Featured Posts

வஹி: இறைச்செய்தியும் – அறிவியலும்-7

உருண்ட பூமி -7 ஏ.கே.அப்துர் ரஹ்மான் மூடிய இருட்டுக்குள் அயர்ந்துறங்கும் பூமியின் மீது தன் செங்கதிர்களை வாரியிறைத்து கிழக்கில் தோன்றுகிறான் ஆதவன். பிறகு மெல்ல ஊர்ந்து வந்து உச்சியில் காய்ந்து அந்திப் பொழுதில் மேற்கில் மறைகிறான். அதன் பிறகும் நிற்பதில்லை இந்த விண்ணுலா. அடுத்த விடியலைத் தோற்றுவிக்க கிழக்கில் முளைக்கிறான். என்ன விந்தை! மண்ணக மாந்தரெல்லாம் விண்கண்ட நாள் முதலாய் இன்றளவும் ஓயவில்லை இந்த நிகழ்ச்சிப் போக்கு! அற்புதம்தானே! நாளும் …

Read More »

ஹதீஸ்களின் தராதரங்கள்

இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் தமது ஜாமிஉ என்ற ஹதீஸ் தொகுப்பில் ஹதீஸ்களை மூன்றாகத் தரம் பிரித்தார்கள். அவை: ஸஹீஹ், ஹஸன், ளயீஃப் என்பன. இமாம் திர்மிதி அவர்கள்தாம் முதன் முதலாக ஹதீஸ்களை இப்படி பிரித்துக் காட்டியவர்கள். ஒரே ஹதீஸ் பல வழிகளில் அறிவிக்கப்படும் போதும், அறிவிப்பாளர்கள் பட்டியலில் குற்றம் சுமத்தப்பட்டவர்களும், ஒற்றையாக நிற்பவர்களும் இல்லாமல் இருக்கும்போதும் தான் அந்த ஹதீஸுக்கு ‘ஹஸன்’ என்று பெயரிட்டார்கள். இமாம் திர்மிதி ஹஸன் …

Read More »

78] யாசர் அராஃபத்தின் இண்டிஃபதா (Intifada)

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 78 ஷேக் அகமது யாசினின் தலைமையில் ஹமாஸ் தனது சமூகப் பணி முகத்தைக் கிட்டத்தட்ட கழற்றிவைத்துவிட்டு, முழுநேர குண்டுவெடிப்பு இயக்கமாக உருமாறத் தொடங்கிய அதே சமயத்தில், யாசர் அராஃபத், இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் பி.எல்.ஓவுடன் பொதுமக்களும் கைகோக்கும் விதத்தில் ஒரு புதிய திட்டத்தைத் தயார் செய்துகொண்டிருந்தார். கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்தம் செய்யும் திட்டம் ஏதும் அப்போது அவருக்கு இல்லை. மாறாக கத்திக்கு பதில் …

Read More »

எங்கே அந்த மானுட தர்மம்?

உலகில் மிக அதிகமான கொலைகளைச் செய்தவர் யார் தெரியுமா?அதுவரை உலகில் நிலவி வந்த போர் தர்மங்களையெல்லாம் ஒரே ஒரு “குட்டிப் பையன்”(Little Boy) மூலம் சிதறடித்த வரலாற்று நாயகன்தான் அவர். நாகரிகங்களைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, சவக்காட்டில் சந்தோஷமாக உறங்கிய அதிசய மனிதனும் அவரே. நான் என்ற சொல்லில் மட்டுமல்ல, நாங்கள் என்ற சொல்லிலும் ஆணவத்தைப் பிரசவிக்க முடியும் என்று நிரூபித்த அவர் வேறு யாருமல்ல. வரையரையற்ற நீதி? வழங்கும் …

Read More »

77] ராணுவத்தலைவர் ஷேக் அகமது யாசின்

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 77 2004-ம் வருடம் மார்ச் மாதம் 22-ம் தேதி தொழுகைக்காக அவர் ஒரு மசூதிக்குச் சென்றுகொண்டிருந்தார். தொழுகை முடித்து மசூதியை விட்டு வெளியே வந்தபோது எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு ராக்கெட் வெடிகுண்டு, அவர் அருகே சரியாக விழுந்து வெடித்து உயிரைக் குடித்தது. அடுத்த வினாடி பாலஸ்தீன் பற்றி எரியத் தொடங்கியது. இஸ்ரேலியப் பிரதமர் ஏரியல் ஷரோனின் கதை அத்துடன் முடிந்தது என்று …

Read More »

தோல்வியடைந்த துணிகர முயற்சி!

மனிதன் உயிர் வாழ மூச்சுக்காற்று எவ்வளவு அவசியமோ அந்த அளவிற்கு அமெரிக்க பொருளாதாரத்திற்கு எண்ணை வளம் அவசியம். இது சற்று மிகைப்படுத்தப்பட்ட வாக்கியம் போல தோன்றினாலும் உண்மை நிலவரத்திற்கும் இதற்கும் தூரம் அதிகமில்லை. உலகின் மிகப்பெரிய 50 எண்ணை நிறுவனங்களின் பட்டியலில் பத்திற்கும் மேற்பட்டவை அமெரிக்க நிறுவனங்களே. இந்த நிறுவனங்களில் ஒன்றான Unocal-ஐ சில நாட்களுக்கு முன் சீனா விலை பேசியது. China National Offshore Oil Corporation (CNOOC) …

Read More »

வஹி: இறைச்செய்தியும் – அறிவியலும்-6

விண்ணடுக்குகள் -6 ஏ.கே.அப்துர் ரஹ்மான் ”ஏழு வானங்களையும் அல்லாஹ் எவ்வாறு அடுக்கடுக்காய் படைத்திருக்கிறான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? (71:15) இந்த பரிசுத்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றபடி நீங்கள் ஆகாயங்கள் யாவும் அடுக்குகளாய் படைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறீர்களா? உங்கள் ஐயத்தைத் தீர்க்க இது நாள் வரையிலும் நீங்கள் ஆகாயத்தின் பக்கம் பார்க்காதவர்களாயினும் சரி, ஆகாயம் இப்போதும் இருக்கவே செய்கிறது. உங்கள் அறைகளிலிருந்து வெளியே வந்து கொஞ்ச நேரம் (அல்லது உங்கள் வாழ்நாள் முழுவதும்) …

Read More »

தீவிர ஜனநாயகவாதிகள்

உங்கள் கைகளில் ஏதேனும் செய்திப் பத்திரிக்கை இருக்கின்றதா? சற்று அதன் பக்கங்களைப் புரட்டிப் பாருங்கள் அல்லது சர்வதேச ஊடகங்கள் உள்ளனவா?. ஏதாவது ஒரு பக்கத்திலாவது, சேனலிலாவது ஜனநாயகம், தீவிரவாதம்,இஸ்லாம் என்ற சொல்லாட்சிகளையும் குறித்ததொரு தகவல் அல்லது விவாதம் அல்லது செய்தி இல்லாமல் இருக்காது. இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு இப்பொழுது அந்த வார்த்தைகளைக் கேட்டால் எந்த அதிர்ச்சியும் வருவதில்லை. காலப் போக்கில் அவை நமது வாழ்வில் ஒரு அங்கம் என்ற …

Read More »

அவதூறுகளின் வயது 1426

இஸ்லாமியவாதம்-பழமைவாதம்-பெண்ணடிமைவாதம்-தீவிரவாதம்- என அவதூறுகள் சொல்லி “வாதம்” பிடித்து இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அலையப் போகிறார்களோ? குர்ஆன்மீதும் நபிகளார்மீதும் சுமத்தப்படும் இத்தகைய அவதூறுகளுக்கு வயது 1426. என்ன ஆச்சரியம்! எத்தனை அவதூறுகள் வீசப்பட்ட போதிலும் வீழாமல் புன்முறுவலுடன் இஸ்லாம் வளர்ந்து வருகிறது. செப்டம்பர்-11, 2001 அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் வீழ்ந்தபோதே அமெரிக்காவில் வீழ்ந்திருக்க வேண்டிய இஸ்லாம் தான் அமெரிக்காவில் இன்று வேகமாகப் பரவும் மதம்! உலகின் அதிவேகமாக வளரும் மதம் இஸ்லாம். …

Read More »

பொது? சிவில் சட்டம்

தேசத்தந்தை மஹாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவின் வாரிசுகள், உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைப்பெற்ற இம்ரானாவின் சம்பவத்தை மையமாக வைத்து மீண்டும் ஒரு பழைய பல்லவியைப் பாட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கீறல் விழுந்த ரெக்கார்டை மறுபடி Play பண்ண ஆரம்பித்திருக்கிறது தேச விரோத சங்பரிவார் அமைப்பு. எத்தனையோ முறை பதில் கொடுக்கப்பட்ட ஒரு விஷயமாக இருந்தாலும் கூட, மக்களின் மறதியைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் …

Read More »