Featured Posts

பொதுவானவை

குஜராத் திட்டமிட்ட வெறியாட்டம் – 1

குஜராத் வகுப்பு கலவரங்களுக்கு முன்னதாக நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாக கோல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி உமேஷ் சந்திர பானர்ஜி தலைமையிலான கமிஷன் விசாரித்தது. கரசேவகர்கள் ரயிலிலேயே சமையல் செய்ததால்தான் ரயில் பெட்டியில் தீப்பிடித்தது. வெளியிலிருந்து யாரும் தீ வைக்கவில்லை என்று பானர்ஜி இடைக்கால அறிக்கை அளித்தார். (தினமணி ஞாயிறு 22 ஜனவரி 2005) கோத்ரா ரயில் எரிப்பு ஆதாரங்களை பாதுகாக்க ரயில்வே தவறிவிட்டதுபானர்ஜி குழு …

Read More »

எங்கே அந்த மானுட தர்மம்?

உலகில் மிக அதிகமான கொலைகளைச் செய்தவர் யார் தெரியுமா?அதுவரை உலகில் நிலவி வந்த போர் தர்மங்களையெல்லாம் ஒரே ஒரு “குட்டிப் பையன்”(Little Boy) மூலம் சிதறடித்த வரலாற்று நாயகன்தான் அவர். நாகரிகங்களைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, சவக்காட்டில் சந்தோஷமாக உறங்கிய அதிசய மனிதனும் அவரே. நான் என்ற சொல்லில் மட்டுமல்ல, நாங்கள் என்ற சொல்லிலும் ஆணவத்தைப் பிரசவிக்க முடியும் என்று நிரூபித்த அவர் வேறு யாருமல்ல. வரையரையற்ற நீதி? வழங்கும் …

Read More »

தோல்வியடைந்த துணிகர முயற்சி!

மனிதன் உயிர் வாழ மூச்சுக்காற்று எவ்வளவு அவசியமோ அந்த அளவிற்கு அமெரிக்க பொருளாதாரத்திற்கு எண்ணை வளம் அவசியம். இது சற்று மிகைப்படுத்தப்பட்ட வாக்கியம் போல தோன்றினாலும் உண்மை நிலவரத்திற்கும் இதற்கும் தூரம் அதிகமில்லை. உலகின் மிகப்பெரிய 50 எண்ணை நிறுவனங்களின் பட்டியலில் பத்திற்கும் மேற்பட்டவை அமெரிக்க நிறுவனங்களே. இந்த நிறுவனங்களில் ஒன்றான Unocal-ஐ சில நாட்களுக்கு முன் சீனா விலை பேசியது. China National Offshore Oil Corporation (CNOOC) …

Read More »

தீவிர ஜனநாயகவாதிகள்

உங்கள் கைகளில் ஏதேனும் செய்திப் பத்திரிக்கை இருக்கின்றதா? சற்று அதன் பக்கங்களைப் புரட்டிப் பாருங்கள் அல்லது சர்வதேச ஊடகங்கள் உள்ளனவா?. ஏதாவது ஒரு பக்கத்திலாவது, சேனலிலாவது ஜனநாயகம், தீவிரவாதம்,இஸ்லாம் என்ற சொல்லாட்சிகளையும் குறித்ததொரு தகவல் அல்லது விவாதம் அல்லது செய்தி இல்லாமல் இருக்காது. இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு இப்பொழுது அந்த வார்த்தைகளைக் கேட்டால் எந்த அதிர்ச்சியும் வருவதில்லை. காலப் போக்கில் அவை நமது வாழ்வில் ஒரு அங்கம் என்ற …

Read More »

அவதூறுகளின் வயது 1426

இஸ்லாமியவாதம்-பழமைவாதம்-பெண்ணடிமைவாதம்-தீவிரவாதம்- என அவதூறுகள் சொல்லி “வாதம்” பிடித்து இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அலையப் போகிறார்களோ? குர்ஆன்மீதும் நபிகளார்மீதும் சுமத்தப்படும் இத்தகைய அவதூறுகளுக்கு வயது 1426. என்ன ஆச்சரியம்! எத்தனை அவதூறுகள் வீசப்பட்ட போதிலும் வீழாமல் புன்முறுவலுடன் இஸ்லாம் வளர்ந்து வருகிறது. செப்டம்பர்-11, 2001 அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் வீழ்ந்தபோதே அமெரிக்காவில் வீழ்ந்திருக்க வேண்டிய இஸ்லாம் தான் அமெரிக்காவில் இன்று வேகமாகப் பரவும் மதம்! உலகின் அதிவேகமாக வளரும் மதம் இஸ்லாம். …

Read More »

பொது? சிவில் சட்டம்

தேசத்தந்தை மஹாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவின் வாரிசுகள், உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைப்பெற்ற இம்ரானாவின் சம்பவத்தை மையமாக வைத்து மீண்டும் ஒரு பழைய பல்லவியைப் பாட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கீறல் விழுந்த ரெக்கார்டை மறுபடி Play பண்ண ஆரம்பித்திருக்கிறது தேச விரோத சங்பரிவார் அமைப்பு. எத்தனையோ முறை பதில் கொடுக்கப்பட்ட ஒரு விஷயமாக இருந்தாலும் கூட, மக்களின் மறதியைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் …

Read More »

லண்டன் குண்டுவெடிப்பும் பர்தாவும்

லண்டன் மாநகரில் குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு முஸ்லிம்களுக்கு எதிரான இன வெறித் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதில் குறிப்பாக ஹிஜாப் (பர்தா) அணியும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இச்சூழலில் லண்டனில் உள்ள முஸ்லிம் கல்லூரியின் முதல்வரும், பிரிட்டன் பள்ளிவாசல் மற்றும் இமாம்கள் குழுமத்தின் தலைவருமான ஷேக் ஜக்கி பதாவி அவர்கள், “ஹிஜாப் அணிவதால் தாங்கள் தாக்குதலுக்கு இலக்காகுவோம் என்று அஞ்சும் பெண்கள் ஹிஜாப் அணிவதைத் தவிர்த்துக் கொள்ளலாம்” என்று கூறியிருக்கிறார். குண்டு …

Read More »

உள்ளத்தை உலுக்கிய கேள்வி…

(பணம் சம்பாதிப்பதை மட்டுமே தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு, வாழ்வின் மென்மையான உணர்வுகளைக் கருகவிட்டுவிட்டு தன் கடைசி நாட்களில் எல்லாமிருந்தும் ஒன்றுமில்லாதவனாக தனிமைப்படுத்தப்படும் அ(ட)ப்பாவிகளுக்கு நினைவுறுத்தலாக…) அது ஒரு கற்பனைக்கதை தான் என்றாலும் கருத்தாழம் மிக்கதொரு கதை. சிட்டுக்குருவி ஒன்று குளிர்காலத்தில் கதகதப்பாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டது. சின்னச்சின்ன குச்சிகளை அதற்கென இளவேனில் காலம் தொட்டே சேகரிக்கத் துவங்கியது. அந்தோ பரிதாபம்! குளிர் காலம் வருமுன்பே குச்சி சேகரிக்கும் …

Read More »

வாழைப்பழ விவகாரம்!

வெகு காலமாக நடந்து கொண்டிருந்த ஒரு வினோத வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. வெகுகாலமாக என்றால் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த காலத்திலிருந்து. உலகின் பலம் பொருந்திய ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் சம்பந்தப்பட்ட இந்த வழக்கின் மூல காரணம் வாழைப்பழம்! ஆம்.. வாழைப்பழம்தான். இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பிறகு, ஐரோப்பிய நாடுகளான ஃபிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் ஆகியவற்றிடம் காலனியாக இருந்த பல சிறிய நாடுகள் சுதந்திரமடைந்தன. இருந்தாலும் தமது முன்னாள் காலனி நாடுகளின் …

Read More »

காவல் ஆய்வாளரின் கொலைவெறித் தாக்குதல்

முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் போராடத் தெரியாது என்ற காலம் போய், போராட்டமும், சட்டமும் பேசுவது பாசிசவாதிகளுக்கு எரிச்சலை தந்துள்ளது. முஸ்லிம்களை ஒழிக்க காவி சிந்தனையாளர்கள் போட்ட திட்டத்தில் முக்கியமானது அனைத்து துறையிலும் பாசிச காவி சிந்தனையாளர்களை புகுத்துவது. ஆகவே ஆட்சி மாறினாலும் அடாவடித்தனம் மாறுவதில்லை. அப்படித்தான் பின்வரும் நிகழ்ச்சி நடந்துள்ளது. நெல்லை மாவட்டம் தாழையூத்து தமுமுக தலைவர் எம். அப்துல் பஷீர். இவரைக் களங்கப்படுத்தும் விதமாக sms அனுப்பிய ஏ. …

Read More »