Featured Posts
Home » 2007 (page 2)

Yearly Archives: 2007

டினோஸாரும் இஸ்லாமியத் தீவிரவாதமும்!

கடந்த பத்து வருடங்களில் உலகின் பலபாகங்களிலும் கையாளப்பட்ட சொல்லாடல் ஒன்று உண்டென்றால் அது “தீவிரவாதம்” என்பதே ஆகும். தீவிரவாதம் என்றதும் உங்கள்முன் தாடி,தலைப்பாகையுடன் ஓர் உருவம் உங்கள் நினைவில் வந்து தொலைத்தால், தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தம் (War Against Terrorism) என்ற பெயரில், இஸ்லாத்தைத் தீவிரவாதத்துடன் தொடர்பு படுத்தி, முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்க பாசிச/யூத/அமெரிக்க/ பார்ப்பனீய ஊடகங்கள் பட்ட கூட்டுக் கஷ்டங்கள் வீணாகி விடவில்லை என்று அர்த்தம். உலகின் பல …

Read More »

மோடியின் வெற்றியும் அதில் மகிழ்பவர்களும்

குஜராத் தேர்தலில் மீண்டும் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பற்றி பலரும் பதிவிட்டுள்ளனர். அவற்றில் சிறந்தப் பதிவாக கருதப்படுகிற நண்பன் ஷாஜியின் பதிவுக்கும், பனிமலரின் பதிவுக்கும் நானளித்த பின்னூட்டம் இது: ஜனநாயகம் என்பது பணபலமும் படைபலமும் தான், சாமானியனுக்கு அதில் பங்கில்லையோ என்று எண்ண வைத்தது மோடியின் தேர்தல் வெற்றி. எல்லோருமே எதிர்பார்த்த ‘இந்த வெற்றி’யில் புளகாகிதமடைந்து பதிவிடுபவர்களும் நாம் ‘எதிர்பார்த்தவர்கள்’ தான்.100க்கு 41 பேர் (விருப்புவெறுப்பு, பயம், விரக்தி, அலட்சியம் …

Read More »

தனித்தமிழ்நாடு

வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது என்று சொல்லி 1960களில் திராவிட இயக்கத் தலைவர்கள் தனித்தமிழ்நாடு கோரிக்கை எழுப்பியதால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள். சுதந்திரக் குடியரசு இந்தியாவில் தனிமாநிலக் கோரிக்கை வைப்பது கிட்டத்தட்ட தேசத்துரோகமாகவே கருதப்பட்டது. பின்னர் காங்கிரஸும் – திமுகவும் அரசியல் உடன்பாடு கண்டதால், கூட்டனிக் கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது என்ற கூட்டனி தர்மப்படி தனித்தமிழ்நாடு கோரிக்கை கைவிடப்பட்டது.அதன்பிறகு அவ்வப்போது மாநில பிரிவினை கோரிக்கை எழும்போது எல்லாம் மத்திய …

Read More »

மரணசாசனம் அத்தியாவசியமில்லை.

1057. நான் அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரலி) அவர்களிடம், ‘நபி (ஸல்) அவர்கள் வஸிய்யத் – மரண சாசனம் செய்தார்களா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘இல்லை” என்று பதிலளித்தார்கள். நான், ‘அப்படியென்றால் மக்களின் மீது வஸிய்யத் – மரண சாசனம் செய்வது எப்படிக் கடமையாக்கப்பட்டது? அல்லது மரண சாசனம் செய்யவேண்டுமென்று மக்களுக்கு எப்படிக் கட்டளையிடப்பட்டது?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘அல்லாஹ்வின் வேதத்தின்படி செயல்படுமாறு நபி (ஸல்) அவர்கள் …

Read More »

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? – 8.

முன்னுரை, பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4 பாகம் 5, பாகம் 6, பாகம் 7 உமர்: நாங்க எந்தப் பெரியவங்களையும் அணுகவில்லை; எல்லாம் இளைஞர்கள் தான். ஆனா எங்க ஊர் பெரியவங்களும் மதம் மாறியிருக்காங்க.< ?xml:namespace prefix = o /> ஆசிரியர்: இங்கு மொத்தம் எத்தனை குடும்பங்கள் மதம் மாறியிருக்கு? உமர்: மொத்தம் 300 குடும்பத்தில் 210 குடும்பங்கள் மதம் மாறியிருக்காங்க. ஆசிரியர்: …

Read More »

வக்ஃப் செய்வது பற்றி..

1056. (என் தந்தை) உமர் இப்னு கத்தாப் (ரலி) கையில் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றிருந்தார்கள். அதன் விஷயத்தில் ஆலோசனை பெறுவதற்காக நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! நான் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றுள்ளேன். அதைவிடச் சிறந்த ஒரு செல்வத்தை (இதுவரை) நான் அடைந்ததேயில்லை. எனவே, அதை நான் என்ன செய்யவேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘நீங்கள் விரும்பினால் அந்த …

Read More »

இறப்பதற்கா இவ்வுலகில் பிறந்தோம்?

பிரபஞ்சத்தில் மிதந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களில் சூரியனும் ஒரு நட்சத்திரம். சூரியனைச் சுற்றி சிறியதும் பெரியதுமாக ஒன்பது கோள்கள். (சென்ற வருடம் புளூட்டோவை சூரியக் குடும்பத்திலிருந்து ஊர்விலக்கம் செய்து விட்டார்கள்!) இந்த எட்டு அல்லது ஒன்பது கோள்களில் பூமியும் ஒரு கோள் . இந்த பூமியில் சுமார் 72% கடல்களால் சூழப்பட்டு , மீதமுள்ள 28% நிலப்பரப்பை நாடுகளாகப் பங்கிட்டுக் கொண்டுள்ளோம் . இவ்வாறு பிரிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான நமது …

Read More »

வணக்கம்! வணக்கம்!! வணக்கம்!!!

வணக்கம்!- சன் டிவியின் காமெடி நிகழ்ச்சியில் சிட்டிபாபு, அர்ச்சனா சொல்லும் வணக்கம் ஒருவகை. எதிரில் இருப்பவரின் கண்களைப் பார்த்து, கம்பீரமாகக் கமலாஹாசன் சொல்லும் வணக்கம் இன்னொரு வகை.தலைக்கு மேல் கைகளைக் கூப்பியும் நெஞ்சில் கைகைகளைக் குவித்தும் சொல்லப்படும் வணக்கம் மற்றொரு வகை. அனேகமாக இலவசமாகக் கிடைப்பனவற்றில் ‘வணக்கம் ‘ என்ற வாழ்த்தும் ஒன்று. தமிழில் வணக்கம் என்ற பதம் பிறரை வாழ்த்தப் பயன்படுத்தப் படுகிறது. சாதாரணமாக மதிப்புக்குரியவர்களை ‘வணக்கம்’ என்று …

Read More »

மரணித்தவருக்காக செய்யும் தர்மங்கள் பலனளிப்பது பற்றி..

1055. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘என்னுடைய தாய் திடீரென்று மரணித்துவிட்டார். அவர் அப்போது பேச முடிந்திருந்தால் நல்ல (தர்ம) காரியம் செய்திருப்பார். எனவே, அவருக்காக நான் தர்மம் செய்தால் அதற்கான நன்மை அவரைச் சேருமா?’ என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஆம்” என்றனர். புஹாரி :1388 ஆயிஷா (ரலி).

Read More »

நல்லடியார் புராணம் (அறிமுகம்)

கடந்த மூன்று வருடங்களாகத் தமிழ்மணத்தின் வாசகனாகவும் பதிவனாகவும் இருந்த என்னை, இந்த வாரம் நட்சத்திரப் பதிவராகத் தமிழ்மணத்தில் எழுதப் பணித்துள்ளார்கள். தமிழ் இணைய தளங்களில் அள்ளித் தெளிக்கப்பட்ட இஸ்லாம் பற்றிய அவதூறுகளுக்கு எனக்குத் தெரிந்த, நான் மெய்யென நம்பியவைகளை ஆதாரங்களுடன் பதிலாக எழுதிய திருப்தியைவிட அவதூறு பரப்பியவர்களால் இஸ்லாத்தை மேலும் ஆய்வு செய்வதற்கும் இன்னும் நன்கு அறிந்து கொள்வதற்கும் வாய்ப்பைப் பெற்றதில் அதிக மகிழ்ச்சி ஏற்பட்டது!. தமிழ்மணம் மூலம் ஓரளவு …

Read More »