எம்.ஐ அன்வர் (ஸலபி) முப்பது ஆண்டுகளாக சூடானின் அதிபராக இருந்து வந்த உமர் பஷீரின் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் சற்றும் எதிர்பாராத திருப்பமாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருந்து வந்த அவல் இப்ன் அவ்ப் கடந்த 11 ஆம் திகதி இராணுவத்தின் உதவியுடன் உமர் பஷீரின் ஆட்சியை கவிழ்த்தார். உமர் பஷீர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் பதவியிலிருந்து அவர் …
Read More »தலையங்கம்
உணர்வுகளை மதிக்கக் கற்றுக் கொள்வோம்
இஸ்லாம் கொள்கையில் உறுதியை வலியுறுத்துகின்றது. ஒரு முஸ்லிம் இஸ்லாமிய கொள்கையில் மலை போன்ற உறுதியுடன் இருக்க வேண்டும். அதில் தளர்வோ தள்ளாட்டமோ இருக்கக் கூடாது. இதே வேளை, இஸ்லாம் பிற சமய, சமூக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவற்றை மதித்து நடக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றது. இஸ்லாம் சிலை வணக்கத்தையும், பல தெய்வ வழிபாட்டையும் கடுமையாக எதிர்க்கின்றது. அதனை முட்டாள்தனமாகவும் பார்க்கின்றது. இன்னும் அதை நரகத்திற்கு இட்டுச் செல்லும் …
Read More »இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே!
ஐம்பது நாள் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த அரசியல் குழப்பங்களால் இலங்கையின் நன்மதிப்புக்கு சரிவு ஏற்பட்டது. நாணயத்தின் மதிப்பிலும் சரிவு ஏற்பட்டது. இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் பாரிய வீழ்ச்சி…. என பல சரிவுகள் ஏற்பட்டன. அதனை சரி செய்ய வேண்டிய நிலையில் நாடு உள்ளது. நாட்டில் ஏற்பட்ட இந்த குழப்பநிலை முற்று முழுதாக முடிவுக்கு வந்துவிடவில்லை. விவாகரத்தை வேண்டி நிற்கும் தம்பதிகள் போல ஜனாதிபதியும் பிரதமரும் செயற்பட்டால் நாட்டைக் …
Read More »இலங்கை அரசியல் குழப்பமும் உணர வேண்டிய உண்மைகளும்
ஆசிரியர் பக்கம் – டிசம்பர் 2018 S.H.M. இஸ்மாயில் ஸலபி உண்மை உதயம் மாதஇதழ் இலங்கை அரசியல் குழப்பமும் உணர வேண்டிய உண்மைகளும் இலங்கையில் அண்மையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது. இக்கட்டுரை வெளிவரும் போது இந்தப் பிரச்சினை ஒரு தீர்வுக்கு வந்திருக்கலாம் அல்லது இன்னொரு கட்டத்திற்கு மாறியிருக்கலாம். ஆனால், சில உண்மைகளை இவ்வாக்கத்தின் மூலம் உணர்த்த நாடுகின்றோம். பிரதமர் நீக்கமும் …
Read More »எதிர்கால இருப்புக்கு தீர்வு என்ன?
இலங்கை முஸ்லிம்கள் வியாபார சமூகமாகப் பார்க்கப்படுகின்றனர் எமது பொருளாதாரத்தினதும் இருப்பினதும் முதுகெலும்பாக வியாபாரம் பார்க்கப்படுகின்றது. அந்த முதுகெலும்பை முறித்துவிட்டால் முதுகெலும்பு முறிந்த சமூகமாக முஸ்லிம் சமூகம் மாறிவிடும். இது ஆபத்தான நிலையாகும். இனவாத சிந்தனைகள் கிளரப்படுகின்றது. ஒரு சமூக சு+ழலில் மற்ற சமூகங்களில் தங்கி வாழும் பொருளாதார அடித்தளத்தில் எமது சமூகத்தின் அத்திரவாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது. வர்த்தகம் என்பது விற்றல்-வாங்குதல் என்ற இரு பக்கங்களைக் கொண்டது. வாங்குவதை நிறுத்திவிட்டால் அல்லது …
Read More »பாவாத மலையும்… இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகமும்… – 01
இலங்கை சப்ரகமுவ மத்திய மாகாணங்களுக் கிடையே கடல் மட்டத்தில் இருந்து 2243 மீட்டர் (7359 அடி) உயரத்தில் கூம்பு வடிவிலாக இந்த மலை அமைந்துள்ளது. இந்த மலை அனைத்து சமய மக்களாலும் புனிதத்துவத்துடன் நோக்கப்படுகின்றது. இந்த மலை உச்சியில் ஒரு பாதச் சுவடு உள்ளது. மலை உச்சியில் 1.8 மீட்டர் அளவான பாறையில் இப்பாதம் பதிந்துள்ளது. இந்தப் பாதச் சுவடு புத்தருடையது என பௌத்தர்கள் நம்பி அதை வழிபட்டு வருகின்றனர். …
Read More »இளமையும் இஸ்லாமும்
(ஆகஸ்ட் – 2018) ஆகஸ்ட் 12 ஆம் திகதி சர்வதேச இளைஞர் தினமாகும். இளமையை வீணாக விரயமாக்கிக் கொண்டிருக்கும் இளைய சமூகத்தை விழிப்படையச் செய்து அவர்களை வினைத்திறன் மிக்கவர்களாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே இத்தகைய தினங்கள் கொண்டாடப்படுகின்றன. இளமையும் இஸ்லாமும்: மனிதனின் வாழ்க்கைக் காலத்தையும் அவனது இளமைக் காலத்தையும் அல் குர்ஆன் இப்படிச் சித்தரித்துக் காட்டுகின்றது. ‘அவன்தான் மண்ணிலிருந்தும் பின்னர்; இந்திரியத் துளியிலிருந்தும் பின்னர் (கருவறைச் சுவரில்) ஒட்டிக் கொள்ளக் …
Read More »தாங்கிப் பிடிக்க ஆள் இருந்தால் தூங்கித் தூங்கி விழுமாம் பிள்ளை
இலங்கை ஒரு சின்னத் தீவாகும். இந்த அழகிய சின்னஞ் சிறு தீவை பயங்கரவாதமும், இனவாதமும் அழித்து வந்தது போதாது என்று இன்று அதனுடன் போதை வஸ்தும் கைகோர்த்துள்ளது. இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கை, சுற்றுலாத் துறையின் வளர்ச்சி என்பவற்றுடன் இலங்கை சர்வதேச போதைக் கடத்தல் மாபியாக்களின் மத்திய தளமாக மாறி வருகின்றதோ என்று ஐயப்படும் நிலை உருவாகியுள்ளது. 1981 மே 26 இல் 70 கிராம் ஹெரோயின் இலங்கையில் கைப்பற்றப்பட்டது. …
Read More »இஸ்லாமும் சுற்றுச் சூழல் பாதுகாப்பும் [World Environment Day]
ஜூன் மாதம் 05 ஆம் திகதி [World Environment Day] -சர்வதேச சுற்றுச் சூழல் பாதுகாப்பு- தினமாகும். மனித வாழ்வு இயந்திரமயமான பின்னர் சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது தினம் தினம் கேள்விக் குறியாகிக் கொண்டே செல்கின்றது. குறிப்பாக 18 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் இயந்திரங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றினூடாக எமது சுற்றுப் புறச் சூழல் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகின்றது. நாம் வாழும் எமது பூமியின் இயற்கைத் தன்மையைப் பாதுகாத்து எதிர்கால சந்ததிகளுக்கு …
Read More »கூரையை எரித்து குளிர் காய முடியாது
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – ஆசிரியர் பக்கம் – May 2018 ‘வரம்பு மீறிச் செல்பவர்கள் அழிந்து போவார்கள்’ என நபி(ச) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். (முஸ்லிம்) எதிலும் எல்லை மீறிச் செல்லக் கூடாது என்பது இஸ்லாத்தின் போதனையாகும். முஸ்லிம் உம்மத்தை அல் குர்ஆன் நடுநிலைச் சமுதாயம் என்று அழைக்கின்றது. அல்லாஹ்வின் தூதர் சத்திய வழிக்கு எமக்கு எப்படி சாட்சியாளர்களாகத் …
Read More »