Featured Posts

உண்மை உதயம் மாத இதழ்

பெருநாள் தொழுமிடம் |பெருநாள் தொழுகை – 2 [பிக்ஹுல் இஸ்லாம்-046]

பெருநாள் தொழுகையை மஸ்ஜிதில் நடத்துவதா அல்லது திறந்த வெளியில் நடத்துவதா என்ற சர்ச்சை தற்போது பரவலாக உள்ளது. இலங்கையில் பரவலாக திறந்த வெளியில் பெருநாள் தொழும் நடைமுறை அதிகரித்தும் வருகின்றது. பள்ளி சிறந்த இடம்: பொதுவான இடங்களை விட மஸ்ஜித்கள் சிறப்பான, புனிதமான இடம். எனவே, மஸ்ஜிதில்தான் பெருநாள் தொழுகை தொழப்பட வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். மஸ்ஜித்கள் ‘புயூதுல்லாஹ்’ இறை இல்லங்கள் என அழைக்கப்படுகின்றன. பொதுவான இடத்தை விட …

Read More »

அன்னை மரியமும்; அற்புதக் குழந்தை ஈஸாவும்! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-40]

இம்ரான் என்றொருவர் இருந்தார். அவரது மனைவி கருவுற்றார். அவர் தனக்கு ஆண் குழந்தை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். தனது வயிற்றில் இருக்கும் குழந்தையை பலஸ்த்தீன் பள்ளியில் பணிபுரிய அல்லாஹ்விடம் நேர்ச்சையும் செய்து கொண்டார். ஆனால் அவருக்கு பெண் குழந்தையே கிடைத்தது. அந்தக் குழந்தைக்கு மர்யம் எனப் பெயர் சூட்டினார். அந்தக் குழந்தையையும் அதற்குக் கிடைக்கும் குழந்தையையும் அல்லாஹ் ஷைத்தானிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் பிரார்த்தித்தார். மர்யம் வளர்ந்தாள். பக்குவமும் …

Read More »

ஒருவனே தேவன் என்று கூறுங்கள்! | இறை மொழியும்… தூதர் வழியும்… – 04

கடவுள் பற்றி மக்கள் மத்தியில் பல கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். மற்றும் சிலர் கோடான கோடி கடவுள்கள் இருப்பதாக நம்புகின்றனர். வேறு சிலர் மனிதர்களில் சிலரைக் கடவுளின் அவதாரம் என்கின்றனர். இன்னும் சிலர் மனிதர்களில் சிலரையே கண் கண்ட கடவுளாக வழிப்பட்டு வருகின்றனர். இஸ்லாம், இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்று கூறுவதுடன் பல தெய்வ நம்பிக்கையைப் பலமாக எதிர்க்கின்றது. அத்துடன், மனிதன் கடவுளாகவும் முடியாது. கடவுள் …

Read More »

நோவினையை உணரும் தோல் | குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-40 [சூறா அந்நிஸா–17]

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِنَا سَوْفَ نُصْلِيْهِمْ نَارًا ؕ كُلَّمَا نَضِجَتْ جُلُوْدُهُمْ بَدَّلْنٰهُمْ جُلُوْدًا غَيْرَهَا لِيَذُوْقُوا الْعَذَابَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَزِيْزًا حَكِيْمًا‏ “நிச்சயமாக எவர்கள் எமது வசனங்களை நிராகரித்தார்களோ அவர்களை நாம் நரகத்தில் நுழைவிப்போம். வேதனையை அவர்கள் சுவைப்பதற்காக அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் நாம் அவர்களுக்கு வேறு தோல்களை மாற்றுவோம். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கின்றான்.” (4:56) …

Read More »

மன்னிப்பு இல்லாத பாவம் | குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-39 [சூறா அந்நிஸா–16]

اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ ۚ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَـرٰۤى اِثْمًا عَظِيْمًا “நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்கவேமாட்டான். அது தவிர ஏனையவற்றை, தான் நாடுவோருக்கு அவன் மன்னிப்பான். எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ அவன் நிச்சயமாகப் பெரும் பாவத்தையே இட்டுக் கட்டியவனாவான்” (4:48) அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை …

Read More »

குடும்பப் பிரச்சினைகளுக்கு காட்டும் தீர்வு | குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-38 [சூறா அந்நிஸா–15]

“பெண்களை நிர்வகிக்க ஆண்கள் தகுதி யுடையோராவர். அவர்களில் சிலரை மற்றும் சிலரைவிட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், (ஆண்களாகிய) அவர்கள் தமது செல்வங்களிலிருந்து செலவழிப்பதாலும் ஆகும். எனவே, நல்லொழுக்கமுள்ள பெண்கள் கட்டுப்பட்டு நடப்போராகவும், (கணவனில்லாது) மறைவாக இருக்கும் சமயத்தில் அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு தம்மைப் பாதுகாத்துக் கொள்வோராகவும் இருப்பர். எவர்கள் கணவருக்கு மாறு செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ, அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். (திருந்தாவிட்டால்) படுக்கைகளில் அவர்களை வெறுத்து விடுங்கள். (அதிலும் திருந்தாவிட்டால்) …

Read More »

போதையுடன் நீங்கள் தொழுகையை நெருங்காதீர்கள்; பெரும் பாவமும் சின்னப் பாவமும் | குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-37 [சூறா அந்நிஸா–14]

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقْرَبُوا الصَّلٰوةَ وَاَنْـتُمْ سُكَارٰى حَتّٰى تَعْلَمُوْا مَا تَقُوْلُوْنَ “நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் கூறுவது என்னவென்று அறியாதவாறு நீங்கள் போதையுடையோர்களாக இருக்கும் நிலையில் தொழுகையை நெருங்காதீர்கள்” (4:43) இந்த வசனத்தில் போதையுடன் இருக்கும் போது தொழுகையை நெருங்கக் கூடாது என்று கூறப்படுகின்றது. இதில் இருந்து தொழாத நேரத்தில் போதையுடன் இருக்கலாம் என தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. இஸ்லாம் போதையைக் கட்டம் கட்டமாகத் …

Read More »

உயிருடன் உயர்த்தப்பட்ட ஈஸா நபி [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-39]

உயிருடன் உயர்த்தப்பட்ட ஈஸா நபி ஈஸா(அலை) அவர்கள் யூதர்களுக்கு மத்தியில் சத்திய சோதனை செய்தார். அவர் யூத மத குருக்களின் துரோகச் செயல்களைத் தோலுரித்தார். மதத்தின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களுக்கு எதிராக சாட்டையாகச் சுழன்றார். யூத மத குருக்கள், மதத்தின் பெயரில் செய்யும் சுரண்டல்கள் குறித்தும், மதத்தில் அவர்கள் செய்த இடைச் செருகல்கள் குறித்தும் அவர் போதனை செய்தார். யூதர்கள் சதி செய்வதில் வல்லவர்கள். துரோகம் செய்வது அவர்களின் கூடப் …

Read More »

பெருநாள் தொழுகை | [பிக்ஹுல் இஸ்லாம்-045]

“ஈத்” என்றால் பெருநாள் எனப் பொருள்படும். முஸ்லிம்களுக்கு ‘ஈதுல் பித்ர்” – ஈகைத் திருநாள் எனும் நோன்புப் பெருநாள், “ஈதுல் அழ்ஹா” – தியாகத் திருநாள் எனும் ஹஜ்ஜூப் பெருநாள் என இரண்டு பெருநாட்கள் உள்ளன. இந்தப் பெருநாள் தினங்களில் விசேடமாகத் தொழப்படும் தொழுகைக்கே ‘ஸலாதுல் ஈத்” – பெருநாள் தொழுகை என்று கூறப்படும். ‘ஸலாதுல் ஈதைன்” என்றால் இரு பெருநாள் தொழுகை என்று அர்த்தப்படும். பெருநாள்: மனிதனின் மன …

Read More »

பிப்ரவரி 14 – காதலர் தினம்

சர்வதேச தினங்களில் அதிகமான மக்களால் கொண்டாடப்படும் தினமாக காதலர் தினம் அமைந்துள்ளது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சர்வதேச தினங்கள் தீர்மானிக்கப்பட்டன. “பெற்றோர் தினம்”, பெற்றோரின் பெருமையை உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால், சில பெற்றோர்கள் அந்தத் தினத்தில் மட்டும் பெருமைப்படுத்தப்படுகின்றனர். ஆசிரியர் தினம் ஆசிரியர்களை கௌரவிக்க உருவாக்கப்பட்டது. பெரும்பாலும் மாணவர்களுக்கு மத்தியில் ஆசிரிய ஆசிரியைகள் தமது ஆளுமையையும் அந்தஸ்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும் தினமாக அத்தினம் மாற்றப்பட்டு வருகின்றது. எப்படியிருந்தாலும் …

Read More »