128- இன்னாரின் தந்தையின் குடும்பத்தார் என் நேசர்கள் அல்லர், என் நேசர்கள் யாரெனில், அல்லாஹ்வும் நல்ல இறை நம்பிக்கையாளர்களும் தாம் என நபி (ஸல்) அவர்கள் ஒளிவு மறைவின்றி பகிரங்கமாகவே கூறினார்கள். ஆயினும் அவர்களுடன் எனக்கு இரத்த உறவு உண்டு. அதை நான் (காய்ந்து போகவிடாமல்) பசுமையாக்குவேன் என்று கூறியதாக அதிகபட்சமாக இடம்பெற்றுள்ளது. அதாவது, அவர்களின் உறவைப் பேணி நடந்து கொள்வேன் என்றார்கள். புகாரி-5990: அம்ர் பின் ஆஸ் (ரலி)
Read More »மிக இலேசான நரகவேதனை
127- மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் இலேசாக வேதனை செய்யப்படுபவர் ஒரு மனிதராவார். அவருடைய உள்ளங்கால்களின் நடுவில் இரண்டு நெருப்புக் கங்குகள் வைக்கப்படும். (அடுப்பில் வைக்கப்பட்டுள்ள) செம்புப் பாத்திரம் (அல்லது) பன்னீர் பாத்திரம் கொதிப்பதைப் போன்று அவற்றால் அவரது மூளை கொதிக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-6562: நுஃமான் பின் பஷீர்(ரலி)
Read More »ஆனால்?……………..
126- நபி (ஸல்) அவர்களிடம் அவர்களுடைய பெரிய தந்தை அபூதாலிப் அவர்களைப் பற்றிக் கூறப்பட்டபோது அவர்கள், அவருக்கு என் பரிந்துரை மறுமைநாளில் பயனளிக்கக்கூடும். (அதனால்) நரகநெருப்பு அவரது (முழுஉடலையும் தீண்டாமல்) கணுக்கால் வரை மட்டுமே தீண்டும்படி ஆக்கப்படலாம். (ஆனால்) அதனால் அவருடைய மூளை (தகித்துக்) கொதிக்கும் என்று சொல்ல நான் கேட்டேன். புகாரி-3885: அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)
Read More »நபி(ஸல்)அவர்களின் பரிந்துரை அபூதாலிப் மீது…
125- நான் (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் உங்கள் பெரிய தந்தை (அபூதாலிபு)க்கு (அவர் செய்த உதவிகளுக்குக் கைமாறாக) நீங்கள் என்ன பயனை அளித்தீர்கள்? ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக, அவர் உங்களை (எதிரிகளின் தாக்குதலிலிருந்து) பாதுகாப்பவராகவும், உங்களுக்காக (உங்கள் எதிரிகளிடம்) கோபப்படுபவராகவும் இருந்தாரே என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அவர் இப்போது (கணுக்கால் வரை தீண்டும்) சிறிதளவு நரக நெருப்பில் தான் இருக்கிறார். நான் மட்டும் இல்லையென்றால் அவர் …
Read More »அழியட்டும் அபூலஹபின் இருகரங்கள்……
124- (நபியே) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! (அதாவது) தூய மனம் படைத்த உம்முடைய குழவினரையும் (எச்சரிக்கை செய்வீராக!) எனும் (26:214 ஆவது) இறைவசம் அருளப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்று ஸஃபா (மலை) மீதேறி உரத்த குரலில், யா ஸபாஹா (அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!) என்று கூறினார்கள். அப்போது (மக்கா நகர) மக்கள் யார் இவர்? என்று கூறியவாறு நபியவர்களிடம் ஒன்று …
Read More »ஓரிறைக் கொள்கையும் நற்செயல்களும்…..
123- உங்கள் நெருங்கிய உறவினர்களை அச்சுறுத்தி எச்சரியுங்கள் என்னும் (26:214) இறைவசனத்தை அல்லாஹ் அருளிய பொழுது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, குறைஷிக் குலத்தாரே! என்றோ அது போன்ற ஒரு சொல்லையோ கூறி (அழைத்து) ஓரிறை வணக்கத்தையும், நற்செயல்களையும் விலையாகத் தந்து உங்களுக்கு (நரகநெருப்பிலிருந்து) விடுதலை வாங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து சிறிதளவும் உங்களை காப்பாற்ற என்னால் முடியாது. அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து …
Read More »நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனை!
122- ஒவ்வோர் இறைத்தூதரும் ஒரு (பிரத்தியேக) வேண்டுதல் செய்து விட்டனர். அல்லது ஒவ்வோர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாருக்கும் (தம் சமுதாயத்தார் தொடர்பாக) ஒரு (விசேஷப்) பிரார்த்தனை உண்டு. அதனை அவர்கள் (இம்மையிலேயே) கேட்டு விட்டனர். அது ஏற்றுக் கொள்ளப்பட்டும் விட்டது. நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரை செய்ய வைத்துள்ளேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-6305: அனஸ்(ரலி)
Read More »1. இறைவனுக்கு உவமை மனிதர்களில் உள்ள நீதிபதியா?
இறைநேசர்களிடம் உதவி தேடுதல் – குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஓர் ஆய்வு இறைநேசர்களிடம் கையேந்தி நிற்கும் முஸ்லிம்களில் சிலர் அவர்களுடைய அறியாமையினால், ‘நீதிபதியிடம் வாதாடுவதற்கு நமக்கு ஒரு வக்கீல் தேவையல்லவா? அல்லது ஒரு பெரிய அமைச்சரிடம் நமது தேவையை கேட்டுப் பெறுவதற்கு அவருக்கு நெருக்கமானவரை பரிந்துரை செய்வதற்காக நியமிப்பதில்லையா? அதுபோல் தான் நாங்களும் இறைவனிடம் எங்களுக்காக வாதாடி, கேட்டுப் பெறுவதற்காக இறைவனுக்கு நெருக்கமான இறைநேசர்கள் மூலம் வேண்டுகிறோம்’ என்று கூறுகின்றனர். …
Read More »மகாராஷ்டிரா மசூதி அருகே குண்டு வெடிப்பு – 30 பேர் பலி
மகாராஷ்டிர மாநிலம் மலேகாவ்ன் நகரில் இன்று மசூதிக்கு வெளியே பயங்கர குண்டு வெடித்தது. இதில், 30க்கும் மேற்பட்டவர் பலியாயினர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். மதக் கலவரங்களுக்குப் பேர் போன இந்த நகரில் நடந்துள்ள இந்த குண்டு வெடிப்பால் மகாராஷ்டிரா முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது. படா கபரிஸ்தான் பகுதியில் உள்ள நுரானி மஸ்ஜித் என்ற மசூதிக்கு வெளியே இந்த குண்டு வெடிப்பு நடந்தது. இன்று ஷபாப்ஏராத் (ஷபே பராஅத்) என்ற …
Read More »அல்லாஹ் நாடினால்……..
121- ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தம் சமுதாயத்தவருக்காகப் பிரார்த்தித்துக் கொள்ள அங்கீகரிக்கப்பெற்ற) ஒரு பிரார்த்தனை உண்டு. அல்லாஹ் நாடினால் என் பிரார்த்தனையை மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரைக்க பத்திரப்படுத்தி வைக்க நான் விரும்புகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-7474: அபூஹூரைரா(ரலி)
Read More »