இஸ்லாம் குறித்த காரசாரமான விமரிசனங்கள் பல வலைப்பதிவுகளில் நடைபெற்று வருகிறது. ‘இஸ்லாத்தைப்பற்றி மற்றவர்கள் விமரிசனம் செய்யக்கூடாதா?’ என்ற கேள்வியும் அவ்வப்போது எழுகிறது. நான் மார்க்க அறிஞனல்ல என்றாலும், நானறிந்த வரையில் ஒரு சிறு விளக்கத்தை தரலாம் என்று நினைக்கிறேன். யாரையும் பழிப்பதோ, குத்திக்காட்டுவதோ என் நோக்கமல்ல என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். விமரிசனம் என்பது இஸ்லாத்திற்கு புதியது அல்ல. நபிகளாரின் காலத்திலிருந்தே அது கடுமையான கண்டனங்களையும் விமரிசனங்களையும் சந்தித்தே வந்திருகிறது. அவற்றிற்கான …
Read More »சிருஷ்டிகளிடம் எதைக் கேட்கலாம்?
கேட்காலாமென்று அனுமதிக்கப்பட்டவற்றில் ஒன்று கல்வி. கல்வியைத் தெரியாதவன் தெரிந்தவனிடம் கேட்கலாம். கேட்டு விளங்கலாம். இதை இறைவனும் மனிதனுக்கு ஏவியிருக்கிறான்: “நீங்கள் அறிந்து கொள்ளாமலிருந்தால் கற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்”. (16:43) “…(இதனை) நீங்கள் அறியாவிட்டால் முன்னருள்ள வேதத்தையுடையோரிடமேனும் கேட்டறிந்து கொள்ளுங்கள்”. (21:7) “உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த நம்முடைய தூதர்களைப் பற்றி நீர் கேளும். வணங்கப்படுவதற்கு ரஹ்மானையன்றி வேறொரு ஆண்டவனை நாம் ஆக்கினோமா? (என்று)”. (43:45)
Read More »53] ஹிட்லரின் தற்கொலை
நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 53 ஜெர்மனியில் ஹிட்லரின் ராஜாங்கம் ஆரம்பமானதிலிருந்து, அவரது மறைவை ஒட்டி ஒரு முடிவுக்கு வந்த இரண்டாம் உலக யுத்தம் வரை முழுவதுமாகத் தெரிந்துகொள்ளவேண்டுமானால், அதற்கு ஏராளமான சுவாரசியமான புத்தகங்கள் இருக்கின்றன. வில்லியம் ஷிரரின் The Rise and Fall of the Third Riech படித்துப் பாருங்கள். ஒரு திரைப்படம் பார்ப்பது போலவே இருக்கும். ஹிட்லரின் யூதப் படுகொலைகள், அதனைத் தொடர்ந்து யுத்தத்தில் …
Read More »52] இரண்டாவது மிகப்பெரிய தவறு
நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 52 இரண்டாம் உலகப்போரின் சூடு, ஒட்டுமொத்த உலகத்தையும் தாக்கிக்கொண்டிருந்த நேரம். ஐரோப்பா தொடங்கி ஆப்பிரிக்கா வரை யுத்தத்தின் சத்தம் மிகப் பயங்கரமாகக் கேட்டுக்கொண்டிருந்ததால், ஹிட்லரின் யூத இனப்படுகொலைகள் அந்த நேரத்தில் சற்று மெதுவாகவே மக்களுக்குத் தெரியவந்தன. யூதர்கள் மட்டும் தாம் வாழும் தேசங்களில் ஹிட்லருக்கு எதிரான போராட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டம் என்று அமர்க்களப்படுத்தி விஷயத்தை அவ்வப்போது தெரியப்படுத்திக்கொண்டிராவிட்டால், ஒருவேளை இன்றைக்குக் கிடைக்கும் கொஞ்சநஞ்ச …
Read More »மனைவி உங்கள் விளை நிலம்.
விதைக்கும் கருவைப் பேணி வளர்த்துக் குழந்தையாகப் பெற்றெடுக்கும் விளை நிலமே மனைவி – மனைவி உங்கள் விளை நிலம் என்று இங்கே உவமாணமாகச் சொல்லப்படுகிறது. அதுவும் அன்றைய யூதர்களின் தவறான நம்பிக்கையை மறுத்தே சொல்லப்பட்டது. ஒருவர் தம் மனைவியிடம் பின்பக்கத்திலிருந்து உடலுறவு கொண்டால் குழந்தை மாறுகண் கொண்டதாகப் பிறக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் காலத்து யூதர்கள் சொல்லிவந்தார்கள். இந்தத் தவறான நம்பிக்கைக்கு எதிராகவே இவ்வசனம் அருளப்பட்டது. (புகாரி, முஸ்லிம்) …
Read More »அனுஷ்டானங்களில் சிறந்தது தொழுகை
வழிபாடுகளில் ஏற்றமானது தொழுகை. அத்தொழுகையில் குர்ஆன் ஓதுதல், துஆக்கள் கேட்டல், திக்ரு செய்தல் யாவும் அடங்கியிருக்கின்றன. இதில் ஒவ்வொன்றும் அதற்குரிய குறிப்பிட்ட இடத்தில் சொல்ல வேண்டுமென்பது சட்டம். தக்பீர் கட்டித் தொழுகையில் நுழைந்து ‘வஜ்ஜஹ்த்து, தனா போன்றவை ஒதி முடித்ததும் குர்ஆனிலிருந்து சிறிதளவு ஓதவேண்டும். ருகூவிலும், ஸுஜுதிலும் குர்ஆன் ஓதுதல் விலக்கப்பட்டுள்ளது. இவ்விரு இடங்களிலும் திக்ருகள், துஆக்கள் தான் ஓதவேண்டும். பெருமானார் அவர்கள் தொழுகையின் இறுதியில் பிரார்த்தித்திருக்கிறார்கள். தோழர்களிடமும் அதைப் …
Read More »எழுதுவோம்.
//*காஃபாவைப் புனித ஆலயமாக இஸ்லாம் அறிவித்திருப்பதால் அங்கே கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டிய சிலக் கட்டுபாடுகள் உண்டு, இஸ்லாத்தைச் சார்ந்தவர்களாலேயே அதைப்பேண முடியும் மற்றவர்களுக்குத் தெரியாது என்பதால் இயலாது. இது பற்றி விரிவாக என்பதிவில் எழுதவுள்ளேன்.—சிவா & ஈரோடு பிலிம்ஸ்,இது குறித்து எழுதுகிறேன். தற்போது நிறைய வேலைகள் இருப்பதால் உடனடியாக எழுத இயலாது என்றே நினைக்கிறேன். அதற்குள் அபூ முஹை அவர்கள் மேலே கண்டிருப்பது போன்று இது குறித்து விளக்கி எழுதுவார் …
Read More »இறை நேசர்கள் (2)
வாழ்க்கையில் எப்படித்தான் சிக்கல்கள், துன்பங்கள், துயரங்கள் நேர்ந்தாலும் அவற்றிலிருந்து விடுதலை பெற அல்லாஹ் ஒருவனை மட்டும் நாட வேண்டும். எவரிடத்திலும் முஸ்லிம் தன் துயரங்களை முறையிடுதல் ஆகாது என்று குர்ஆன் விளக்கிக் காட்டுகிறது: “அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்குக் கொடுத்ததைப் பற்றித் திருப்தியடைந்து ‘அல்லாஹ் நமக்குப் போதுமானவன், அல்லாஹ் தன் கிருபையைக் கொண்டு மேலும் அருள் புரிவான், அவனுடைய தூதரும் (அருள் புரியலாம்) நிச்சயமாக நாம் அல்லாஹ்வையே நம்பியிருக்கிறோம்’ என …
Read More »அவசரப் பதிவு.
//*இந்நிலையில் என்னை வசைபாடுவதை விடுத்து (குறிப்பாக அபூ முஹை அவரது ஒரு பதிவில் என்னையும் எனது பிறப்பையும் பற்றி வசைபாடியிருந்தார்),*// மனித குலம் அனைத்தும் தொடக்கத்தில் ஒரே தாய், தந்தையிடமிருந்தே பல்கிப் பெருகியவர்கள் என்பதை ஆழமாக நம்புபவன் நான். நேசகுமாரின் கர்வத்தையே நான் சாடியிருக்கிறேன், அவரது பிறப்பைப் பற்றி எங்கும் வசைபாடியதில்லை. என் மீது சுமத்தும் இந்தக் குற்றச்சாட்டு தவறான புரிதல், அல்லது அவதூறாகவே இருக்க வேண்டும். எடுத்துக் காட்டினால் …
Read More »51] ஹிட்லரின் விஷவாயு கொலைக்கூடங்கள்
நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 51 முதன்முதலில் ஹிட்லரை சந்தோஷப்படுத்துவதற்காகத்தான் நாஜிகள், யூதர்களைக் கொல்ல ஆரம்பித்தார்கள். பிறகு, யூத ஒழிப்பு என்பது ஜெர்மானிய அரசின் தலையாய செயல்திட்டங்களுள் ஒன்றானபோது, பார்க்கும் இடங்களில் தென்படும் அத்தனை யூதர்களையும் கொன்றார்கள். ஒரு கட்டத்தில், ஹிட்லரின் சந்தோஷம், தேசிய செயல்திட்டம் என்பதையெல்லாம் தாண்டி, யூதர்களைக் கொல்வதென்பது, ஜெர்மானிய நாஜிகளுக்கு ஒரு நோய் போலவே ஆகிவிட்டது. ரத்தத்தில் கலந்துவிட்ட தொற்றுநோய். பொழுது விடிந்து பொழுதுபோனால், …
Read More »