1240. ”இறை நம்பிக்கை கொண்டோரில் (அறப்போரில் கலந்து கொள்ளாமல்) தங்கி விடுவோரும், இறைவழியில் தம் உடைமைகளாலும் உயிர்களாலும் அறப்போர் புரிபவர்களும் சம அந்தஸ்து கொண்டவர்களாக முடியாது…” என்னும் வசனம் அருளப்பட்டபோது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்களை அழைத்தார்கள். அவர் அகலமான எலும்பு ஒன்றைக் கொண்டு வந்து, அந்த வசனத்தை எழுதினார். (அருகில் இருந்த கண்பார்வையற்ற) அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) தம் கண்பார்வையில்லாத …
Read More »நூல்கள்
அறப்போருக்குச் செல்பவரின் குடும்பத்தைப் பராமரித்தல்.
1239. அறப்போரில் செல்பவருக்கு உதவியவர் புனிதப்போரில் பங்கு கொண்டவர் போன்றவராவார். அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்ற பின் அவரின் வீட்டாரின் நலத்தைப் பாதுகாக்கிறவரும் புனிதப் போரில் பங்கு கொண்டவராவார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. புஹாரி : 2843 ஸைத் இப்னு காலித் (ரலி).
Read More »முஸ்லிம்களின் நம்பிக்கை என்ன?
நித்திய ஜீவனும், இணை-துணை அற்றவனுமான ஏக இறைவன் ஒருவன் மீதே முஸ்லிம்கள் நம்பிக்கைக் கொள்கின்றனர். மேலும், அவனால் படைக்கப்பட்ட வானவர்கள், மனித குலத்துக்கு அவனால் அனுப்பி வைக்கப்பட்ட தூதர்கள் ஆகியோரையும் நம்புகின்றார்கள். அது மட்டுமல்ல, இவ்வுலக அழிவுக்குப் பின்னால் ஏற்பட இருக்கும் மறுமைநாளின் மீதும் அவர்கள் பூரண நம்பிக்கைக் கொண்டிருக்கின்றார்கள். மேலும் இந்த உலகில் தாம் புரிந்த செயல்களுக்கு அப்போது கணக்கு வாங்கப்படும் என்பதிலும் அசைக்க முடியாத நம்பிக்கையை அவர்கள் …
Read More »கொன்றவர் கொல்லப்பட்டவர் இருவரும் சுவனத்தில்…
1238. அல்லாஹ் இரண்டு மனிதர்களைப் பார்த்துச் சிரிக்கிறான். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரைக் கொன்றுவிடுகிறார். இருவருமே சொர்க்கத்தில் நுழைகிறார்கள். இவர் இறைவழியில் போரிட்டுக் கொல்லப்படுகிறார். பிறகு (அவரைக்) கொன்றவர் பாவமன்னிப்புக் கோர, அதை ஏற்று அவரை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். பிறகு அவரும் அறப்போரில் (கொல்லப்பட்டு) உயிர்த் தியாகியாகி விடுகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 2826 அபூஹுரைரா (ரலி).
Read More »மக்களில் சிறந்தவர் யார்?
1237. ”இறைத்தூதர் அவர்களே! மக்களில் சிறந்தவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘இறைவழியில் தன் உயிராலும் தன் பொருளாலும் போராடுபவரே (மக்களில் சிறந்தவர்)” என்று பதிலளித்தார்கள். மக்கள், ‘பிறகு யார்?’ என்று கேட்டார்கள். ‘மலைக் கணவாய்களில் ஒன்றில் வசித்துக் கொண்டு, அல்லாஹ்வை அஞ்சிய வண்ணம் தன்னால் மக்களுக்குத் தீங்கு நேராமல் தவிர்த்து வருபவரே சிறந்தவர்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். புஹாரி : 2786 அபூஸயீத் …
Read More »அல்லாஹ்வின் பாதையில் சிறிது நேரம் போரிடுவதின் சிறப்பு.
1234. இறைவழியில் காலை நேரத்தில் சிறிது நேரம் அல்லது ஒரு மாலை நேரத்தில் சிறிது நேரம் போர் புரியச் செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்ததாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 2792 அனஸ் இப்னு மாலிக் (ரலி). 1235. இறைவழியில் காலையிலும் மாலையிலும் சிறிதுநேரம் போர் புரியச் செல்வது உலகத்தை விடவும் அதிலுள்ள பொருட்களை விடவும் சிறந்ததாகும் என நபி (ஸல்) அவர்கள் …
Read More »அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்தலின் சிறப்பு.
1232. அல்லாஹ்விடம் நற்பலன் பெறுபவராக இறந்து போகிற எந்த (நல்ல) அடியாரும் இந்த உலகமும் அதிலுள்ளவை அனைத்தும் அவருக்குக் கிடைக்கும் என்றிருந்தாலும் கூட உலகிற்குத் திரும்பி வர விரும்ப மாட்டார்; இறைவழியில் உயிர்த்தியாகம் புரிந்தவரைத் தவிர ஏனெனில், உயிர்த்தியாகத்தின் சிறப்பை (மறுமையில்) அவர் காண்கிறார். எனவே, இந்த உலகிற்கு மீண்டும் வந்து மறுபடியும் ஒருமுறை (இறைவழியில் போரிட்டுக்) கொல்லப்படுவதை அவர் விரும்புவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி …
Read More »அறப்போருக்குச் செல்வதின் சிறப்பு.
1229. போரிடுவதற்குப் புறப்பட்டுச் சென்றவரைக் கூலியைப் பெற்றவராகவோ, போர் ஆதாயங்களைப் பெற்றவராகவோ திரும்பக் கொண்டு சேர்க்கும் பொறுப்பை அல்லது அவரைச் சொர்க்கத்தில் சேர்க்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுள்ளான். என்னுடைய சமுதாயத்திற்கு நான் சிரமத்தைக் கொடுத்து விடுவேனோ என்று (அச்சம்) மட்டும் இல்லையானால் (நான்) அனுப்பும் எந்த இராணுவத்திற்குப் பின்னரும் (நானும் போகாமல்) உட்கார்ந்திருக்கமாட்டேன். நிச்சயமாக நான் இறைவழியில் கொல்லப்பட்டு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு மீண்டும் கொல்லப்பட்டு, மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு மீண்டும் கொல்லப்படுவதையே …
Read More »முஸ்லிம்கள் யார்?
இனம், வர்ணம், நாடு, கலாச்சாரம் ஆகிய அனைத்தையும் கடந்து, தென் பிலிப்பைனிலிருந்து நைஜிரியா வரை உலகின் ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரை பல்வேறு பாகங்களிலும் ஏறக்குறைய ஒரு பில்லியன் மக்களை அவர் தம் நம்பிக்கை ஒன்றே இணைத்து வைத்திருக்கின்றது. அந்த நம்பிக்கையே இஸ்லாம்!
Read More »குதிரைகளின் நெற்றியில்….
1226. (இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள் வரைக்கும் நன்மை உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 2849 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி). 1227. (இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் மறுமைநாள் வரை நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது. அந்த நன்மை யாதெனில் அந்தக் குதிரையில் ஏறி அறப்போரிடுதலில் கிடைக்கும் நன்மையும், போரில் கிடைக்கும் செல்வமும் ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library