச்சையும் செய்து கொண்டார். ஆனால் அவருக்கு பெண் குழந்தையே கிடைத்தது. அந்தக் குழந்தைக்கு மர்யம் எனப் பெயர் சூட்டினார். அந்தக் குழந்தையையும் அதற்குக் கிடைக்கும் குழந்தையையும் அல்லாஹ் ஷைத்தானிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் பிரார்த்தித்தார். மர்யம் வளர்ந்தாள். பக்குவமும் …
Read More »உயிருடன் உயர்த்தப்பட்ட ஈஸா நபி [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-39]
உயிருடன் உயர்த்தப்பட்ட ஈஸா நபி ஈஸா(அலை) அவர்கள் யூதர்களுக்கு மத்தியில் சத்திய சோதனை செய்தார். அவர் யூத மத குருக்களின் துரோகச் செயல்களைத் தோலுரித்தார். மதத்தின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களுக்கு எதிராக சாட்டையாகச் சுழன்றார். யூத மத குருக்கள், மதத்தின் பெயரில் செய்யும் சுரண்டல்கள் குறித்தும், மதத்தில் அவர்கள் செய்த இடைச் செருகல்கள் குறித்தும் அவர் போதனை செய்தார். யூதர்கள் சதி செய்வதில் வல்லவர்கள். துரோகம் செய்வது அவர்களின் கூடப் …
Read More »ஈஸா நபியும்… அற்புதங்களும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-38]
ஈஸா(அலை) அவர்கள் தந்தை இல்லாமல் அற்புதமாகப் பிறந்தவர். அவரது தாயார் அன்னை மரியம்(அலை) அவர்கள் கற்பொழுக்கம் மிக்கவர்கள், இறை நம்பிக்கை உடையவர்களுக்கு அல்லாஹ் காட்டும் உதாரணமாகத் திகழ்ந்தார்கள். ஈஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைத்தூதராவார். அல்லாஹ் இறைத் தூதர்களை அனுப்பும்போது அவர்களுக்கு சில அற்புதங்களை வழங்குவான். அந்த அற்புதங்கள் அவர்கள் இறைத்தூதர்கள் என்பதற்கான ஆதாரமாக அமையும். அந்த அற்புதங்களை அவர்கள் நினைக்கும் போதெல்லாம் செய்ய முடியாது. அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் …
Read More »சுலைமான் நபியும்… சாதுர்யமான தீர்ப்பும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-37]
தாவூத் நபியின் மகன்தான் சுலைமான் நபியாவார். இவர்கள் இருவரும் நபியாகவும் மன்னர்களாகவும் இருந்தனர். இவர்கள் மன்னர்கள் என்பதால் புதுப்புதுப் பிரச்சினைகள் இவர்களிடம் வருவதுண்டு. இவர்களில் சுலைமான் நபி மிகவும் நுட்பமாக, பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு கூறுபவராக இருந்தார்கள். இதற்கு ஒரு உதாரணத்தைக் கூறலாம். ஒரே நேரத்தில் இரு சகோதரிகளுக்கு குழந்தைகள் கிடைத்தன. அந்த இரு குழந்தைகளில் ஒரு குழந்தையை ஓநாய் தூக்கிச் சென்று விட்டது. இருக்கும் குழந்தைக்கு இருவரும் உரிமை …
Read More »அழிக்கப்பட்ட கிடங்குவாசிகள்-2 [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-36]
அழிக்கப்பட்ட கிடங்குவாசிகள்-1 [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-35] அந்தக் கொடுங்கோல் அரசனின் அரச சபையில் ஒரு பிறவிக் குருடன் இருந்தான். அவனுக்கும் செய்தி எட்டியது. அவன் நிறைய பரிசுப் பொருட்களை எடுத்துக் கொண்ட சிறுவனிடம் வந்தான். பொருட்களைக் காட்டி, “நீ என் கண்ணைக் குணமாக்கினால், இத்தனைப் பரிசுப் பொருட்களையும் உனக்குத் தருவேன்” எனக் கூறினான். அதற்கு சிறுவன், “என்னால் எவருடைய நோயையும் குணப்படுத்த முடியாது. அல்லாஹ் ஒருவனால் மட்டுமே நோய் நீக்க …
Read More »அழிக்கப்பட்ட கிடங்குவாசிகள்-1 [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-35]
அழிக்கப்பட்ட கிடங்குவாசிகள் அழிக்கப்பட்ட கிடங்குவாசிகள் என்றால் யார் என்று தெரியுமா? அவர்கள் ஏன் அழிக்கப்பட்டார்கள் எனத் தெரியுமா? வாருங்கள் தெரிந்து கொள்வோம். கிடங்கு என்பது நெருப்புக் கிடங்காகும். அல்குர்ஆனில் சூறா ‘அல்புரூஜ் என்றறொரு (85) அத்தியாயம் உள்ளது. அதில் அல்லாஹுத்தஆலா இந்த வரலாற்றை சுருக்கமாகக் கூறுகின்றான். நபி(ஸல்) அவர்கள் அந்த சம்பவத்தை விவரித்துக் கூறுகின்றார்கள். வாருங்கள் அந்த வரலாற்றை வாசிப்போம். முன் ஒரு காலத்தில் கொடுங்கோல் அரசன் (ஒரு ஊரை …
Read More »அடித்துக் கொன்றவர்கள், அழிக்கப்பட்டனர்! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-34]
அடித்துக் கொன்றவர்கள் அழிக்கப்பட்டனர் ஒரு ஊர் இருந்தது. அந்த ஊருக்கு அல்லாஹ் மூன்று தூதர்களை அனுப்பினான். அந்த ஊர் மக்கள் அல்லாஹ்வின் அருளுக்குத் தகுதியானவர்களாக இருக்கவில்லை. அழிந்து போனார்கள்! ஆம் ‘அன்தாக்கியா’ எனும் ஊர் மக்கள் அறியாமையிலும் சிலை வணக்கத்திலும் மூழ்கியிருந்தனர். அங்கே அநியாயமான ஒரு ஆட்சியும் இருந்தது. அந்த ஊரில் ‘ஹபீப்’ என்ற ஒருவர் இருந்தார். அவர் சிலை வணக்கத்தை வெறுத்தார். மூட நம்பிக்கைகளை மறுத்தார். ஆனால் தனிமரம் தோப்பாகாதே! …
Read More »நூஹ் நபியும்… கப்பலும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-33]
நூஹ் நபியும்… கப்பலும்… ஆதம் நபி காலத்தில் மக்கள் அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்கி வந்தனர். பல தெய்வ நம்பிக்கை அப்போது இருக்கவில்லை. சிலை வணக்கமும் இருக்கவில்லை. அந்த மக்களில் மிகச்சிறந்த சிலர் இருந்தனர். அவர்கள் இறந்த பின்னர் அவர்கள் மீது பற்றுக் கொண்ட மக்கள் அவர்களின் மண்ணறைகளில் சில அடையாளங்களை வைத்தனர். பிற்பட்ட காலத்தில் வந்த மக்கள் அந்த கப்ருகளில் ஏதோ விசேசம் இருப்பதாக எண்ணி அந்தகல்லறைகளை தரிசித்தனர். அங்கே …
Read More »கடல் பிளந்த அதிசயம்! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-32]
இஸ்ரவேல் சமூகம் எகிப்தில் அடிமைகளாக இருந்தனர். அவர்களது விடுதலைக்காக மூஸா நபி போராடினார். பிர்அவ்ன் இஸ்ரவேல் சமூகத்திற்கு விடுதலைக் கொடுக்கவும் இல்லை. அவர்களை நாட்டை விட்டும் வெளியே செல்ல அனுமதிக்கவும் இல்லை. இந்த நிலையில் தான் மூஸா நபி தமது தாயகப் பூமியான பலஸ்தீனத்திற்கு இஸ்ரவேல் சமூகத்தை அழைத்துக் கொண்டு இரவில் பயணித்தார். அவர்கள் பெண்கள் சிறுவர்கள் முதியவர்கள் என பயணித்தனர். ஒருநாள் அதிகாலை வேளை மூஸா நபியும் அவர்களது …
Read More »