மரணித்தவர்களும், மார்க்கமும் மனிதனாக படைக்கப்பட்ட அனைவரும் ஒருநாள் மரணத்தை சுவைத்தே தீரவேண்டும். அகிலங்களின் அதிபதியும், அர்ஷின் இரட்சகனுமாகிய அல்லாஹ் மாத்திரமே என்றும் நிலையானவன், நித்தியஜீவன்.
Read More »நூல்கள்
[தொடர் 9] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்
மார்க்கத்தைப் புரிந்து கொள்ள சில அடிப்படைகள் மார்க்கத்தில் மனித விருப்பு வெறுப்பிற்கு இடமில்லை இஸ்லாம் பரிபூரணமான வாழ்க்கை நெறியாகும். மலசலம் கழிப்பது முதல் அரசியல் விவகாரம் வரையுள்ள சகலவிதமான அம்சங்களையும் அது தெளிவுபடுத்தி விட்டது. அதில் கூடுதல், குறைவு செய்யவோ, அல்லது அதை மூதாதையர் மயமாக்கல் செய்யவோ எவருக்கும் அதிகாரம் கிடையாது. இதை அல்லாஹ்வின் திருமறை வசனங்களும், அவனது இறுதித்தூதரின் போதனைகளும் உறுதி செய்கின்றன.
Read More »[தொடர் 6] சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்
சூஃபித்துவத்தின் தோற்றம் இவ்விடத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதாவது அல்லாஹ்வின் பகிரங்க விரோதியான ஷைத்தான் மனித சமூகத்தை நேர்வழியை விட்டும் திசை திருப்பி நரகத்தில் வீழ்த்துவதற்காக இரண்டு விதமான யுக்திகளைக் கையாள்வான். ஒன்று இஸ்லாமியக் கோட்பாடுகள் சட்ட திட்டங்களைக் கடைப்பிடிப்பதில் வெறுப்பை ஏற்படுத்தி அதன் மூலம் இஸ்லாத்தை விட்டும் தூரமாக்கி பாவச் செயல்களில் ஈடுபடச் செய்து வழிகெடுத்து விடுவான்.
Read More »[தொடர் 8] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்
முன்னோர்களின் (ஸலபுக்களின்) அடிப்படைக் கோட்பாட்டிலிருந்து விலகுதல் அல்குர்ஆனையும், அல்ஹதீஸையும் அதிமதிகம் அறிந்தவர்கள் ஸஹாபாக்களும், அவர்களின் வழி வந்தவர்களுமே! அவர்களின் விளக்கத்துடன் குறிப்பாக அகீதாவுடன் தொடர்புடைய விளக்கத்தோடு நமது விளக்கம் முரண்படுகின்ற போது நாம் அவர்களின் விளக்கத்தையே முன்னிலைப்படுத்த வேண்டும்.
Read More »[தொடர் 5] சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்
சூஃபித்துவம் என்றால் என்ன? சூஃபித்துவம் என்றால் என்ன என்பது பற்றிய தெளிவான வரை விலக்கணத்தை சூஃபித்துவ வாதிகளின் நூல்களில் கூட விரிவாகக் காணமுடியவில்லை. எனினும் அவர்களது கருத்துக்கள் சிந்தனைப் போக்குகளிலிருந்து இவ்வாறு விளங்க முடிகின்றது.
Read More »[தொடர் 7] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்
தனது அறிவுக்கு முக்கியத்துவம் வழங்குதல் ஆதம் (அலை) அவர்களுக்கு சுஜுத் செய்யுமாறு அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வால் பணிக்கப்பட்ட சைத்தான் சுஜுத் செய்ய மறுத்ததான். அவனிடம் அதன் காரணம் பற்றி கேட்கப்பட்டது, நீ என்னை நெருப்பினால் படைத்துள்ளாய், ஆதமை களிமண்ணால் படைத்துள்ளாய். களிமண்ணால் படைக்கப்பட்ட ஒருவனுக்கு நான் சுஜுத் செய்வதா என்ன! என அல்லாஹ்விடம் சைத்தான் கூறியதைக் கவனித்தால் தனதறிவிற்கு முக்கியத்துவம் அளித்து, நரகத்திற்கு இடத்தை அவனே தேடிக்கொண்டதைப் பார்க்கின்றோம்
Read More »[தொடர் 4] சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்
இஸ்லாத்தில் மெஞ்ஞானமா? நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் முழு மனித சமு தாயத்துக்குமே நபியாக அனுப்பப்பட்டவர்கள். அவர்களுக்கு அல்லாஹ் மக்கள் நேர்வழி பெறவேண்டும் என்பதற்காக அல்குர் ஆனை அருளினான். நபியவர்களும் உலக மக்கள் அனை வருக்கும் இவ்வுலகில் ஒருமனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் எதிர் நோக்கும் தேவைகள், பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வினை இனிதே கூறிச்சென்றிருக்கின்றார்கள்.
Read More »[தொடர் 6] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்
அல்குர்ஆனைத் தவறாகப் புரிதல் இந்தப்பிரிகள் அல்குர்ஆனையும், ஹதீஸையும் தவறாகப்புரிந்தோ, அல்லது வியாக்கியானம் செய்தோ, அல்லது தமது வழிகேட்டுக்கு ஏதுவாக அவற்றை வளைத்துக் கூறியோ வழிகெட்ட தோற்றம் பெற்றிருக்கின்றன.
Read More »[தொடர் 3] சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்
உள்ளே செல்லுமுன்.. சூஃபித்துவத் தரீக்காக்கள்பற்றி தமிழக, இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமின்றி அரபுலக முஸ்லிம்களில் கணிசமானோரிடம் கூட இன்று வரைக்கும் சரியான கருத்துக் கண்ணோட்டம் வரவில்லையென்றே சொல்லவேண்டும். காரணம் காலா காலாமாக இவர்களைப்பற்றிய உண்மை அறிமுகம் உலமாக்களாலோ தமிழுலக எழுத்தார்களாலோ அதன் தூய வடிவில் முன்வைக்கப்படவில்லை என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டியுள்ளது.
Read More »[தொடர் 5] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்
வழிகேடுகளை வரவழைப்பவை: மனோ இச்சை நேர்வழிக்கு பிரதான தடைக்கல்லாக உள்ளதும், உலகில் வழி கெட்ட கொள்கைகள் விரிவடைவதற்கும் மனோ இச்சைகளும் ஒரு காரணமாகும். வழிகேடுகளும், சீரழிவுகளும் நிகழ பெரிதும் பங்காற்றும் இந்த ‘மனோ இச்சை’ பற்றிய தெளிவும், எச்சரிக்கையும் ஒரு முஸ்லிமிடம் இருக்க வேண்டும்.
Read More »